12/03/2021
#விராச்சிலைஈசன்
#ராச்சாண்டார் #திருமலை மகிமை :
https://g.co/kgs/UzFSdv
1. பீஷ்மர் வழிபட்ட ஸ்தலம்
மலை போன்ற மன உறுதி, வழுவாத பிரம்மசர்ய விரதத்தையும் சாதித்தவரே பீஷ்மர். மூன்றாண்டு காலம் துருவ சக்தி பர்வதம் என முற்காலத்தில் விளங்கிய ராச்சாண்டார் திருமலையில் ஒற்றைக் காலில் நின்று தவம் இயற்றியதன் பலனாகவே எவரும் வியக்கும் நைஷ்டிக பிரம்மசாரியாக விளங்கினார்.
2.இங்கு தவம் புரிந்தாள் வைரம் போன்ற மன உறுதி ஏற்படும் என்பது முன்னோர் வாக்கு.இம்மலையில் உள்ள பாறைகள் விஸ்வ சிலா பாறைகள் என்று அழைக்கப்பட்டன.மேலும் வைரத்தை மிஞ்சும் கடினத் தன்மை உடையவை .
3.துருவ சக்தி பர்வதம் என்று பெயரும் உண்டு(இராட்சண்டர் திருமலை)
4.ஸ்ரீவிராச்சிலை ஈசன்(கடுசிலையான்) என்றால் இறுதி வரை நிலையாக நின்று பக்தர்களுக்கு துணையாய் அவர்களைக் காக்கும் தலைவன் என்று பொருள். இதைக் குறிப்பதே கடுசிலையான் என்ற பதம்.
5.பெரிய நாயகி அம்மன்
துருவ சக்தி நாயகி
என்று இத்தனை யுகங்களாக வழிபட்ட சக்தி தேவியே கலியுகத்தில் பெரிய நாயகி அம்மன் என்ற திருநாமத்துடன் துலங்குகின்றாள்.
6.விஸ்வரூப தரிசனமும் விஷ்வ சிலா பாறைகளும்
யசோதை, அர்ச்சுனன், அக்ரூரர் என கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனத்தைப் பெற்ற அனைவருமே முற்பிறவியில் இந்த துருவ சக்தி பர்வதத்தில் தவம் இயற்றியவர்களே.
7.சூரபத்மன் தவம் செய்த ஸ்தலம்
முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் பெற்ற சூரபத்மனும் சிவனை நோக்கி சாகா வரம் பெறுவதற்கு தவம் இயற்றும் முன் இந்த துருவ சக்தி பர்வதத்தில் ஒரு யுக காலத்திற்கு தோடக முகூர்த்த தவம் இயற்றி பன்னெடுங் காலம் உணவு கூட இல்லாமல், நீர் அருந்தாமல், தூக்கத்தையும் மறந்து தவம் இயற்றும் மன உறுதியைப் பெற்றான்.
8.கர்பப்பை நோய்களை தீர்க்கும் , குழந்தை பாக்கியம் அருளும் ஸ்தலம்.
குழந்தை பாக்கியம் மற்றும் கர்பப்பை நோய்களை தீர்க்கும் பூவாய் மதுரா தீர்த்தம் அமையபெற்ற ஸ்தலம் (தட்சிண காமக்யா ) என்று அழைக்கப்பட்டது.
9.பூவாய் மதுரம் என்ற அற்புத தீர்த்தம்
ராச்சாண்டார் திருமலையில் எழுந்தருளியுள்ள அம்பாள் ”பூவாய் மதுரம்” என்ற தெய்வீக சுனையின் மூலம் தன்னுடைய எல்லையில்லா அனுyகிரக சக்திகளை வாரி வழங்குகிறாள். அம்மன் சன்னதிக்கு வலப்புறம் உள்ள தீர்த்தமே பூவாய் மதுரம் என்னும் அற்புத தீர்த்தமாகும்.
நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரம் பூவாய் மதுர தீர்த்தத்தில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த அற்புத ஸ்ரீபுர யோகினி சக்கரமான நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரம் திகழும் சுனைதான் பூவாய் மதுரம்.
இந்த அற்புத ஸ்ரீசக்கரத்தை தோடகச்சாரியர் பிரதிஷ்டை செய்வதற்காக இரண்டு வருட காலம் இத்தல விஸ்வ சிலா பாறைகளின் மீது தோடக முகூர்த்த காலத்தில் ஒரே காலில் நின்று தவமியற்றினார்.
ஹரிச்சந்திர மகாராஜா சத்யோஜாத விரதத்தை இயற்றி சத்தியத்தையே பேசி அழியாப் புகழ் பெற அவருக்கு உறுதுணையாய் நின்றது இத்தல தோடக முகூர்த்த வழிபாடே ஆகும்.
10. பூவாய் சித்தரின் மேகலை பத்மம் என்ற மூலிகை.
பூவாய் சித்தர் கொல்லி மலையில் மட்டும் வளரக்கூடிய
மேகலை பத்மம் என்ற அற்புத மூலிகையை பூவாய் மதுரா தீர்த்தத்தில் நிரவிச் செல்கிறார்.
இந்த மூலிகையைப் பார்த்தாலோ, இந்த மூலிகையின் அருகில் 12 அடிக்குள் நின்று இந்த மூலிகையின் நறுமணத்தை முகர்ந்தாலோ ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரக் கூடிய அனைத்து இரகசிய நோய்களும் தீரும்.
மூல நட்சத்திர தினத்தன்று இத்தலத்தை கிரிவலம் வந்து வழிபடுவதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். உண்மையில் பூவாய் மதுர தீர்த்தத்தை கண்களால் காணாதிருப்பதே பக்தர்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
ஒவ்வொரு மூல நட்சத்திர நண்ணாளில் கொல்லி மலையில் ஆகாச கங்கை நிரம்பி வழியும் அமிர்த புட்குழியில் வளரும் மூலிகையே மேகலை பத்மம்.
11. அம்பாளுக்கு ஸ்வர்ண மேகலை அணிவித்தல்.
பக்கத்திற்கு ஆறு வெண் தாமரை புஷ்பங்களை வைத்து இந்த
( 12)வெண்தாமரைகளுக்கு நடுவில் நீலோத்பல மலரை வைத்து மலர் ஒட்டியானம் செய்து அம்பாளுக்கு சார்த்தினால் அதுவே தங்க ஒட்டியானமாக, ஸ்வர்ண மேகலையாக ஏற்றுக் கொண்டு பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள்.
எனவே மூல நட்சத்திர நாட்களில் மேற்கூறிய முறையில் அம்பாளுக்கு மேகலை புஷ்பங்களைச் சார்த்தி திருத்தலத்தை கிரிவலம் வந்து இறை மூர்த்திகளின் தரிசனம் பெற்றால் அனைத்து நலன்களையும் பெறலாம்.
12. தோடக முகூர்த்த தவம் தரும் நன்மை.
ஒரு நாள் சூரிய உதயம் காலை 7 மணி, அன்றைய சூரிய அஸ்தமனம் மாலை 6 மணி என்று கொண்டால் அன்றைய பகல் பொழுது 11 மணி நேரத்திற்கு நிரவி உள்ளது. பகல் பொழுதை பாதியாக்கினால் ஐந்தரை மணி நேரம் வரும். இந்த 5 மணி 30 நிமிடத்தை சூரிய உதய காலமான 7 மணியுடன் கூட்டினால் அது 12 மணி 30 நிமிடம் என வரும. எனவே அந்த நாளில் அபிஜித் நேரம், அபிஜித் முகூர்த்தம் என்பது 12 மணி 30 நிமிடம் ஆகும்.
இந்த அபிஜித் நேரத்திற்கு முன்னுள்ள ஒரு மணி 30 நிமிடங்களும் அபிஜித் நேரத்திற்குப் பின் வரும் ஒரு மணி 30 நிமிடங்களுமான ஆக மொத்தம் மூன்று மணி நேரமே தோடக முகூர்த்தமாகும். மிகவும் புனிதமான முகூர்த்த நேரம்.