தெரிந்தும் தெரியாத தமிழரின் பெருமை

  • Home
  • India
  • Coimbatore
  • தெரிந்தும் தெரியாத தமிழரின் பெருமை

தெரிந்தும் தெரியாத தமிழரின் பெருமை தமிழர்களின் தெரிந்தும் தெரியாத வீரம் வரலாறு உணவு பழக்க வழக்கங்கள் கூறும் தளமாகும்..

https://youtu.be/ab1uUPrKzEQ
21/12/2024

https://youtu.be/ab1uUPrKzEQ

Unlock the secrets to achieving unparalleled success and reaching new heights by mastering your mindset! In this video, we'll dive into the world of self-imp...

https://youtu.be/Yxfjrhgad9Y
21/12/2024

https://youtu.be/Yxfjrhgad9Y

திருவண்ணாமலை, தமிழ்நாட்டின் புனித நகரத்தின் மர்மங்களை ஆராயுங்கள். கார்த்திகை என்ற பெருமிதமுள்ள திருவிழாவின் ...

https://youtu.be/-NU1gGdETxg--- # # # **கடவுள் சிலையும் சுடர்விளக்கும்**  (Statue and the Eternal Lamp)  நான் சிறு வயதில...
30/11/2024

https://youtu.be/-NU1gGdETxg

---

# # # **கடவுள் சிலையும் சுடர்விளக்கும்**
(Statue and the Eternal Lamp)

நான் சிறு வயதில், பாட்டியின் ஊருக்கு சென்ற தருணங்கள் இன்றும் என் நினைவில் உயிரோடு இருக்கிறது. அந்த ஊர் காடுகளால் சூழப்பட்ட ஒரு தொன்மையான கிராமம். அங்கேயே, நான் என்னை மாறி கொண்ட ஒரு அனுபவத்தைப் பெற்றேன்.

ஒரு மாலையில், நிலவு ஒளி நிலத்தில் பரவியிருக்கும் நேரம், பாட்டி என்னை கிராமத்து பழமையான கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் அமைந்த இடம் அவ்வளவு அமைதியானது, ஆனால் அதில் ஒரு மாயம் இருந்தது. அந்த இடம் 500 ஆண்டுகளாக இருக்கும் எனச் சொன்னார்கள். கோவிலின் மையத்தில், வெண்கலத்தில் செய்யப்பட்ட பழைய கடவுள் சிலை இருந்தது. அதன் அருகே ஒரு சுடர்விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது.

நான் பாட்டியிடம் கேட்டேன், "இந்த சுடர்விளக்கு ஏன் எப்போதும் அணையாது?"
அவர் புன்னகையுடன் சொன்னார், "இந்த விளக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது. இதை எரிய வைக்க கிராம மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் சிறந்த நினைவுகளை பகிர்ந்து கொடுப்பார்கள். அந்த நினைவுகள் தான் இவ்விளக்கின் எண்ணெய்."

அது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நான் கூட என் சிறு நினைவுகளை பகிர விரும்பினேன். அந்த நினைவுகளைச் சொன்ன பிறகு, அன்றிரவில் எனக்கு உள்நிம்மதியான தூக்கம் கிடைத்தது.

இப்போது, அச்சிலையின் மயக்கம் என் மனதில் என்றும் நிற்கிறது. காலம் போனாலும், நமது நல்ல நினைவுகளும் தொன்மையான பாரம்பரியமும் இணைந்தே வாழும் என்று புரிந்தேன்.

*கடவுள் சிலையும் சுடர்விளக்கும்* (Statue and the Eternal Lamp) நான் சிறு வயதில், பாட்டியின் ஊருக்கு சென்ற தருணங்கள் இன்றும் என் நி...

View the content at https://youtu.be/lDENb1ISTGA 🎬👏💻😊 நண்பர்களே மேலே கொடுத்துள்ள youtube வீடியோவின் லிங்கை பார்க்குமாறு ...
19/11/2024

View the content at https://youtu.be/lDENb1ISTGA 🎬👏💻😊

நண்பர்களே மேலே கொடுத்துள்ள youtube வீடியோவின் லிங்கை பார்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ராவணனின் வரலாறை இந்த வீடியோ மூலம் தெரிவிக்க உள்ளேன். ஆதலால் இந்த youtube வீடியோவை தயவு செய்து பார்த்துக் கொள்ளுங்கள். கொள்ளுங்கள்....

இராமாயணம் காட்டிய பழமொழிஅனுமன் சீதையைத் தேடி முதன் முதலாக இலங்கையை அடைந்தார். அங்கு இலங்காபுரியின் காவல் தெய்வமான லங்கா,...
12/02/2024

இராமாயணம் காட்டிய பழமொழி

அனுமன் சீதையைத் தேடி முதன் முதலாக இலங்கையை அடைந்தார். அங்கு இலங்காபுரியின் காவல் தெய்வமான லங்கா, அனுமனைப் பார்த்து நீ யார்? என்னோட அனுமதி இல்லாமல் நீ இலங்கைக்கு செல்ல முடியாது என்று, அனுமன் தனது கட்டைவிரலை மற்ற விரல்களுக்குள் மடக்கி மோகதக் கைகளால் ஓங்கி அவளது உச்சி மண்டையில் குத்த, லங்கா தேவி சாப விமோசம் பெற்று இனி எனக்கு இங்கு என்ற வேலை என ஓடிவிட்டது. ஆகவேதான் நமது சாபங்கள் தீர குட்டுப் பட்டாலும் மோதகக் கையால் குட்டுப்பட வேண்டும் என்பது பின்னாளில் மோதிர விரலால் குட்டுப்பட வேண்டும் என மாறியது...

இராமாயணம் காட்டிய பழமொழிவாலியின் எதிரில் நின்று போர் புரிபவர்களின் பலத்தில் பாதி வாலிக்கு போய்விடும் என்பதால் இராமன் மறை...
12/02/2024

இராமாயணம் காட்டிய பழமொழி

வாலியின் எதிரில் நின்று போர் புரிபவர்களின் பலத்தில் பாதி வாலிக்கு போய்விடும் என்பதால் இராமன் மறைந்திருந்து தாக்க முயற்சிக்கிறார். அப்போது ஏழு மரங்கள் வளைந்து நெளிந்து இருந்ததால் முடியாமல் போயிற்று. மேலும்
வாலியை வதைக்க வேண்டுமானால் ஏழு மரங்கள் ஒரு நேர்க்கோட்டில் வரும்போது அந்த மரங்களைத் துளைத்த அம்பினால் தான் வாலிக்கு மரணம் என அறிகிறான் இலக்குவணன். அப்போது தான் மரங்கள் ஏழும் ஒரே நேர்க்கோட்டில் வந்து அடைவதற்கான ஒரு சூட்சம வழி இருப்பதை அறிந்தான். ஆம், இலக்குவணன் ஆதிசேஷனின் அவதாரம், ஆதிஷேசன் என்பது பாம்புகளின் தலைவன். அப்போதுதான் அறிகிறான். அமிர்தம் கடைந்தபோது சோர்வுற்ற வாசுகி பாம்பு யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாதென பூமிக்குள் வளைந்து நெளிந்து அப்படியே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. அதன் மீது வளர்ந்த அந்த ஏழு மரங்களும் வரிசையாக இல்லாமல் வளைந்து நெளிந்து காணப்பட்டது என்பதை இலக்குவணன் உணர்கிறான். அப்போது ஶ்ரீராமரிடம் அண்ணா நான் சமிக்ஞை செய்யும் பொழுது நாண் ஏற்றுங்கள் என்று கூறிவிட்டு, வாசுகிப் பாம்பின் வால் பகுதியை தனது கட்டைவிரலால் மிதிக்கிறான். வாசுகி நமது தலைவர் ஆதிஷேசன் ஏதோ நம்மிடம் கூற விழைகிறார் என்று எண்ணி தனது சோம்பலை முறித்தது. அடுத்த கணமே இலங்குவணன் சமிக்ஞைகள் கொடுக்க ஶ்ரீராமர் அம்பு எய்ய மரங்கள் ஏழு நேர்க்கோட்டில் வந்தடைய, ஏழு மரங்களையும் துளைத்த அம்பு வாலியின் மார்பைத் துளைத்தது. இதனால் தான் பாம்பின் கால் பாம்பு அறியும் பழமொழி வந்தது...

இராமாயணம் காட்டிய பழமொழிஒருமுறை ஶ்ரீராமர் மடிமீது சீதாதேவி உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே காக்காசூரன் காமவெறியில...
12/02/2024

இராமாயணம் காட்டிய பழமொழி

ஒருமுறை ஶ்ரீராமர் மடிமீது சீதாதேவி உறங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே காக்காசூரன் காமவெறியில் சீதையின் மார்பை கொத்துகிறேன். இதனால் சீதாதேவிக்கு அவ்விடத்தில் இரத்தம் வழிகிறது. இதனைக் கண்ட ஶ்ரீராமர் தனது மடிமீது உறங்கிய சீதையை தொந்தரவு செய்யாத வண்ணம் தான் தாங்கள் அமர்ந்திருந்த தர்ப்பைப் பாயிலிருந்து ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதில் பிரம்ம மந்திரம் ஓதி பிரம்மாஸ்திரத்தை காக்கா சூரன் மீது ஏவுகிறான். இதனால் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழி உருவாயிற்று...

❤️❤️  #வாழை_இலை... ❤️❤️ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா ??? இயற்கையோட சேர்ந்த...
03/04/2023

❤️❤️ #வாழை_இலை... ❤️❤️

ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம்... வாழை இலை நாகரிகம் தெரியுமா ???

இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க.

ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம்.

அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது.

அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம்.

அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம தாத்தன் பாட்டிக்கு இருந்த ஆரோக்கியம்.

எதையும் அதுகிட்ட இருந்து நேரடியா எடுத்துக்கிட்டு, அதுக்குத் தேவையானதை நேரடியாக் கொடுத்திடணும். இதுதான் நம்ம பழைய வாழ்க்கை.

வாழை இலை... நாம நினைச்சாலும் நம்மகிட்ட இருந்து விலக்க முடியாத சொல்தானேங்க இது!

என்னதான் எவர்சில்வர், பீங்கான் தட்டுகள், பேப்பர் பிளேட்டுகள் வந்து கடந்துபோய் பிளாஸ்டிக் இலைகள்ன்னுலாம் விநோதமா முயற்சி செஞ்சாலும் அம்புட்டையும் வாழை இலைகள் `அடிச்சுத் தூக்கிருதுல'?

பொது நிகழ்ச்சி, வீட்டு விழாக்கள், உணவகம்ன்னு எங்கும் `இலைகள்'மயம்!

சரி, வாழை இலையிலயும் அந்தச் சாப்பாட்டு முறையிலயும் அப்பிடி என்ன இருக்கு? இலைச் சாப்பாட்டுல நாம என்னவெல்லாம் கூத்துகள் பண்றோம்?

சைவமோ அசைவமோ, எதுவா இருந்தாலும் இலைபோட்டுச் சாப்பிட்டா அது எப்பேர்ப்பட்ட செரிமானக் கோளாற்றையும் சரிபண்ணிடும்.

மதுரப்பக்கம் கொடலு கொழம்பா, காரைக்குடி வத்தக்கொழம்பா, கிராமத்து நாட்டுக்கோழிக் கொழம்பா... பொறுக்காத சூட்டோடகூட சோத்துல ஊத்தலாம். குழம்பு வாசமும், சூட்டுல பொசுங்கின இலை வாசமும் சேர்ந்து... அம்மாடி, மயக்கும்!

தோப்புல இருந்து வர்ற இலைகள்ல பூச்சி, மண் அழுக்குலாம் இருக்கும். அதைச் சுத்தம் பண்றதுக்குத்தான் தண்ணி தெளிச்சுத் தொடைக்கிறது.

அகண்ட பக்கம் வலது கைக்கு வசதி. சோறு வகையெல்லாம் இங்கதான் வைக்கணும்.

இலையோட மேல் பக்கம், `தொடு கறி'ங்க. இடப்பக்கம், அப்பளம். மொதல்ல, இலையை எப்பிடிப் போடுறது?

குறுகின பக்கம் இடது கைக்கு வரணும். சோத்தைத் தானே நிறைய வைக்கச் சொல்லுவோம்? அதுக்குத்தாங்க இந்த அமைப்பு!

இலையை உள்பக்கமா மடிச்சா உறவு நீடிக்கும்... வெளிப்பக்கமா மடிச்சா, முறியும்ன்னு சொல்றது, பழையகால நம்பிக்கை.

பந்திகள்ல எதிரெதிர்ப்பக்கமா உக்காந்திருப்போம்.

வெளிப்பக்கமா மடிக்கும்போது நாம சாப்பிட்ட எச்சில் அடுத்தவங்க இலையில பட்டிரும்ங்கிற சுகாதாரத்தைச் சொல்லுற `பொதுவெளி நாகரிகம்' தான்ங்க அது!

நம்மைச் சப்பணம் போட்டு உட்கார வச்சிக் கத்துக்குடுக்கிற இந்த இலைகூட நமக்கு வாத்தியாருதான்!!

I've just reached 2K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
06/01/2023

I've just reached 2K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

❤️  #தமிழ்ப்பேரரசுகள் ❤️உலகிலே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியலில் முதல் நான்கில், மூன்று தமிழ் பேரரசு என்பதன...
24/11/2022

❤️ #தமிழ்ப்பேரரசுகள் ❤️

உலகிலே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியலில் முதல் நான்கில், மூன்று தமிழ் பேரரசு என்பதனை மாணவர்கள் கேட்டு அதிர்ந்தார்கள். அவர்களுக்குரிய பிரிட்டிஷ் பேரரசு நாற்பத்தி எட்டாவது இடத்தில் இருந்தது.

சேர ஆட்சிகாலம் - 430 கி.பி. - 1102 = 1532 ஆண்டுகள்
சோழ ஆட்சிகாலம் - 301 கி.பி. - 1279 = 1580 ஆண்டுகள்
பாண்டியர் ஆட்சிகாலம் - 580 கி.பி. -1345 = 1925 ஆண்டுகள்

❤️ #பாண்டியர்கள் ❤️

#முற்காலப்பாண்டியர்கள்

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப்பெருவழுதி
பெரும்பெயர் வழுதி

#கடைச்சங்கப்பாண்டியர்கள்

முடத்திருமாறன்
மதிவாணன்
பசும்பூண் பாண்டியன்
பொற்கைப்பாண்டியன்
இளம் பெருவழுதி
அறிவுடை நம்பி
பூதப்பாண்டியன்
வெற்றிவேற் செழியன்
கூடக் காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
உக்கிரப்பெருவழுதி
மாறன் வழுதி
நல்வழுதி
குறுவழுதி
இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்
தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
நம்பி நெடுஞ்செழியன்

#இடைக்காலப்பாண்டியர்கள்

கடுங்கோன் → கி.பி. 575-600
அவனி சூளாமணி → கி.பி. 600-625
செழியன் சேந்தன் → கி.பி. 625-640
அரிகேசரி → கி.பி. 640-670
ரணதீரன் → கி.பி. 670-710
பராங்குசன் → கி.பி. 710-765
பராந்தகன் → கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் → கி.பி. 790-792
வரகுணன் → கி.பி. 792-835
சீவல்லபன் → கி.பி. 835-862
வரகுண வர்மன் → கி.பி. 862-880
பராந்தகப்பாண்டியன் → கி.பி. 880-900

#பிற்காலப்பாண்டியர்கள்

மூன்றாம் இராசசிம்மன் → கி.பி. 900-945
அமரப்புயங்கன் → கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் → கி.பி. 945-955
வீரபாண்டியன் → கி.பி. 946-966
வீரகேசரி → கி.பி. 1065-1070
மாறவர்மன் சீவல்லபன் → கி.பி. 1132-1162
சடையவர்மன் சீவல்லபன் → கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் → கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் → கி.பி.1150-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் → கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் → கி.பி. 1238-1239
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1239-1251
சடையவர்மன் விக்கிரமன் → கி.பி. 1241-1254
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் → கி.பி. 1251-1281
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் → கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் → கி.பி. 1276-1293

#தென்காசிப்பாண்டியர்கள்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் → கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் → கி.பி. 1473-1506
குலசேகர பாண்டியன் → கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் → கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் → கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் → கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் → கி.பி. 1564-1604
வரதுங்கப்பாண்டியன் → கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் → கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் → (தகவல் இல்லை)

❤️ #சோழர்கள் ❤️

#முற்காலச்சோழர்கள்

செம்பியன்
எல்லாளன்
இளஞ்சேட்சென்னி
கரிகால் சோழன்
மாற்றார் இடையாட்சி
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான்
பெருநற்கிள்ளி

#இடைக்காலச்சோழர்கள்

விசயாலய சோழன் → கி.பி. 848–881
ஆதித்த சோழன் → கி.பி. 871–907
பராந்தக சோழன் I → கி.பி. 907–955
கண்டராதித்தர் → கி.பி. 955–962
அரிஞ்சய சோழன் → கி.பி. 962–963
சுந்தர சோழன் → கி.பி. 963–980
ஆதித்த கரிகாலன் → கி.பி. 966–971
உத்தம சோழன் → கி.பி. 971–987
இராசராச சோழன் I → கி.பி. 985–1014
இராசேந்திர சோழன் → கி.பி. 1012–1044
இராசாதிராச சோழன் → கி.பி. 1018–1054
இராசேந்திர சோழன் II → கி.பி. 1051–1063
வீரராஜேந்திர சோழன் → கி.பி. 1063–1070
அதிராஜேந்திர சோழன் → கி.பி. 1067–1070

#சாளுக்கியசோழர்கள்

குலோத்துங்க சோழன் I → கி.பி. 1070–1120
விக்கிரம சோழன் → கி.பி. 1118–1135
குலோத்துங்க சோழன் II → கி.பி. 1133–1150
இராசராச சோழன் II → கி.பி. 1146–1173
இராசாதிராச சோழன் II → கி.பி. 1166–1178
குலோத்துங்க சோழன் III → கி.பி. 1178–1218
இராசராச சோழன் III → கி.பி. 1216–1256
இராசேந்திர சோழன் III → கி.பி. 1246–1279

❤️ #சேரர்கள் ❤️

பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் → கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் → கி.பி. 71-129
பல்யானைச்செல்கெழுகுட்டுவன் → கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் → கி.பி. 106-130
சேரன் செங்குட்டுவன் → கி.பி. 129-184
ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் → கி.பி. 130-167
அந்துவஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
மாந்தரஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
வாழியாதன் இரும்பொறை → கி.பி. 123-148
குட்டுவன் இரும்பொறை → (காலம் தெரியல)
பெருஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறை → கி.பி. 165-180
பெருஞ்சேரலாதன் → கி.பி. 180
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை → (காலம் தெரியல)
குட்டுவன் கோதை → கி.பி. 184-194
மாரிவெண்கோ → காலம் தெரியல
வஞ்சன் → காலம் தெரியல
மருதம் பாடிய இளங்கடுங்கோ → காலம் தெரியல
கணைக்கால் இரும்பொறை → காலம் தெரியல
கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை → காலம் தெரியல
பெருமாள் பாஸ்கர ரவிவர்மா → கி.பி. 8ஆம் நூற்றாண்டு

❤️ #பல்லவப்பேரரசுகள் ❤️

#முற்காலப்பல்லவர்கள்

பப்பதேவன்
சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I

#இடைக்காலப்பல்லவர்கள்

குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II கி.பி. 400 - 436
சிம்மவர்மன் I II கி.பி. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I

#பிற்காலப்பல்லவர்கள்

சிம்மவர்மன் III
சிம்மவிஷ்ணு கி.பி. 556 - 590
மகேந்திரவர்மன் I கி.பி. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கி.பி. 630 - 668
மகேந்திரவர்மன் II கி.பி. 668 - 669
பரமேஸ்வரவர்மன் கி.பி. 669 - 690
நரசிம்மவர்மன் II (ராஜசிம்மன்) கி.பி. 690 - 725
பரமேஸ்வரவர்மன் II கி.பி. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) கி.பி. 731 - 796
தந்திவர்மன் கி.பி. 775 - 825
நந்திவர்மன் III கி.பி. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) கி.பி. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) கி.பி. 850 - 882
அபராஜிதவர்மன் கி.பி. 882 - 901

இவண்
சோழன்.திரு.இங்கர்சால், நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்

நேற்றைய வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே தவிர, தமிழ் பேரரசின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பயிற்றுவிக்கப்பட வில்லை. ஏன் நாங்கள் படித்த காலத்தில் கூட அப்படியொரு கல்வி இருந்ததாக நினைவிலில்லை. சேர சோழ பாண்டியர் எனும் சொல்லாடல் மூன்று மன்னர்கள் என்று குறுகிய புரிதலை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. இலக்கியங்களில் மன்னர்கள் பெயர்கள் வரும்போது, அதனை ஒரு பேரரசின் அங்கமாக நாம் பார்த்ததில்லை. இவற்றை உடைக்க முதலில் நம்மிடம் இருந்த பேரரசின் மன்னர்களின் பெயர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் கதையில் இருக்கும் 5 சோழப் பெயர்களைப் பொதுவாக எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் சேரப்பேரரசு, பாண்டியப்பேரரசு பெயர்களைக் கேட்டால், ஒன்று இரண்டு என்று திக்கித்திணறி நிற்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது. இதனைக் கட்டுடைப்போம் அதற்காக நான் தொகுத்த பட்டியல் கீழ்வருமாறு. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துரையுங்கள், முடிந்தவரை பரப்புங்கள், நன்றி...

13/09/2022

கடந்த நூறு வருடத்திற்கு முன் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை...

Address

Coimbatore

Telephone

+919344747770

Website

Alerts

Be the first to know and let us send you an email when தெரிந்தும் தெரியாத தமிழரின் பெருமை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share