Tamil Short Flims

Tamil Short Flims Short Flims in Tamil language will be posted here.

Photography &Cinematography Studio based in Tirunelveli,we are growing as an event management company too.We are doing Photo-shoots at South India.We rental cameras &equipment within Tamil Nadu.Contact me for further details 9543161201.

Contact the mentioned number.
28/03/2020

Contact the mentioned number.

29/01/2020

*இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.*
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
*இது ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை.
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
மனமுவந்து வாழ்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
*இது நளாயினி கதை*.

*இது அனைத்தும் வட மொழிஇலக்கியங்கள்*...

தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு.
தன் இடப் பக்க மார்பை திருகி எறிந்து ஒரு நகரத்தையே எரிக்கிறாள்,
தன் உள்ளத்து எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள், 'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. -
*இது சிலப்பதிகாரம்*.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான்.
அவள் வலக் கையில் வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீச வில்லை,
ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை.
அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.
*இது மணிமேகலை*

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான்.
அவளும் விவரமறியாது கூடவே செல்கிறாள்.

மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது,
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று.
யோசிக்கிறாள்.

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள்,
"நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு" என்று.
"அட அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல,
சுற்றுகிறாள்.
முதல் சுற்று,
இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள்.
*இது குண்டலகேசி*

*இவை அனைத்தும் தமிழ் இலக்கியங்கள்*...

ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.

அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால்,
*அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு* என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள்.

தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது.

வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.

உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.

*சங்ககாலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.* உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு.

தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.
ஏன்? சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது.

ஆனால் கீழடி போன்ற இடங்களில் இருந்து கிடைத்ததில் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.

ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்...

தமிழ், தமிழ் சமுதாயம் இன்றும் நிலைத்து இருப்பதற்கு காரணம் பெண்களைக் கொண்டாடியதால். பெண்கள் உலகத்தின் ஆணிவேர்கள். அவர்களைக் கொண்டாடுவோம்.

25/01/2019

அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு
கேட்டவுடன்
50,000 , 60,000 வாங்கும்
அவர்களுக்கு
இன்னும் சம்பள உயர்வா...?
எனத் துடித்து எழும் நம்
தோழர்களுக்கும்
பொது மக்களுக்கும்.. இந்த
பதிவு::-
உங்களுக்கு தெரியுமா?
இந்த 50,000 அவர்கள் எப்படி
வாங்கினார்கள் என்று????
சிம்பிள்!
*ஆண்டாண்டு காலமாக இப்படி
அழுது உண்ணாவிரதம் இருந்து
சிறைக்கு சென்று ! .
வேலை நீக்கம் அடைந்து என படி
படியாக ஆயிரம் ஐநூறு என
சிறுக சிறுக வந்துதான் இன்று
உங்கள் கண்களுக்கு விரியும்
50,000 ஆனது!
சரி உங்கள் பக்கத்து வீட்டிலோ
தெரு விலோ ஒரு பண்ணை
வீடு ! லக்சுரி கார் !
விலையுயர்ந்த எலக்ட்ரானிக்
பொருட்கள் என மிக ஆடம்பரமாக
இருப்பவர்கள் யார் என பாருங்கள்,
அரசியல் வாதியோ
தொழிலதிபரோ,
வியாபாரிகளோவாகத்தான்
இருப்பார்கள்....
ஆசிரியரோ ...அரசு ஊழியரோ,
வங்கி ஊழியரோ, கிளாக்கோ
இருக்க மாட்டார் ...!
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம்
அரசு ஊழியர்கள் வருமான
வரியை
பிடித்து கொண்டுதான்
மீதியை சம்பளமாக
அரசு கொடுக்கும் !
பாதிக்கும் மேல் வரியாகப்
போய்விடும்.
சிலருக்கு அந்த மாதம் சம்பளமே
வராது..
அதிகாரிகள் சிலர்
கையிலிருந்து
பணம் போட்டு வருமானவரி
செலுத்துவார்கள்..
இலட்சக் கணக்கில் சம்பாரிக்கும்
சுய தொழில் செய்பவர்கள்,
வியாபாரிகள்,
வீடுகட்டி வாடகைக்கு விட்டு
ஆண்டுதோறும் இலட்சக்
கணக்கில்
சம்பாரிக்கும் உங்கள் உறவினர்கள்
அல்லது நண்பர்கள் அல்லது நீங்கள்
யாரும்
அரசுக்கு முறையாக வருமான
வரி கட்டுவதில்லை....!
ஆனால் அரசு ஊழியர்கள்தான்
இந்த நாட்டில் முறையாக வரி
கட்டுபவர்கள்...
அவர்களுக்கு எவ்வளவு
கொடுத்தாலும்
அதில் பாதி மீண்டும் அரசுக்கே
வாரியாக.த்தான்
திரும்பவும் போகும் .
அரசு ஊழியர்கள் கேட்கும்
ஆயிரம் ஐநூறு
ஊதிய உயர்வு உங்கள்
பாக்கெட்டுகளில் இருந்து
பிடுங்குவது போல கோபமாக
எதிர்க்கும் நீங்கள்..கோடி
கணக்கில் நம் வரிப்பணத்தில்
கொள்ளையடிக்கும் அரசையோ ,
வியாபாரிகளையோ,
அரசு காண்ட்ராக்ட்டர்களையோ
ஏன் எதற்கு என கேட்க
முடியாது!
30 ஆண்டுகள் பணி செய்தும்
கூட
ஒரு சொந்த வீடு கூட வாங்க
முடியாமல்
பணியிலிருந்து ஓய்வு
பெறுபவர்களைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா..?
இந்த அரசு ஊழியர்களை
வீட்டுக்கு அனுப்பி விடுவோம்
உங்களில் வேலை இல்லாத
நண்பருக்கு அந்த வேலையை
தருவோம்! யாராவது அரசுக்கு
உதவ தயாரா?
*சம்பளம் கேட்காத, உயர்வு
கேட்காத, விடுமுறை கேட்காத,
லோன் கேட்காத, அந்த நல்லவர்கள்
யார் யார்??*
*அது சரி நாங்கள் வேலை
இல்லாமல் இருக்கோம்
இவர்களுக்கு சம்பள உயர்வா என
கேட்கும் சகோதரர்கள் அரசு
வேலைக்கான தரம் அறியும்
தேர்வில் ஏன் வெற்றி
பெறவில்லை???
இன்று இவர்கள் ஸ்ட்ரைக்
செய்தால் நம்ம தினசரி
வாழ்க்கை பாதிக்கும் என
நினைக்கும் நாம் அரசு
நடத்தவேண்டிய பஞ்சாயத்து
தேர்தலை நடத்தி ஊருக்கு ஒரு
தலைவரை போடலைன்னு
கொதிக்கலையே ஏன்?
19தொகுதில MLA இல்லையே
அதனால் அந்த தொகுதி நல்லது
கெட்டது எடுத்து சொல்லி
கேட்டு உதவி பெற MLA
வேண்டும்னு கதறலயே ஏன்?
*கஜா புயல் சுஜா புயல்னு
வந்தா நாமெல்லாம் டிவி ல
பார்த்து உச்ச கொட்டும் போது
*மழையில் மிண் கம்பத்தில்
உட்கார்ந்து கொண்டு
இறங்கிவந்து உணவருந்த
நேரமின்றி கம்பியில் அமர்ந்து
உணவருந்தும் மின் ஊழியரை
பாராட்டினோம் .
ஆனால் ஊதிய உயர்வுன்னதும்
நம்ம பீரோவில யாரோ கை
விடாடார்போல துடிக்கிறமே
எப்படி????
கல் குவாரியை தோண்டும்
போது* *இரவாகி விட்டதால்
அங்கேயே படுத்து
கொண்டிருந்த அரசு
அதிகாரியை பாராட்டினோமே..
இப்ப அவர் ஊதிய உயர்வு
கேட்டதும் உட்காற்ற இடத்தில்
சூடு வைத்த மாதிரி
எரிகிறோமே அது ஏன்?*
*பொண்டாட்டி புள்ளியை
சென்னைல விட்டுட்டு போலீஸ்
அதிகாரி எவன் வீட்டு
நகையையோ பணத்தையோ மீட்க
மொழி தெரியாத வட
இந்தியாவில் சுடப்பட்டு
*இறந்தபோது அய்யோ பாவம்
என்றோமே!
அவரின் சக ஊழியர் ஆயிரம்
ரூபாய் உயர்வு கேட்டதும் நம்
அப்பா எழுதி வைத்த சொத்து
பத்திரத்தை பிடுங்கியது போல
பதறுகிறோமே ஏன்?
ஒரு ஆக்ஸிடென்ட் கொலை
என்றதும் பார்த்துவிட்டு
பரிதாபப்பட்டு வீட்டில போய்
படுத்துக் கொள்வோம், ஆனால்
*அந்த இடத்திலேயே அன்றைய
இரவைக் கழிக்கும் காவலர்
ஆகட்டும் தாசில்தார் மருத்துவ
ஊழியர்கள் சாலை பணியாளர்
போன்ற அனைவரும் அரசு
ஊழியர்கள் என்பதை நாம் ஏன்
சிந்திக்க மறுக்கிறோம்! 12
மாதங்களில் ஒரு மாதம் பள்ளி
விடுமுறை விடுகிறார்கள்
அந்த ஒரு மாதம் கூட நாம் நம்
குழந்தைகளை வீட்டில் வைத்துக்
கொள்ளாமல் எங்காவது
ஊருக்கு அனுப்பலாமா
*விடுமுறை பள்ளியில்
சேர்க்கலாமா என்று
யோசிக்கிறோம்..
அந்தப் பதினொரு மாதங்கள் இந்த
குழந்தைகளுக்காக *வேலை
செய்யும் அந்த ஆசிரியர்களை
பற்றி நாம் என்றாவது
சிந்தித்திருக்கிறோமா??
அவர்கள் ஊதிய உயர்வு கேட்டதும்
நம் வீட்டில் பாதியை
பிரித்துக்கொடுக்க கேட்டது
போல் துடிக்கிறோமே ஏன்?
இன்று நமது மாநில *அரசும்
மத்திய அரசும் உலக வங்கி அந்த
வங்கி இந்த வங்கிகளிடம் கடன்
வாங்கி நாட்டின் கடன் எத்தனை
ஆயிரம் கோடி என்று
கூறுகிறார்களே அதில்
எத்தனை ஆயிரம் கோடியை இந்த
அரசு ஊழியர்களிடம் கொடுத்து
விட்டார்கள்* *என்று என்றாவது
நீங்கள் கேட்டதுண்டா?
அதனால் நாம் அவர்களுக்கு
உதவி செய்ய தேவை இல்லை
அவசியமின்றி அவர்களை
உதாசீனப்படுத்த வேண்டாம்.
கோபப்பட வேண்டாம்..
அவர்கள் உரிமை அவர்கள்
கேட்கிறார்கள்
நம் *குடும்பத்திலும் யாரோ
ஒரு அரசு ஊழியர் இருப்பார்,
இல்லை நாளை வருவார்
என்பதை மனதில் வைத்து .நீங்கள்
உங்கள் வேலையை
செய்யுங்கள் ! அவர்கள் அவர்கள்
வேலையை பார்க்கட்டும்.

By
Admin
Vinodh

25/01/2019

பொதுமக்களுக்கு ஜாக்டோ ஜியோ வின் அன்பான வேண்டுகோள்.
தங்களுக்கு மகனோ, மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ இருந்தால் கட்டாயம் இதை முழுமையாக படியுங்கள்.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சம்பள உயர்வுக்காக அல்ல எங்களின் 21 மாத சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என்பதற்காக.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்து யாராவது குதிரை பந்தயத்தில் கட்டி(Share Market), வந்தால் லாபம் போனால் நட்டம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?.

எங்களுக்கு கோபம் வருகிறது அதனால்தான் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கிறோம்.

உங்களின் மகனோ ,மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ படித்துக் கொண்டிருந்தால் அல்லது படித்து முடித்திருந்தால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டாமா?

இது எங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல நம் எதிர்காலச் சமுதாயத்தின் நலனுக்கான போராட்டம்.
தற்பொழுது 3500 சத்துணவு மையங்களை இணைக்க உள்ளார்கள் இதனால் 7000 பணியிடம் காணாமல் போகும், 3000 தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் உடன் இணைக்க உள்ளார்கள் இதனால் 6000 பணியிடம் காணாமல் போகும், இதைப் போன்று ஒவ்வொரு துறைகளிலும் பணியிடங்களை இணைகிறார்கள் இதனால் லட்சக்கணக்கான பணியிடங்கள் காணாமல் போகும் பிறகு எப்படி உங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும்.

நீங்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உங்கள் வாரிசுகளை படிக்க வைப்பது அவர்கள் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வேலையே இல்லாத போது அவர்கள் எப்படி அந்த வேலைக்கு செல்ல முடியும்?

சிந்தியுங்கள் இனியும் நீங்கள் முட்டாளாக இருந்து விட்டால் நாளை அரசு பணியிடம் என்பதே இல்லாமல் போகும் உடனே ஜாக்டோ ஜியோ வின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள். நாங்கள் ஒன்றும் மந்திரிகள் அல்ல நாள்தோறும் ஒரு பொய்யைச் சொல்ல, நன்கு படித்த ஆசிரியப் பெருமக்கள்.

உண்மையைச் சொல்லி விட்டோம் இனி ஆதரவு தருவதும் தராமல் இருப்பதும் உங்கள் விருப்பமே.

By Admin
Anu.

Short flim makers & aerial photography lovers make use of this opportunity Phantom 3 professional4k resolution.12.3 MP c...
06/06/2016

Short flim makers & aerial photography lovers make use of this opportunity
Phantom 3 professional
4k resolution.
12.3 MP camera.
3 batteries.
Currently We are doing aerial shots for short films, cooperate events, ad shoots, feature films, wedding coverages too.
Contact this number for rental details
9025352082

08/05/2016
08/04/2016

Salem Anthem will be up loaded in few days.

19/03/2016
12/03/2016

Address

Tirunelveli
627011

Telephone

+919025352082

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Short Flims posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Short Flims:

Share