Green Floor::பசுமை விரிப்பு

Green Floor::பசுமை விரிப்பு creativity

16/01/2018
25/09/2017

*1. 'தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது.* அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

*2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.*'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

*3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம*்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

*4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'*

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

*5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.*'

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

*6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'*

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
*7. 'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'*

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

*8. 'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'*

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
*9. முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'*

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

*10. தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'*

சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

*11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'*

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

*12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'* இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

படித்ததில். பிடித்தது...

*நீங்களும் தெரிந்து கொள்ளளாமே...*
*********"***************************"******

24/09/2017
31/01/2017

தெரிஞ்சுகோங்க வாசிகளே!!!
#மாட்டு வண்டியில் உள்ள பாகங்கள்

நன்றி:- பசுமை விகடன்

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய 7 மூலிகைகள்!மூலிகைச் செடிகள்!மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், வேலைச் சுமை போன்ற பல்வே...
01/08/2016

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய 7 மூலிகைகள்!

மூலிகைச் செடிகள்!

மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், வேலைச் சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல்நிலை அடிக்கடி பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. அவற்றை எல்லாம் கைவைத்தியத்தில் சரிசெய்துகொள்ளும் வகை யிலும், ஆரோக்கியத்துக்கு உடனடியாகப் பயன்தரக்கூடிய வகையிலும் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டிய மருத்துவ குணம்நிறைந்த மூலிகைச் செடிகள் பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் வேலாயுதம்.



‘‘வேகமாக மாறிவரும் நகர மயமாதல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் வீடு வாங்குவதே பெரிய பிரச்னையாக இருக்கும் சூழலில், ‘வீட்டில் செடி வளர்க்க இடம் இல்லையே?’ என்று மறுகுபவர்கள் பலர். குறைந்த பட்சமாக வெறும் 1 X 1 என்ற அளவிலான மண்தொட்டி போதும்… மிக முக்கியமான மூலிகைச் செடிகளை வளர்க்க! அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பால்கனி போன்ற சிறு இடங்களிலும் செழிப்பாக செடிகள் வளர்க்கலாம்’’ என்ற வேலாயுதம், அப்படி வளர்க்கப் பரிந்துரைக்கத்தக்க மூலிகைகளின் பலன்களைப் பட்டியலிட்டார்.

துளசி

* துளசி, சளியைப் போக்கும் சிறந்த நிவாரணி. மேலும் சிறந்த கிருமிநாசினியான துளசிச் செடியை வளர்ப்பதால், வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷ ஜந்துகள் மற்றும் கிருமித் தொற்றுகள் வரவு கட்டுப்படும்.

* ஆக்சிஜனை அதிகளவில் வெளிவிடும் திறன்கொண்ட துளசிச் செடியால், சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கும்.

* தினமும் இரவு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 10 துளசி இலைகள் போட்டுவைத்து, மறுநாள் காலையில் துளசியை மென்று, அந்த நீரையும் பருகிவர, ஆரோக்கியம் வளரும்.

* சரும நோய்களுக்கு மஞ்சள் மற்றும் துளசியை தண்ணீர் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிவர… பலன் கிடைக்கும்.

கற்றாழை

* சோற்றுக் கற்றாழை யின் மருத்துவ குணம் வாய்ந்த சதைப் பகுதியை பலமுறை நன்றாகக் கழுவி எடுத்து சாப்பிடலாம். அல்லது மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம் (அந்த வழவழப்பான சாற்றை அப்படியே சாப்பிட்டால் உடலுக்குக் கெடுதல் என்பதால், நன்கு கழுவிவிடவும்). இதன் மூலம் உடல் சூடு குறையும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் சீராகும்

*கற்றாழையின் சதைப் பகுதியை ஆண்கள், பெண்கள் அனைவரும் உடலில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளித்துவர, சரும வறட்சி நீங்கி தேகம் பளபளப்பாகும்; முகப் பருக்கள் குறையும்.

* அடிபட்ட இடங்களில் சோற்றுக் கற்றாழை சதையை வைத்துக்கட்டினால், ரத்தம் கட்டுதல் ஏற்படாது.

கற்பூரவல்லி

* கற்பூரவல்லி இலை அல்லது சாறு, சளிக்கு சிறந்த மருந்து. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்குச் சளி, ஜலதோஷம் ஏற்பட்டால், தாய்ப்பாலுடன் கற்பூரவல்லி சாற்றைக் கலந்து கொடுக்க… உடனடி குணம் கிடைக்கும்.

* கற்பூரவல்லி இலையில் பஜ்ஜி செய்தும் சாப்பிடலாம்.

நிலவேம்பு

* நிலவேம்புக் கஷாயம் குடித்தால் கடுமையான காய்ச்சலும், சளியும் குணமாகும். குறிப்பாக, குளிர்காலங்களில் வாரம் ஒருமுறை இதைக் குடித்துவர, காய்ச்சல் வருவது கட்டுப்படுத்தப்படுவதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், வயிற்றுப் புண் குணமாகும்.

* நிலவேம்புச் செடிகளின் நெடியால் வீட்டைச் சுற்றிலும் விஷ ஜந்துகள் வருவது கட்டுப்படும்.

தூதுவளை

* அடிக்கடி மூச்சிரைத்தல், இருமல் ஏற்படுபவர்கள், நெஞ்சு சளி உள்ளவர்கள் தூதுவளை இலையுடன் இஞ்சி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டுவர (வாரத்துக்கு இரு வேளை மட்டும்) நல்ல பலன் கிடைக்கும்.

* தூதுவளையை பொடியாகச் செய்யும்போது சத்துகள் குறைந்துவிடும் என்பதால் முடிந்தவரையில் துவையலாகச் செய்து சாப்பிடவும்.

பிரண்டை

* பிரண்டையில் காரம் அதிகமாக இருக்கும் என்பதால் பலரும் அதைச் சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், அதன் மருத்துவக் குணங்கள் ஏராளம். பிரண்டையின் நரம்புபோன்ற பகுதியை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கவும். பிறகு, சாதாரண அல்லது புளித்த மோரில் சிறிது நேரம் ஊறவைக்க, அதன் காரத்தன்மை குறையும். பின்னர் அதனுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து துவையல்செய்து சாப்பிட்டால்… மூட்டுவலி, எலும்புத் தேய்மானம் குறைந்து எலும்பு பலமாகும், வயிற்றுப் புண் குணமாகும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்களின் இடுப்புவலி குறையும்.

* பிரண்டைத் துவையல் பசியை அதிகரிக்கும் திறன்கொண்டது. சரியாகச் சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

வெற்றிலை

* வெற்றிலைக் கொடியை வீட்டில் வளர்க்க அதிக இடம் தேவையில்லை. அவ்வப்போது கொடியைக் கத்தரித்து தேவையான அளவுக்கு வளர்த்துக்கொள்ளலாம். இதுவும் விஷ ஜந்துகளை அண்டவிடாது.

* வெற்றிலைச் சாறு, அனைத்து வயதினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* மதியம் சாப்பிட்டவுடன் வெற்றிலையுடன் பாக்கு, ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காய், சுண்ணாம்பு சேர்த்து வாயில்போட்டு மென்றால்… ஜீரண மண்டலம் பலம்பெறும். ஜீரணக் கோளாறுகளும், சளியும் சரியாவதுடன், தொண்டை வலியும் குணமாகும்.

* வெற்றிலை புகையிலைப் பொருட் களுடன் சேர்ந்தது எனவும், புற்றுநோயை உண்டாக்கும் எனவும் சிலர் நினைக்கின்றனர். வெறும் வெற்றிலை, உடலுக்கு நன்மையே செய்யும். மேலும் வெற்றிலையை மென்ற பிறகு நன்றாக வாய் கொப்பளிக்க, பற்களில் கறை படிவதும் கட்டுப்படும்’’ என்ற வேலாயுதம்,

‘‘அதிக இட வசதி உள்ளவர்கள் அருகம்புல், மணத்தக்காளி மற்றும் கீரை வகைகள், புதினா என்று இன்னும் சில மூலிகைகளை வளர்த்து பலன் பெறலாம். ஒரே தொட்டியில் தொடர்ந்து ஒரே செடி வளர்ப்பதைத் தவிர்த்து, ஆறு மாதங்கள் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை வேறு வேறு செடிகளை மாற்றி வளர்க்க, செடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்’’ என ஆலோசனையும் கூறுகிறார்.

மூலிகை வளர்ப்போம்… ஆரோக்கியம் காப்போம்😊

07/07/2015
Get into the Green Floor (Y)
03/07/2015

Get into the Green Floor (Y)

Address

Madurai
625001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Floor::பசுமை விரிப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category