Like Podu

Like Podu Like podu is a new innovative program from Puthuyugam about Facebook

20/08/2026

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Prompt ShareStudio portrait of a seated young woman in a traditional draped kanjivaram sari, deep maroon and burnt orang...
05/05/2026

Prompt Share

Studio portrait of a seated young woman in a traditional draped kanjivaram sari, deep maroon and burnt orange stripes with woven metallic accents, posed on the floor against a seamless neutral gray backdrop. She sits three-quarter, arms folded loosely over her knees, long glossy dark hair cascading in waves past her waist, fingers relaxed with simple rings.
Layered colorful bangles cover her forearms and wrists in intricate stacked patterns, catching soft highlights; ornate silver chandelier earrings andlayered oxidized necklaces add detailed texture. Small decorative bindi on her forehead, natural warm makeup, contemplative sideward gaze, serene and introspective expression. Soft directional studio lighting from the left creates gentle sculpting shadows and a subtle rim light, emphasizing fabric folds, skin texture, and jewelry reflections.
Photorealistic, high resolution, fine detail on textiles and metalwork, shallow depth of field (85mm portrait feel), cinematic color grading with warm tones and gentle contrast, capture mood of timeless elegance and quiet dignity, crisp focus on face and bangles, slight film grain for tactile richness. Don't change the face.

01/05/2026

Lovely show and lovely team at Puthiya thalaimurai

30/04/2026

What is AI Agent?

02/04/2026

53 Sundays (2025) | Netflix | Family | Dialogue | Comedy

'The Farewell' போன்ற படங்கள் குடும்ப உறவுகளின் சிக்கல்களைப் பேசியது என்றால், '53 Sundays' அந்தச் சிக்கல்களுக்கு இடையே நாம் எப்படித் தொலைந்து போகிறோம் என்பதைப் பேசுகிறது.

ஒரு நடுத்தர ஸ்பானிஷ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உடன்பிறப்புகள், வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கள் வயதான தந்தையைச் சந்திக்க ஒன்று கூடுகிறார்கள். அப்படி ஒரு வருடத்தில் வரும் அந்த 53 ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களுக்குள் நடக்கும் பாசாங்கு நிறைந்த சந்திப்புகளும், ஒருவருக்கொருவர் ஒளித்து வைக்கும் ரகசியங்களுமே இந்தப் படத்தின் மையம்.

சலிப்புத்தட்டினாலும் பரவாயில்லை என்று, இயக்குநர் மார்க் ஹாரிஸ், ஒரு வீட்டிற்குள்ளேயே கேமராவை நகர்த்தியிருக்கிறார். ஆரம்பத்தில் வரும் நீண்ட வசனங்கள் சற்றே களைப்படைய வைக்கிறது.
நம்ம ஊர் விசு, கிரேசி மோகன் வசனங்களை மிக்சியில் கலந்தது போல, கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அதில் உறவுகளை தவிர்க்கும் நம்மை நாமே கேலி செய்து கொள்ளும் ஒரு ஆழமான எமோஷன் ஒளிந்திருக்கிறது. இதுதான் படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை முரண் மற்றும் ஹைலைட்.

யார் பார்க்கலாம்?
வார இறுதி நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து, ஒரு நல்ல 'பீல்-குட்' (Feel-good) படம் பார்க்க விரும்புபவர்கள்.

வசனங்களின் ஆழத்தை ரசிப்பவர்கள்.

"நாமும் நம் அப்பாவோடு பேசி எத்தனை நாள் ஆகிறது?" என்று ஒரு நிமிடம் யோசிக்கத் துணியும் எவரும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், '53 Sundays' ஒரு வருடத்தின் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமல்ல; நம் வாழ்நாளில் நாம் தவறவிட்ட உறவுகளின் நாட்குறிப்பு!
- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

#யாதெனக்கேட்டேன்

திரிஷாவுக்கும், ஏ.ஐ சினிமாவுக்கும் என்ன தொடர்பு?திரிஷா இப்போது போல எப்போதும் பரபரப்பாக பேசப்பட்டதில்லை. ஆனால் இருபது வரு...
06/03/2026

திரிஷாவுக்கும், ஏ.ஐ சினிமாவுக்கும் என்ன தொடர்பு?

திரிஷா இப்போது போல எப்போதும் பரபரப்பாக பேசப்பட்டதில்லை. ஆனால் இருபது வருடங்களுக்கும் மேலாக வெளிச்சத்திலேயே இருக்கிறார். எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் அவருடைய இந்தத் தன்மை அவரைப்பற்றி நம்மை பேச வைக்கிறது. அவருடைய அழகு, அவருடைய நடிப்பு, அவருடைய ஆர்வம் என அவரை ஞாபகம் வைத்துக்கொள்ள ஆளாளுக்கு ஒரு காரணம் இருக்கிறது.

அதே போல தினமும் ஒரு ஏ.ஐ அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. அனைத்தையும் ஞாபகம் வைத்துக்கொள்வதும், பயன்படுத்துவதும் சாத்தியமே இல்லை. நமது சினிமாவுக்கு எந்த காரணத்துக்காக ஏ.ஐ பயன்படப்போகிறது என்பதை தீர்மானித்துவிட்டால், அதற்கான ஏ.ஐ கருவியை நமது சினிமாவே தேர்ந்தெடுத்துவிடும்.

நான் எழுதியுள்ள ஏ.ஐ சினிமா புத்தகத்தைப் புரட்டினால், இது பற்றியும், ஏ.ஐ பற்றிய புத்தகத்தில் திரிஷாவைப் பற்றி ஏன் குறிப்பிட்டேன் என்பது பற்றியும், உங்களுக்குப் புரியும்.

இந்தப் புத்தகம் ஏ.ஐ பயன்படுத்திப் படமெடுக்க ஆர்வமாக உள்ளோருக்கு உதவும்.

ஏ.ஐ சினிமா
ஆசிரியர் - ISR செல்வகுமார்
விலை ரூ.180
டிஸ்கவரி புக் பேலஸ்
ஃபோன் - 87545 06060, 87545 07070

1000 நாட்களில் ஏதாவது 10 நாட்கள் மட்டுமே நம் நினைவில் இருக்கும். ஏனென்றால் அந்த பத்து நாட்களும் நமக்குப் பிடித்த அல்லது ...
05/03/2026

1000 நாட்களில் ஏதாவது 10 நாட்கள் மட்டுமே நம் நினைவில் இருக்கும். ஏனென்றால் அந்த பத்து நாட்களும் நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காத சில மனிதர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் நடந்திருக்கும். அந்த சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் நம் ஞாபகத்தில் இருக்கும். அது போலத்தான் தினமும் ஆயிரம் ஏ.ஐ கருவிகள் வந்தாலும் எது நீங்கள் தயாரிக்கப்போகும் சினிமாவுக்குத் தேவை என்பதை மறக்க முடியாத சம்பவங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகம் ஏ.ஐ சினிமா தயாரிக்க முயற்சிப்பவர்களுக்காக.

ஏ.ஐ சினிமா
ஆசிரியர் - ISR செல்வகுமார்
விலை ரூ.180
டிஸ்கவரி புக் பேலஸ்
ஃபோன் - 87545 06060, 87545 07070

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Like Podu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category