Madras Marabinar - மெட்ராஸ் மரபினர்

  • Home
  • India
  • Chennai
  • Madras Marabinar - மெட்ராஸ் மரபினர்

Madras Marabinar - மெட்ராஸ் மரபினர் Madras Marabinar was formed for the sole purpose of documenting and archiving lives of Chennai. A gr

We are glad to have Chennai Mayor R. Priya and Corporation Commissioner Gagandeep Singh Bedi, at our photography exhibit...
28/03/2022

We are glad to have Chennai Mayor R. Priya and Corporation Commissioner Gagandeep Singh Bedi, at our photography exhibition held in Kannagi Nagar on 27.03.2022.

After inaugurating the art district in Kannagi Nagar, the esteemed guests visited the exhibition place, looked at the photographs taken by the kids and interacted with them to appreciate their work. This keeps us going forward.

We are very lucky and blessed to be in   Exhibition, Concert at part - 2019. On behalf of team Madras Marabinar - மெட்ரா...
05/09/2019

We are very lucky and blessed to be in Exhibition, Concert at part - 2019. On behalf of team Madras Marabinar - மெட்ராஸ் மரபினர் and we would like to thank Chennaiuccn and Aanmajothi for helping us to show case the works of eight talented photographs form a marginalised community. We would like to thank Nizhal – Friends of Trees for gave such natural space for us to exhibit the works of this kids. We wanted to to built a bridge between a two different life style group of our city through this exhibition, at the end of that evening, we found number of good positive feedback and critical reviews from the visitor as well as the guest. more importantly, many photographs stopped the people who jogged inside in the park and made them to think and speak. This exhibition created a conversation between those two groups. Our Professor Gopalan Ravindran's Concept was the initial effort and key factor for us to conduct every exhibition in this format. We working for people so the works should reach the people...(Those who visited who come to know)... And last but not least, Shreya Nagarajan Singh Arts Development Consultancy and Pranathi Ram for provided this stage for us. Without your support its not at possible. Work freedom led us to execute this exhibition in our own style. Through out the month been with us a side and made this event possible.. And a special thanks to Shreya Nagarajan Singh for arranged a professional camera to the kids for their practices, this will definitely boost the kids to work more in the field of photography and journalism.. Looking forward to work more in the future... This exhibition became one of the important milestone in our journey.

பேரன்புடன் அனைவரையும் வரவேற்கின்றோம்...மெட்ராஸ் மரபினர் - விளிம்பின் ஒளிகள் புகைப்பட கண்காட்சி... 💚💚💚We are very happy t...
30/08/2019

பேரன்புடன் அனைவரையும் வரவேற்கின்றோம்...மெட்ராஸ் மரபினர் - விளிம்பின் ஒளிகள் புகைப்பட கண்காட்சி... 💚💚💚
We are very happy to welcome you all for this photo exhibition 💚💚💚

பல நெருக்கடி இன்னல்களுக்கு  பின்பு "விளிம்பின் ஒளிகள்" புகைப்பட கண்காட்சி சென்னைப் பல்கலைக்கழக, மணிக்கூண்டு கட்டடத்தில் ...
18/05/2019

பல நெருக்கடி இன்னல்களுக்கு பின்பு "விளிம்பின் ஒளிகள்" புகைப்பட கண்காட்சி சென்னைப் பல்கலைக்கழக, மணிக்கூண்டு கட்டடத்தில் வெற்றிகரமாக நிறைவேறியது...

மே ஒன்று முதல் மே பத்தாம் தேதி வரை மெட்ராஸ் மரபினர் நடத்திய புகைப்பட பயிலரங்கில் வியாசர்பாடியில் இயங்கி வரும் ஆர்வம் என்ற தன்னார்வல நிறுவனத்தை சார்த்த எட்டு குழந்தைகளுக்கு அடிப்படை புகைப்படம் எடுக்கும் வகுப்புகளுடன், முற்றத்தின் "மக்களுக்கான இதழியல்" கோட்பாடை இணைத்து ஆவணப்படுத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கைபேசி மூலம் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பொது மக்கள் பார்வைக்காக கடந்த இரண்டு நாட்கள் மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னைப் பல்கலைக்கழக, மணிக்கூண்டு கட்டத்தில் வைக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது... குழந்தைகள் தங்கள் நிலத்தையும் வாழ்வையும் உறைய வைத்து காட்டிய படங்கள் வடசென்னை வியாசர்பாடி வாழ்வியலை ஆகா சிறந்த வடிவில் ஆவணம் செய்தது பலரை ஆச்சரியப்படவைத்தது... பத்து நாள் வகுப்பில் இவ்வளவு நேர்த்தியாக அதுவம் கைபேசியில் இவ்வாறு புகைப்படங்களை குழந்தைகளால் எவ்வாறு எடுக்கமுடிந்தது என்று கண்காட்சிக்கு வந்த பலர் எங்களை கேட்டனர். அதற்க்கு நாங்கள் குடுத்த பயிற்சியே காரணம் என்றும் பலர் எங்களை பாராட்டினார்கள்...

உண்மையில் நாங்கள் தான் அக்குழந்தைகளிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொண்டோம்... காரணம் அவர்களால் தான் இந்த வாழ்வியலை எளிய முறையில் ஆவணப்படுத்த முடிந்தது... நாங்கள் கூறிய கருத்தான "புகைப்படம் என்பது அழகியலை தாண்டி வாழ்வியல் சார்ந்தது" என்பதை நன்கு உள்வாங்கி அவர்கள் தங்கள் பார்க்கும் அனைத்தையும் நேர்த்தியாக பதிவு செய்ததே இந்த கண்காட்சியின் வெற்றி....

அவர்கள் அவ்வாறு புகைப்படங்கள் எடுத்ததால் தான் எங்களால் அவற்றை சரிவர ஒழுங்கு நிலை படுத்த முடிந்து அவற்றை தலைப்பிற்கு ஏற்றவண்ணம் நிறுவல் செய்யமுடிந்தது... எங்கள் குழுவிற்கும் சிறுவர்கள் பெருமை சேர்த்தனர்.

மேலும் இது வெறும் கண்காட்சியாக மட்டும் இருந்து விட கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம் அதன் வெளிப்பாடு தான் "விளிம்பின் ஒளிகள்" இதழ்... ஆவணப் படுத்தியதை புத்தகவடியில் கொண்டுவந்து அதை பொதுமக்கள் பயன் பாட்டில் இருக்கும் வண்ணம், பொது நூலகங்களுக்கு அளிக்கும் வண்ணம் திட்டமிட்டோம், பணம் தட்டுப்பாட்டால் தற்போது சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் மட்டுமே ஒரு புத்தகத்தை எங்களால் குடுக்கமுடிந்தது, கூடிய விரைவில் சென்னையில் உள்ள முக்கிய பொது நூலகங்களுக்கு "விளிம்பின் ஒளிகள்" சென்றடையும் என்பதையும் உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்...

எங்களை பொறுத்தவரை மக்களுக்கான புகைப்பட கண்காட்சி என்பது ஒரு பொது வெளியில் நடைபெற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம், உறுதியாகவும் இருப்போம்... ஆதாலால் தான் எங்களது முதல் புகைப்பட கண்காட்சியான "உழைக்கும் சனங்க" கடந்த ஆண்டு(2018) மே 20, அன்று உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய சென்னை காசிமேடில் எமது மீனவ குடிகள் வசிக்கும் தழுப்புக்கல் பகுதியில் ஈர கவுச்சி காற்றில் உழைக்கும் மக்களின் வியர்வை வாசத்தில் சென்னையின் அசல் உழைக்கும் மக்களின் புகைப்பட பிரதிகளை பொது மக்கள் பார்வைக்கு வைத்தோம்...

அதன் தொடர்ச்சியாக வியாசர்பாடி வாழ்வியலை சிறுவர்களின் படைப்புக்கு முற்றத்தின் அறிவு ஆசான் முத்துராசா அவர்கள் சூட்டிய பெயர் தான் " விளிம்பின் ஒளிகள்" விளிம்பு நிலையில் உள்ள சிறுவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் நேர்த்தியை கற்று தங்கள் வாழ்விடத்திற்கு ஒளிசேர்க்கின்றனர் என்ற கருத்தை கொண்டு நாங்கள் செய்ய இந்த கண்காட்சிக்கு நாங்கள் முதலில் தேர்வு செய்த இடம் வியாசர்பாடி அம்பேக்கர் கலை கல்லூரி எதிரே உள்ள சாலை நடைமேடை தான், இடம் தேர்வு செய்ததற்கு காரணம் சிறுவர்களின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் வரவேண்டும் என்று தான்... இச்சிறுவர்களின் கள் திறமையை முதலில் அவர்களது பெற்றோர்கள் பார்க்க வேண்டும் என்பது தான் எங்களது பேராசை, ஒவ்வொரு சிறுவர்களின் வீட்டிற்கும் சென்று அவர்களது பெற்றோர்களுக்கு அழைப்பிதழ் குடுத்து அவர்களுக்கு தங்கள் குழந்தை செய்துகொண்டு இருக்கு மாபெரும் முயற்சியை விளக்கி கூறி அவர்கள்களை கட்டாயப்படுத்தி வரவேண்டும் என்று அன்பாக வேண்டுகோள்விடுத்துவந்தோம்...அருகில் இருக்கும் அம்பேத்கர் கலைக் கல்லூரிகே அவர்களது பெற்றோர்கள் யோசித்தனர், காரணம் அவர்களது ஒரு நாள் ஊதியம் வீணாகிவிடும் என்பது, அதனை நாங்கள் நன்கு புரிந்து கொண்டோம், ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் அடுத்த நாள் உணவு என்பது கேள்விக்குறி என்ற நிலைமையில் தான் இவர்களது வாழ்வியல் இருப்பதை அவர்களது இல்லத்திற்கு சென்று பார்க்கும் போது நாங்கள் உணர்ந்தது, நாங்கள் அவர்களிடம், ஒரு மணிநேரமாவது வந்து உங்கள் குழந்தைகளின் திறனை பார்த்து செல்லுங்கள் என்றதும் அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்....

ஆனால் தேர்தல் காலகட்டம், அரசியல் பிரச்சனைகள் வரும் என்று பல காரணங்களை காட்டி எங்களது ஆசையை அதிகார அரசு தகர்த்தது... மக்களின் வாழ்வியலை தான் சிறுவர்கள் படம் பிடித்தனர், ஆனால் அப்பகுதி காவல் துறை உதவி ஆணையர் படங்களை பார்த்து, குப்பை எல்லாம் ஒரு பிரச்சையா? அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் சுவர்கள் விரிசல் எப்போதும் இருப்பது தான், தண்ணீர் பிரச்சனைக்கு அவர்கள் என்ன தீர்வு காண போகிறார்கள் என்றார், நாங்கள் அதற்க்கு இது இங்கு உள்ள பிரச்சனையாக நாங்கள் கூறவில்லை சிறுவர்கள் அதை உணர்ந்து எடுத்துள்ளனர் என்று விளக்கிக்கூறினோம் , அதற்கு அவர் இங்கு ரவுடிகளை நாங்கள் பிடிக்கிறோம், ஒருவரை ஒருவர் வெட்டுகிறான் அதுகூட தான் பிரச்னை ஏன் சிறுவர்கள் அதை படம் பிடிக்கவில்லை என்று ஏளனம் செய்தார். மேலும் சிறுவர்களுக்கு நீங்கள் விளையாட்டுகளை சொல்லிகுடுங்கள், நீங்கள் செய்யும் எதுவும் சரி இல்லை, வேறுஏதோ நீங்க பண்ற மாறி இருக்கு என்று ஒரு ஒரு மக்கள் வாழ்வியல் சார்ந்த புகைப்படைகளையும் அவர் தூக்கிப்போடும் போதும் எங்களுக்குள் ஒரு திமிரு புடிச்ச கர்வம் வந்தது அது ஒரு புன்னகையாக வெளிவந்து நாம போற பாதை ரொம்ப பெரிய தான் இருக்கு என்று புரிந்து... மக்களுக்கான இதழியல் கோட்பாட்டின் வெற்றியை அந்த காவல் நிலையத்தில் நாங்கள் பார்த்தோம்....
கூறிய நாளில் கூறிய நேரத்தில் இதை நடத்தாவிட்டால் சிறுவர்கள் ஏமார்ந்து போய்விடுவார்கள் என்றும் இது எங்கள் வாழ்வியல் சார்த்த பிரச்னை நாங்கள் தான் பேச வேண்டும் என்று கருத்தில் கொண்டு எங்கள் துறை பேராசிரியர் கோ. ரவீந்திரன் ஐயாவிடம் கூறிய போது ஒரு கணம் கூட யோசிக்கலாம் நம் பல்கலைக்கழகத்திலே கண்காட்சியை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.. நாங்களும் மிக குறுகிய கால நேரத்தில் (ஒரு ஐந்து மணி நேரம்) பல்கலைக்கழக வளாகத்தில் வேண்டாம் என்று எடுத்துவைத்த சில பொருட்களை வைத்து புகைப்பட கண்காட்சி நடைபெறும் இடத்தை அமைத்தோம். எதிர்பார்த்தைவிட, கண்காட்சி அமைக்க பட்ட இடத்தை நாங்கள் சரிவர சீராக வடிவமைத்தது பொதுமக்கள் பலரது கவனத்தை ஈர்த்தது...

இருப்பினும் அந்த உயர் அதிகாரியின் அலட்சியத்தாலும் பயத்தாலும் தான் இச்சிறுவர்களின் பெற்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமுடியால் போனது அதனால் எங்களுக்கும் சிறுவர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றம்.

அடுத்ததாக, பல்கலைக்கழத்தில் வரலாற்று துறை ஆசிரியர் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட இடத்தில் வாகனங்கள் வரக்கூடாது என்று போடப்பட்ட தடுப்பணை நீக்கி, கண்காட்சிக்கு இடையூறாக தனது வாகனத்தை நிறுத்தியது மட்டும் அல்லாது நீங்க பண்றது ஏதும் சரி இல்லனு சொல்லிட்டு போனவர் பின்னாடியே, இந்திய இசை துறை (தமிழர்களின் பறை இல்லாத) ஆசிரியர் தனது வாகனத்தை விட்டு சென்றார் இடையூறாக.. மேலும் பல்கலைக்கழக சார்ஜெண்ட் ஒருவர் உள்ள புகைப்படங்களை எல்லாம் காணொளி படுத்தினர் குறிப்பாக அம்பேத்கர் மற்றும் கம்யூனிஸ்ட் தொடர்புடைய புகைப்படங்களை, நாங்கள் எதோ சட்ட விரோத செயலில் ஈடுபட்டது போல... இது பற்றி பதிவாளரிடம் பதிவிட்டோம், அவரோ சமாதான படுத்தும் முயற்சியே கடைபிடித்தார்...
இப்படி பல அரசியல் சூழலிலும், நெருக்கடியிலும் எங்களால் இந்த கண்காட்சியை சரிவர நடத்த முடிந்ததற்கு எங்கள் துறை தலைவர் குடுத்த தைரியம்தான்.

இடமாற்றம், அரசியல் தலையீடு என்று பல தடைகள் வந்த போதும்... பலரது வருகை பாராட்டு, சிறுவர்களுக்கு மிக பெரிய ஒரு ஊக்குதலை தந்தது எங்களுக்கு ரெட்டிக்கும் மகிழ்ச்சி. ஒரு நாள் என்று நாங்கள் ஏற்பாடு செய்த கண்காட்சிக்கு பலரது வேண்டுகோளுக்காக இரண்டு நாளாக புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது... நிகழ்ச்சியை மேலும் சிறப்பு செய்ய ஆவணப்பட சுயாதீன இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன், இதழியல் துறை பேராசிரியர்கள், ஒளிப்பதிவாளர் பழனி குமார் என்று பல சிறப்பு விருந்தினர்கள் வந்து சிறுவர்களுடன் பேசி அவர்களுக்கு பாராட்டும் தெரிவித்தனர்.

"விளிம்பின் ஒளிகள்" நூலை ஆர்.ஆர். சீனிவாசன் வெளியிட சென்னைப் பல்கலைக்கழக, இதழியல் துறை தலைவர் கோ. ரவீந்திரன் பெற்றுக்கொண்டார். மேலும் ஒரு புத்தகம் சென்னை பல்கலைக்கழக நூலகத்திற்கும், சென்னைப் பல்கலைக்கழக, இதழியல் துறை நூலகத்திற்கும், ஆர்வம் தொண்டு நிறுவனத்திற்கும் ஒரு புத்தகம் வழங்க பட்டது...

ஆர். ஆர். சீனிவாசன் ஐயா கூறியது போல எட்டு சிறுவர்களுக்கும் டிஜிட்டல் கேமரா ஒன்று வாங்க முயற்சிசெய்வோம். அவர்கள் அவர்களது வாழ்வியலை பதிவு செய்ய உதவி செய்வோம்..

கண்டிப்பாக இந்த புகைபடங்கள் அவர்களது நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் அவர்களது பகுதி வாழ் மக்கள் பார்வைக்கு கூடிய விரைவில் வைக்கப்படும், அதற்க்கான ஏற்பாடுகளும் செய்துகொண்டிருக்கிறோம்.

மேலும் இந்த புகைப்பட கண்காட்சிக்கு வந்தவர்கள் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் பலவற்றை கூறினார்கள். இந்த புகைப்பட கண்காட்சியை வேறு சில இடங்களில் வைப்பதற்கான அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

இவை அனைத்தையும் சாத்தியப்படுத்திய இந்த எட்டு விளிம்பின் ஒளிக்களுக்கு வண்ணம் பூசி இந்த உலகத்திற்கு அடையாளப்படுத்திவிட்டோம். இவர்களோடு என்றும் பயணிப்போம்... இவர்களை போன்று விளிம்பு நிலையில் உள்ள பலருக்கு இவர்கள் வண்ண ஒளியாய் திகழவேண்டும் என்பதே மெட்ராஸ் மரபினரின் பேராசை....

எங்களது அழைப்பினை ஏற்று வந்து சிறுவர்களை பாராட்டி எங்களுக்கு பக்கபலமாக இருந்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் முற்றம் மற்றும் மெட்ராஸ் மரபினர் சார்பாக பேரன்புடன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்ந்து எங்கள் நிலத்தையும் வாழ்வையும் உறைய வைத்து காட்டுவோம் படங்களாக....

- மெட்ராஸ் மரபினர்
#வடசென்னை #மெட்ராஸ்_மரபினர் #மதராஸ் #வாழ்வியல் #ஆவணம்

17/05/2019

Teenagers in the locality turn photojournalists with the help of Madras Marabinar, a collective comprising students of Journalism from Madras University

பலரது வேண்டுகோளுக்கிணங்க இரண்டாம் நாளாக மக்கள் பார்வைக்கு  "விளிம்பின் ஒளிகள்" புகைப்பட கண்காட்சி இன்று (17.05.2019) கால...
17/05/2019

பலரது வேண்டுகோளுக்கிணங்க இரண்டாம் நாளாக மக்கள் பார்வைக்கு "விளிம்பின் ஒளிகள்" புகைப்பட கண்காட்சி இன்று (17.05.2019) காலை 10மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்....

எங்கள் நிலத்தையம், வாழ்வையும் உறைய வைத்து காட்டுகிறோம் புகைப்படங்களாக...!

இடம் : சென்னைப் பல்கலைக்கழக, மணிகூண்டு கட்டடம்.. சேப்பாக்கம் வளாகம்..

#மெட்ராஸ்_மரபினர் #விளிம்பின்_ஒளிகள் #8மாணவர்களின்_படைப்பு #மக்களுக்கான_இதழியல்..

பொது மக்கள் பலரது வேண்டுகோளுக்காக மக்கள் பார்வைக்கு "விளிம்பின் ஒளிகள்" புகைப்பட கண்காட்சி இன்றும் (17.05.2019) காலை 10ம...
17/05/2019

பொது மக்கள் பலரது வேண்டுகோளுக்காக மக்கள் பார்வைக்கு "விளிம்பின் ஒளிகள்" புகைப்பட கண்காட்சி இன்றும் (17.05.2019) காலை 10மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்....

எங்கள் நிலத்தையம், வாழ்வையும் உறைய வைத்து காட்டுகிறோம் புகைப்படங்களாக...!

இடம் : சென்னைப் பல்கலைக்கழக, மணிகூண்டு கட்டடம்.. சேப்பாக்கம் வளாகம்..

#மெட்ராஸ்_மரபினர் #விளிம்பின்_ஒளிகள் #8மாணவர்களின்_படைப்பு #மக்களுக்கான_இதழியல்..

---- விளிம்பின் ஒளிகள்------ சென்னையின் உண்மையான பிரதிபலிப்பு என்னவென்று வரக்கூடிய தலைமுறையினருக்காக புகைப்படங்கள் மூலம்...
13/05/2019

---- விளிம்பின் ஒளிகள்------

சென்னையின் உண்மையான பிரதிபலிப்பு என்னவென்று வரக்கூடிய தலைமுறையினருக்காக புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வரும்
மெட்ராஸ் மரபினர் - ன் அடுத்த கட்ட நகர்வாக
வடசென்னை வியாசர்பாடி குழந்தைகளுக்கு ஆர்வம் என்ற தன்னார்வல நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் புகைப்படம் எடுக்கும் முறை பற்றியும் இதழியல் பற்றியும் பயிலரங்கம் நடத்தி வந்தது. அதில் குழந்தைகள் வியாசர்பாடி மக்களின் வாழ்வியலை பல பிரிவுகளில் ஆவணப்படுத்தி வந்தனர்.

அவர்களின் பார்வையில் எடுத்த புகைப்படங்கள், மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் "விளிம்பின் ஒளிகள்" என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.

வியாசர்பாடி எருக்கச்சேரி சாலை, அம்பேத்கர் கலை கல்லூரி எதிரில் உள்ள நடைபாதையில்
வரும் மே 16 வியாழன் கிழமை , காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
பொதுமக்கள் பார்வைக்கு புகைப்படங்கள் வைக்கப்படுகிறது.

விழாவின் சிறப்பு நிகழ்வாக குழந்தைகள் எடுத்த புகைப்படங்கள் "விளிம்பின் ஒளிகள்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்படுகிறது.

வடசென்னை மக்களின் வாழ்வியல் இது தான் என அப்பகுதி குழந்தைகளே முன் நின்று புகைப்படங்களின் வாயிலாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றனர்.

"எங்கள் நிறத்தையும் வாழ்வையும் உறைய வைத்துக் காட்டுகிறோம் படங்களாக!!..."

தேதி: மே 16 வியாழக் கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம்: வியாசர்பாடி எருக்கச்சேரி சாலை, அம்பேத்கர் கலை கல்லூரி எதிரில் உள்ள நடைபாதை

- மெட்ராஸ் மரபினர்

உழைக்கும் சனங்க🖤(Uzhaikum sananga)A documentary photo series to represents native workers of chennai. The main motive be...
07/05/2019

உழைக்கும் சனங்க🖤(Uzhaikum sananga)
A documentary photo series to represents native workers of chennai. The main motive behind this photographs to documenting the daily life of working people...

Address

No. 6/1, Mannappan Lane, Old Washermenpet
Chennai
600021

Telephone

+919710861261

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madras Marabinar - மெட்ராஸ் மரபினர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madras Marabinar - மெட்ராஸ் மரபினர்:

Share