Velu Lenin

Velu Lenin About a cute baby :) :)

பள்ளி வேறு விடுமுறையா போனதால காலைல எழுந்ததும் முதல் வேலை subscription எவ்வளவு like எவ்வளவு என்று...ஒன்று ஏறி இருந்தாலும்...
17/04/2024

பள்ளி வேறு விடுமுறையா போனதால காலைல எழுந்ததும் முதல் வேலை subscription எவ்வளவு like எவ்வளவு என்று...

ஒன்று ஏறி இருந்தாலும் மகிழ்வான். Comments படிச்சி என்னை எப்படி எல்லாம் சொல்லி இருக்காங்க பாருமா என்பான் ...

வாழ்த்துகள் டா....

புத்தகக் கண்காட்சியில் விற்பனையான Lakshmi Mangalam லட்சுமி பாட்டியின் தேவதை சிறுகதை புத்தகம் படித்து விட்டு அவர்களிடம் அ...
03/02/2024

புத்தகக் கண்காட்சியில் விற்பனையான Lakshmi Mangalam லட்சுமி பாட்டியின் தேவதை சிறுகதை புத்தகம் படித்து விட்டு அவர்களிடம் அழைத்து பேசியதும் பாட்டிக்கு ரொம்ப மகிழ்ச்சி அதன் வெளிப்பாடாக.
லட்சுமி பாட்டி எனக்காக அனுப்பிய புத்தகங்கள் இவை... நன்றி பாட்டி...

நானும் என் தங்கை பொருநை யும் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்...
28/01/2024

நானும் என் தங்கை பொருநை யும் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்...

21/01/2024

#கறுப்பி_என்_கறுப்பி பாடலுக்கு ஆடுவது என முடிவெடுத்தது நான் தான். அப்போது தான் அம்மா சொன்னாங்க,

படம் வந்த புதிதில் ஒரு preview show ல படம் பார்த்து விட்டு வெளியில் கறுப்பி என் கறுப்பி பாடலை நான் பாடிக் கொண்டே இருந்தேன் அப்போது எனக்கு வயது 2 அல்லது 3 இருக்கும். அங்கிருந்த இயக்குனர் Mari Selvaraj என்னை திரும்பி பார்த்து சிரித்தார் என்று.

நடன தயாரிப்பு நேரம் குறைவு என்பதால் இவ்வளவு தான் முடிந்தது, மறுமுறை இன்னும் சிறப்பாக செய்வோம்.

எனக்கு சேர சோழ பாண்டியர்கள் பல்லவர்கள் வரலாறு என் 4ஆம் வகுப்பு புத்தகத்தில் வருகிறது. அது குறித்து நான் மேலும் அறிந்துக்...
08/11/2023

எனக்கு சேர சோழ பாண்டியர்கள் பல்லவர்கள் வரலாறு என் 4ஆம் வகுப்பு புத்தகத்தில் வருகிறது. அது குறித்து நான் மேலும் அறிந்துக் கொள்ள சேர சோழ பாண்டியர்கள் பல்லவர்கள் வரலாறு புத்தகம் என் அம்மாவிடம் கேட்டேன்.

சில தோழர்களிடம் புத்தகம் கிடைக்குமா என்று என் அம்மா விசாரித்தார், கிடைக்கவில்லை. சரி என்று திருவல்லிக்கேணி பழைய புத்தக நிலையம் சென்று கேட்டோம். அங்கும் அந்த குறிப்பிட்ட புத்தகம் இல்லை. ஆனால் புத்தகங்களை பார்த்து வாங்காமல் வர முடியாமல் ஐம்பெரும் காப்பிய கதைகள், கடையேழு வள்ளல்கள் கதைகள் புத்தகம் வாங்கி கொண்டு, ஹிக்கிம் பாதம்ஸ் புத்தக நிலையம் சென்றோம். அது போன்ற பெரிய புத்தக கடைக்கு நான் இது தான் முதல் முறை செல்கிறேன். நாங்கள் கொஞ்சம் பார்ப்பதற்குள் கடை மூடும் நேரம் வந்து விட்டது.

சரி என்று அம்மா மட்டும் சில நூல்கள் வாங்கினார். அதற்கு பணம் கட்ட நின்ற போது கடைக்காரர் rs. 535/- என்று ஆங்கிலத்தில் சொல்ல அதை நான் தமிழில் சொல்லி உறுதிபடுத்திக் கொண்டேன். அவர் சிரித்தார். நான் எனக்கு ஆங்கிலம் தெரியாது அதான் கேட்டேன் என்றேன். அதற்கு அவர் அதான் சரியா சொல்றியே என்றார். எனக்கு அந்த அளவிற்கு ஆங்கிலம் தெரியும் என்றேன். உடனே அவர் எனக்கு " the warriors" என்று போட்டிருந்த ஒரு batch கொடுத்தார். நானும் என் தங்கையும் நன்றி என்றோம். என் தங்கை எதற்கு இது என்றாள், உன் நன்றிக்காக தான் என்றார். மகிழ்ந்து கிளம்பினோம்.

12/08/2022

என் தாத்தாவை கொஞ்சி அமர்ந்திருக்கும் கிளியை கண்டு தாத்தா எதுக்கு இப்படி பயந்து போறாரு...

Address

Chennai
600042

Telephone

+919578956668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Velu Lenin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Velu Lenin:

Share

Category