31/08/2021
‘DSLR’ க்கள் சராசரியாக குறைந்த விலையில் கிடைக்கும், ஆனால் அவை ‘Mirrorless’ அளவுக்கு மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை !
சர்வதேச அளவில், புகைப்படக்கருவிகளை விற்கும் ஆன்லைன் தளம் ஒன்று, இரண்டு விதமான கேமராக்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை, சிறிய கட்டுரையாக வெளியிடுகிறது. அதனை வழக்கமான எனது தேடுதலின் போது படிக்க நேர்ந்தது. புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருப்பதினால், அதனை மொழிபெயர்த்து இங்கே நான் பகிர்கிறேன்.
இக்கட்டுரை 'Mirrorless' கேமராக்களின் தேய்மானம், Resale Value பற்றியது, அவ்விஷயத்தினை 'DSLR' உடன் ஒப்பிட்டு பார்ப்பது தான்.
----------------------------------------------
கடந்த சில வருடங்களாக கலைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள, 'DSLR' கேமராவில் இருந்து 'Mirrorless' கேமராவுக்கு பெருமளவு மாறினார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நம் கலைஞர்கள் ஏற்கனவே பயன்படுத்திய 'Pentaprism' மற்றும் 'Mirror' உள்ள கேமராக்களை விட்டுவிட்டு, மேம்படுத்தப்பட்ட புதிய விஷயங்களுக்காக, சில வசதிகளுக்காக வேகமாக ‘Mirrorless’ பக்கம் சாய்வது இது காரணமாகத்தான் !
மேம்படுத்தப்பட்ட ‘Focus’ விஷயங்கள், on-sensor phase detection, multi-axis in-body stabilization, 4K மற்றும் தற்பொழுது 8K வீடியோ, இதெல்லாம் தற்பொழுது அத்தியாவிசயத்தேவைகளாக நம் கலைஞர்கள் உணர்கிறார்கள். இதில் கேமரா மற்றும் லென்ஸ் உற்பத்தியாளர்கள் தங்களை தானே வலுகாட்டாயமாக இந்த போட்டியில் தங்களை இணைத்துக்கொண்டு, சிக்கித்தவிக்கிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்யும் எந்த புதிய ரக 'mirrorless' கேமராவாயினும் குருகிய கால தயாரிப்பாகவே வைக்கிறார்கள், அதிலிருந்து சில விஷயங்களை, வசதிகளை மேம்படுத்தி அடுத்தடுத்த கேமராக்களில் 3 மாத, 5 மாத இடைவெளியில் வெளியிடுகின்றனர். நிலைமை அப்படியிருக்கும்போது, நாம் வாங்குகிற 'Mirrorless' கேமராவின் தேய்மானம் மற்றும் 'resale' கண்ணோட்டத்தில் நாம் என்றுமே யோசித்தது இல்லை.
இவர்களின் ஆன்லைன் தளத்தில் சில வருடங்களாக (2018 - 2021) கலைஞர்கள் வாங்கிய கேமராக்கள் மற்றும் அதனை, எந்த வருடத்தில் வாங்குகிறார்களோ, அன்று வாங்கும் விலை விபரங்களை வைத்து தான் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.
புதிதாக வெளிவரும் கேமராக்கள் விற்பனை, ஆரம்பத்தில் வேகம் எடுத்தாலும், நடுவில் இடஞ்சல்களோடும், 2021 கால ஆய்வின்படி, Mirrorless Camera வாங்கியதில், எப்படியும் 12% - 13% சதவியிததிற்கு மேல் அதன் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.
இதே காலகட்டத்தில் (2018 - 2021) வாங்கிய 'DSLR' கேமராக்கள் 2% -4% சதவியிதம் தான் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.
அப்போ இன்னமும் DSLR கேமராக்களின் தேவை, மதிப்பு சிறப்பாகவே இருக்கிறது என அறிகிறோம். எனவே, அவற்றை விற்கும் கலைஞர்களுக்கு (used) நல்ல 'returns' கிடைப்பதால் ‘Resale Value 'ம் சிறப்பாகவே இருக்கிறது. Mirrorless உடன் ஒப்பிடும்போது ‘DSLR’ ன் ‘Resale’ மதிப்பு அதிகமே !
‘DSLR’ க்கள் சராசரியாக குறைந்த விலையில் கிடைக்கும், ஆனால் அவை ‘Mirrorless’ அளவுக்கு மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை !
தற்பொழுது ‘Mirrorless’ ன் பயன்பாடு மிகவும் பரவலாக இருப்பதினால், முன்பு சிறப்பாக இருந்த ‘DSLR’ ன் இடத்தினை ‘Mirrorless’ கேமராக்கள் ஆக்கிரமிப்பு செய்தது போல இருப்பினும், உண்மை அதுவல்ல !
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவை அனைத்தும் மிக விரைவாக மாறலாம்.
-நன்றி-
The KEH Camera Store - Atlanta (US)