N/S Media Newes

N/S Media Newes media newes

31/01/2024
*🚨முக்கிய அறிவிப்பு🚨*N/MEDIANEWS2024.01.01அம்பாரை இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் ( இங்கினியாகல நீர்த்தே...
01/01/2024

*🚨முக்கிய அறிவிப்பு🚨*
N/MEDIANEWS
2024.01.01

அம்பாரை இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் ( இங்கினியாகல நீர்த்தேக்கம் ) மொனராகலை, பதுளை, அம்பாரை மாவட்டங்களில் பெய்து வரும் அடைமழை காரணமாக அதன் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் அந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை இன்று மாலை திறந்து மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளரும், அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபரும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனால் கல்லோயா வலது கரை ( பாதாகொடை ஊடாக தமணை, மலையடிக்குளம், எட்டாம் கட்டை சந்தி மற்றும் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள கால்வாய்கள், வயல்கள் ஊடாக வரும் வெள்ள நீர் சம்புக்களப்பு, பட்டியடிப்பிட்டி , ஆறுகளை நிறைத்து அக்கரைப்பற்று முகத்துவாரங்களினூடாக கடலை நோக்கி செல்லும்.

மற்றது கல்லோயா இடது கரை ( இது சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஆறுகள் குளங்களை நிரப்பி களியோடை ஆறு, மற்றும் மாவடிப்பள்ளி ஆறு, போன்ற பகுதிகளூடாக சென்று கடலை சென்றடையும்.

எனவே இப்பகுதிகளிலுள்ள பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், இப்பகுதிகளிலுள்ள கால்நடைகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறும், இப்பிரதேசங்களிலுள்ள ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்குமாறும், பொது மக்கள் எச்சரிக்கப்படுவதுடன், இந்த வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்படும் முதலை கள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வரும் அபாயமுள்ளதால் அவைகளிலுமிருந்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*N/MEDIANEWS2024.01.01இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்கள...
01/01/2024

*N/MEDIANEWS
2024.01.01

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

இதேவேளை, 329 ரூபாயக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

434 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

இதுவரையில் நாடுகளின் வசமான உலக கிண்ணங்கள்..
19/12/2022

இதுவரையில் நாடுகளின் வசமான உலக கிண்ணங்கள்..

Address

Ampara

Website

Alerts

Be the first to know and let us send you an email when N/S Media Newes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category