30/04/2026
🔥உலகப்புகழ்பெற்ற😍மதுரை சித்திரை திருவிழா 2026 (பன்னிரண்டாம் நாள்) விடையாற்று உற்சவம்... இதனை தொடர்ந்து கொடி இறக்கி விழா நிறைவு
(திருவிழாத் தத்துவமும் பலனும்)
பன்னிரண்டாம் நாள் தீர்த்தத் திருவிழா, சிவானந்தமாகிய பேரின்பக் கடலில் ஆன்மா திளைப்பதைக்குறிக்கும்.
பொங்கித்ததும்பிப் பூர்ணமாய் ஏக உருவாய்க்கிடக்கும் இறையின்ப வாரியில், ஆன்மாக்கள் முற்றும் ஆழ்ந்து ஆனந்திப்பதைத் தீர்த்தவாரி குறிக்கின்றது.
இதனை மகாருத்ரபாத தீர்த்தம் என்பர். இரவு விருஷபவாகன சேவை மிகவும் முக்கியமானது. அடியார்களுக்கு அருள்புரிய ஆண்டவன் விருஷபவாகனத்தில் எழுந்தருளி வருவதைப் புராணாதிகளால் நன்கறியலாம்.
அருள்பெற்ற ஆன்மா விருஷபமாகும். அதன் வெள்ளைநிறம் அதனிடத்து எவ்வித மாசும் இல்லை, என்பதை உணர்த்தும். தர்மம் என்ற அறத்தையே நான்கு கால்களாகக் கொண்டுள்ளது.
சமம், விசாரம், சந்தோஷம், சாதுங்கம் என்ற நான்கு அறங்களும் நான்கு கால்களாய் அமைந்துள்ளன. மாசற்ற அறவடிவமான ஆன்மாக்களிடத்து இறைவன் வந்து அமர்வான் என்பதை இது குறிக்கின்றது. இது அனுக்கிரகக் கோலம்.
Nambi photography