16/10/2024
இந்த குலசை தான் எனக்கு முதல் வருஷம். நானும் பெருசா எக்ஸ்பெக்ஸ்டேஷன்ஸ் ஓட தான் போனேன். அதுவும் எனக்கு நிறையாவே இருந்தது, அதுக்கு ஏத்த மாறியும் இருந்துச்சு. ரொம்ப நேரம் ட்ராவல் தான் ஆனாலும் எக்ஸ்பெக்ஸ்டேஷன்ஸ் மீட் ஆச்சு. நிறையா மக்கள் நிறையா வேஷங்கள் அப்டி இப்டினு நல்லாதான் போச்சு , ஆனா நான் ஒரு நாள் முன்னாடியே நாகர்கோவில் கெளம்பிட்டேன், அதுனால நிறையா மிஸ் பன்னிட்டேன். இருந்தாலும் நான் போன அந்த ஒரு நாளுல போட்டோ எடுக்க நிறையா பேரு வந்துருந்தாய்ங்க , நம்மூரு, கேரளா, நார்த் அப்ரோம் பாரின்ல இருந்துலாம்… ஒரு மாறி ஜாலியாதன் போச்சு!
திருவிழான்னா அங்க என்ன இருக்குதோ அத அப்படியே காட்டணும்னு ஒன்னு இல்லாம போய்ருச்சு. நான் பாத்ததுல நிறையா போட்டோகிராபர்ஸ் அங்க வெட்டிங் ஈவன்ட் மாறி, எல்லாரயும் போஸ் வச்சு… கண்ண மேல தூக்குங்க, நாக்க வெளிய நீட்டுங்க , கைய இப்டி வைங்க, அப்டி இப்டினு… அவங்க அவங்க இஷ்டத்துக்கு நிக்க சொல்லி! போட்டோ எடுத்தாய்ங்க !
அவங்க அந்த மாறி போட்டோ எடுக்குறது தப்பா இல்லாமயே இருந்தாலும் , 10 பேர் அவங்க இஷ்டத்துக்கு நிக்க சொல்லி எடுக்குறப்போ, எனக்கே ஒரு மாதிரி தான் இருந்துச்சு. அவ்வளவு விஷயங்கள் அவங்க போட்டுகிட்டு அவங்க அவங்களுக்கான ஆசைகள் அப்டி இப்டினு கடவுள நெனச்சு இவ்ளோ கஷ்ட பட்டு அவங்க நேர்த்தி கடன செலுத்துறாங்க , அங்க நாமளும் போய் இன்னு கஷ்டத்த குடுக்க வேணாம். இது என்னோட தனிப்பட்ட கருத்து. இனிமேல் இந்த மாறி இல்லாம இருந்தா இன்னுமே நல்லாருக்கும்னு நெனைக்றேன்.
இருக்கறத இருக்கற மாறி காட்டுனா இன்னுமே அழகா இருக்கும். அவ்ளோதான் !
குறிப்பு : இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.
நன்றி வணக்கம் 🙏🏼