Aanmeegam

Aanmeegam இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

29/06/2024
28/06/2024
23/06/2024
22/06/2024
சப்த மாதாக்கள் (கன்னிமார்சாமிகள்)அரிமா.சிவ.எம்கோ 9600975689பிள்ளை வரம் வேண்டியும், பெண்கள் திருமணம் கைகூடவும், தாலி பாக்...
06/06/2024

சப்த மாதாக்கள் (கன்னிமார்சாமிகள்)

அரிமா.சிவ.எம்கோ 9600975689

பிள்ளை வரம் வேண்டியும், பெண்கள் திருமணம் கைகூடவும், தாலி பாக்கியம் நிலைக்கவும்,சிந்து சமவெளி நாகரிக காலத்திற்கு முற்பட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கன்னிமார் வழிபாடு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
வழிபட்டால் ஏற்படும்
பலாபலன்
நன்மைகளையும், படித்தறிவோம்.

சப்த மாதாக்கள், சப்த கன்னியர், கன்னிமார். எழு அன்னையர். இவர்களது
சிலைகள் ஆற்றங்கரை. கண்மாய்க்கரை, ஓடைக்கரை, ஏரிக்கரைகளிலும்
சிவாலயத்திலும் இருப்பதை நாம் காணலாம்.

ஆதிபராசக்தி காளியம்மன் மகிஷாசுரமர்த்தினி தனது சக்தியின் அம்சங்களாக ஏழு விதமாக தன் உடலை சக்திகளாகப் பிரிந்து, மக்களுக்கு அருள் பாலித்து காத்திடவே இவ்வாறு திருமேனி வழிபாடு அமைந்துள்ளது.

ஏழு மாதாக்களின் சிறப்பு பலன்கள்

1. ஸ்ரீ பிராம்கி (மூலாதாரம்)

*தலை*
மூளை ,சிந்தனை, படிப்பு, படைப்பு வழங்கும் பிரம்மனின் அம்சம், பார்த்தல், உணர்தல்,
மகப்பேறு அருளல்,

படையல்: சர்க்கரைப்பாகு புட்டு

ஓம் ஹம்ஸத் வஜாயை வித்மஹே, கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்!

2. ஸ்ரீ மாகேஸ்வரி (சுவாதிட்டாணம்)

(தோள்) உடல் நலம், நிம்மதி, அமைதி, சுமத்தல், இயக்குதல், இணைத்தல் வேலைகள் சிறந்திட உதவும்.. மங்களத்தை அளிப்பது இவரே. மகேசுவரனின் அம்சம்.

படையல்: சுண்டல், நீர்மோர்.

ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே: ம்ருக ஹஸ்தாயை தீமஹி:
தந்நோ, ரௌத்ரீ ப்ரசோதயாத்!

3.ஸ்ரீ கௌமாரி (மணிபூரகம்)

(கால்) கடக்க, ஓட, நடக்க உதவுபவள், தைரியம், ஞானம், வீரம்,இளமையும்
வழங்குபவள். முருகனின் அம்சம் இவர்.
படையல்: எலுமிச்சை சாதம்

ஓம் சிகித் வஜாயை வித்மஹே, சக்தி ஹஸ்தாயை தீமஹி: தந்நோ, கௌமாரீ ப்ரசோதயாத்!

4. ஸ்ரீ வைஷ்ணவி (அனாகதம்)

(கை) பாதுகாப்பு வேலை, திருப்தி, சந்தோசம், செல்வம் அளிப்பவர். அபயகரம். செயல்பாடு உண்டு ,வாழ உதவி, அணைக்க வழி செய்வது வளமான வாழ்வளிப்பது.

நாராயணின் அம்சம் இவர்.

படையல்: பாயாச வகைகள்

ஓம் தார்ஷ்யத் வஜாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி: தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்!

5. ஸ்ரீ இந்திராணி (ஆக்ஞை)

(ஸ்தனம் - உயிர்) உயிர்ப்பிக்கவும், உயிர் தோன்றவும், உயிர் வளரவும், இன்புறவும்,
வாழ்வு பேணவும், ஆயுள்பலம் பெறவும், சுகம் கிடைக்க, சொத்து சேரவும். அழகு பெறவும் உதவுபவள் .. இந்திரனின் அம்சம் இவள்.

படையல்: பலாச்சுளை

ஓம் சீயாமவர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ஐந்திரீ ப்ரசோதயாத்!

6.ஸ்ரீ வராகி (விசுத்தி

(பிருஷ்டம்) ஓய்வு பெற்றிடவும், பயமி ன்மை, உடலை தாங்கவும், கழிவு நீக்கவும், ஓய்வு
தரவும், எதிரிகளை அழிக்கவும் பாதுகாப்பை வழங்கிடவும் உதவுபவள் .
இவள் வராக மூர்த்தியின் அம்சம்.

படையல் கிழங்கு வகைகள், தயிர்சாதம், முறுக்கு, எள்ளுருண்டை

ஓம் சியாமளாயை வித்மஹே;
ஹல ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ வராஹி ப்ரசோதயாத்!

7. ஸ்ரீ சாமுண்டி கபாலவாயில்

(நெற்றி) நோயற்ற வாழ்வு ,வாழ்வில் வெற்றி, தீயவை அழிக்கவும், நிர்மூலம் ஆக்கவும். மோட்சம் கொடுக்கவும், எதையும் உருவாக்கவும் உதவுபவள். கபால பைரவரின் அம்சம்
இவள்.

படையல்: அவல் சாதங்கள்

ஓம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே, சூல ஹஸ்தாயை தீமஹி: தந்நோ சாமுண்டாம் ப்ரசோதயாத்!

மேற்கண்ட சப்தமாதாக்கள் வழிபாட்டினால் வற்றாத வளம், குறையாத செல்வம். ஞானம், யோகம், இறைவனை அடையும் வழி ஆகிய அனைத்தும் உடனடியாக கிடைக்கும். நம்மை, ஊரை, உலகை, பிரபஞ்ச பரவெளியை, பின்பு எல்லாவற்றையும் நமக்கு காட்டி உணர்த்துபவர்கள். ஆலய வழிபாடு தோன்றுவதற்கு முன்பே, வயல்வெளி வேளாண்மை தொழிலில் ஈடுபட்ட நம் முன்னோர்கள் இந்த இயற்கை சக்திகளை தெய்வங்களாக வழிபட்டு வந்துள்ளனர். உடலில் 7 சக்கர சக்திகளாகவும் உள்ளனர் ..

நவராத்திரி வழிபாடு

இறைவனின் அருளை படிப்படியாக பெறவும், வினைகளை அறுக்கவும், புாட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி முதல் தசமி திதி முடிய உள்ள 10 நாட்களும் நவராத்திரி விழாவில் 7 நாட்கள் இவர்கள் வழிபாடு சிறப்புக்கு உரியதாகும்.

பெண்கள் வழிபட வேண்டியவர்கள்

பெண்களுக்குரிய வழிபாடே சப்தமாதர்களை வணங்குவதாகும். சக்தியே மூலமாகவும், யோகமாகவும், போகமாகவும், வீரமாகவும், எங்கும் இருக்கிறாள்.

மேலும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என நிறைந்து இருக்கிறாள். எனவே:7 வித அம்சங்களையும், ஆற்றல்களையும், வரங்களையும், வாகனங்களையும் கொண்டு. கலியுகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் எங்கும் நீக்கமற நிறைந்து எளிய வடிவில் காட்சியும் தந்து அருளும் பொருளும் கொடுத்து வரும் இவர்களை நாம் எல்லோரும் வழிபட்டு நல்லருள் பெறுவோம்.

ஆனந்தவள்ளி அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அன்னை ஆதிபராசக்தியின்காளியம்மன் உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த ஏழு அம்ச சப்தமாதாக்களையும் அன்னை பார்வதியையும் வழிபட்டு தியானம் செய்பவர்களுக்கு, வழிபடுபவர்களுக்கு,அவள் சரித்திரத்தை சொல்பவருக்கு, படிப்பவர்க்கு, கேட்டவர்களுக்கு, பரப்புவர்களுக்கு, எழுதுபவர்களுக்கு,

1.ஒருநாளும் தீமை ஏற்படாது..
2. தோல்வி கிட்டாது
3. நோய்நொடி அணுகாது
4. ஆபத்து வராது
5. விபத்து நேராது
6. வறுமை பிடிக்காது..
7. பகை பெருகாது
8. செல்வம் குறையாது
9. மறுமாசு கிட்டாது
10. மனம் நோகாது
11. அல்லல் நேராது
12. நீர்,நெருப்பு தீது உண்டாகது..
13. திருடு போகாது
14. கோரக்கலி காலத்தின் கொரோனா போன்ற
கொடுமை ஏதும் துன்புறுத்தாது.

பயபக்தியுடன்
அரிமா சிவ எம்கோ வாழப்பாடி
9600975689..

Address

14, SEETHA LASHMI NAGAR
Sivagangai
630561

Telephone

0091 9894323780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aanmeegam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category