நம்ம ஊரு தேனி

நம்ம ஊரு தேனி Hai every one This Page describe About and have Details about Theni district famous place, Locations

தேனி மாவட்டம்முக்கிய போன் நம்பர் வெளியீடுமக்களுக்கு பயனளிக்கும் டைரிதேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய அலுவலகங்கள் மற்றும் அ...
23/12/2023

தேனி மாவட்டம்
முக்கிய போன் நம்பர் வெளியீடு
மக்களுக்கு பயனளிக்கும் டைரி
தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய அலுவலகங்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் செல்போன் நம்பர்கள் தொகுக்கப்பட்டு உள்ளன.

மாவட்ட கலெக்டர்: 9444172000 தொலைபேசி: 04546253676

மாவட்ட எஸ்.பி: 9498124125 தொலைபேசி: 04546254100

டிஆர்ஓ (வருவாய் அலுவலர்): 9445000917 தொலைபேசி: 04546254946

மாவட்ட வன அதிகாரி: 9445468522 தொலைபேசி: 04546254100

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது): 9445008152 தொலைபேசி: 04546254956

* கல்வித்துறை:

முதன்மை கல்வி அதிகாரி, தேனி: 7373002951 தொலைபேசி: 04546290244

மாவட்ட கல்வி அதிகாரி, தேனி: 9750982820 தொலைபேசி: 04546260130

மாவட்ட கல்வி அதிகாரி, உத்தமபாளையம்: 7373002956 தொலைபேசி: 04546266073

மாவட்ட கல்வி அதிகாரி, பொியகுளம்: 7373002953 தொலைபேசி: 04546232832

* கூட்டுறவுத் துறை:

சார்பதிவாளர், ஆண்டிபட்டி: (பொது விநியோக திட்டம்) 9629735321

சார்பதிவாளர், கம்பம் (பொது விநியோக திட்டம்): 9677433535

சார்பதிவாளர், உத்தமபாளையம் (பொது விநியோக திட்டம்): 9994310874

சார்பதிவாளர், போடிநாயக்கனூா் (பொது விநியோக திட்டம்): 9786321374

சார்பதிவாளர், பொியகுளம் (பொது விநியோக திட்டம்): 8778336563

சாா்பதிவாளா், தேனி (பொது விநியோகத் திட்டம்): 6383601716

சார்பதிவாளர், பொியகுளம்: 9750473510

சார்பதிவாளர், ஆண்டிபட்டி: 7010357281

துணை பதிவாளர், தேனி: 9688920606

துணை பதிவாளர், கடமலைக்குண்டு: 9629701708

* மின்சார வாரியம்:

முதன்மை பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம், தேனி: 9443353670 தொலைபேசி: 04546253677

கோட்ட பொறியாளர், தேனி: 9445853171

கோட்ட பொறியாளர், பெரியகுளம்: 9445853177

கோட்ட பொறியாளர், சின்னமனூர்: 9445853222

செயற் பொறியாளர், தேனி நகரம்: 9445853154

உதவி செயற்பொறியாளர்: 9445853140

உதவி செயற்பொறியாளா் வளர்ச்சி, மக்கள் தொடர்பு அலுவலர்: 9445853139

உதவி செயற்பொறியாளர், பொது: 9445853139

செயற்பொறியாளர், தேனி ஊரகம்: 9445853160

உதவி செயற்பொறியாளர், போடிநாயக்கனூர் உபகோட்டம்: 9445853166

* தோட்ட கலை துறை:

துணை இயக்குநா், தேனி - 9865984971, 04546-255780

உதவி இயக்குநா் - 9865256122, 04546-232043

உதவி இயக்குநா், பொியகுளம் - 8940689196, 04546-232043

உதவி இயக்குநா், உத்தமபாளையம் - 9003704076, 04554-265046

உதவி இயக்குநா், போடிநாயக்கனூா் - 9940981353, 04546284848

உதவி இயக்குநா், கம்பம் - 7200632203, 04554275041

உதவி இயக்குநா், சின்னமனூர் - 9994742237, 04554246146

உதவி இயக்குநா், தேனி - 6383662003, 04546250139

உதவி இயக்குநா், மயிலாடும்பாறை - 7904724911, 04554249111

* நகராட்சிகள்

நகராட்சி ஆணையர், சின்னமனூர்: 7397382181 தொலைபேசி: 04554247383

நகராட்சி ஆணையர், கூடலூர்: 7397382177 தொலைபேசி: 04554231236

நகராட்சி ஆணையர், கம்பம்: 7397382183 தொலைபேசி: 04554271283

நகராட்சி ஆணையர், போடிநாயக்கனூர்: 7397382185 தொலைபேசி: 04546280228

நகராட்சி ஆணையாளர், பொியகுளம்: 7397382180 தொலைபேசி: 04546231210

நகராட்சி ஆணையர், தேனி: 7397382188 தொலைபேசி: 04546252470

* நெடுஞ்சாலை துறை:

துணை பொதுமேலாளர் மற்றும் திட்ட இயக்குநர், திண்டுக்கல்: 9994522212 தொலைபேசி: 04512450909

உதவி கோட்ட பொறியாளர் (மாநில நெடுஞ்சாலை), தேனி: 9443024300 தொலைபேசி: 04546253608

உதவி பொறியாளர், பொியகுளம் உபகோட்டம்: 9442615629

* பேரூராட்சிகள்:

செயல் அலுவலர், வீரபாண்டி: 7824058246 தொலைபேசி: 04546246395

செயல் அலுவலர், வடுகபட்டி: 7824058245 தொலைபேசி: 04546230161

செயல் அலுவலர், உத்தமபாளையம்: 7824058244 தொலைபேசி: 04554265254

செயல் அலுவலர், தேவாரம்: 7824058243 தொலைபேசி: 04554254616

செயல் அலுவலர், தென்கரை: 7824058242 தொலைபேசி: 04546230236

செயல் அலுவலர், தாமரைகுளம்: 7824058241 தொலைபேசி: 04546230268

செயல் அலுவலர், க.புதுப்பட்டி: 7824058240 தொலைபேசி: 04554270582

செயல் அலுவலர், பண்ணைபுரம்: 7824058239 தொலைபேசி: 04554252825

செயல் அலுவலர், பழனிசெட்டிபட்டி: 7824058238 தொலைபேசி: 04546264998

செயல் அலுவலர், ஓடைப்பட்டி: 7824058237 தொலைபேசி: 04546247543

* வருவாய் துறை:

வட்ட வழங்கல் அலுவலர், போடிநாயக்கனூர்: 9445000334

வட்ட வழங்கல் அலுவலர், உத்தமபாளையம்: 9445000333

வட்ட வழங்கல் அலுவலர், பொியகுளம்: 9445000331

வட்ட வழங்கல் அலுவலா், தேனி - 9445000330

தனி வட்டாட்சியர் (சபாதி), போடிநாயக்கனூர்: 8825588310

தனி வட்டாட்சியர் (சபாதி), உத்தமபாளையம்: 9003525510

தனி வட்டாட்சியர் (சபாதி), ஆண்டிபட்டி: 9791430193

தனி வட்டாட்சியர் (சபாதி), தேனி: 9942214230

தனி வட்டாட்சியர் (சபாதி), பெரியகுளம்: 9942052330

வட்டாட்சியர், போடிநாயக்கனூர்: 9445000597 தொலைபேசி: 04546280124

* வேளாண்மை துறை:

வேளாண்மை இணை இயக்குநர், தேனி: 9443828843, 04546-251862

வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவ): தொலைபேசி: 04546250101 மற்றும் 04546251862

வேளாண்மை உதவி இயக்குநர், தேனி: 8778616557 தொலைபேசி: 04546250506

வேளாண்மை உதவி இயக்குநர், ஆண்டிபட்டி: 8946075280 தொலைபேசி: 04546292025

வேளாண்மை உதவி இயக்குநர், கடமலைக்குண்டு: 8637413337 தொலைபேசி: 04546293435

வேளாண்மை உதவி இயக்குநர், உத்தமபாளையம்: 8825607384 தொலைபேசி: 04546265265

வேளாண்மை உதவி இயக்குநர், கம்பம்: 9442093682 தொலைபேசி: 04546270737

வேளாண்மை உதவி இயக்குநர், போடிநாயக்கனூர்: 9865704757 தொலைபேசி: 04546283539

வேளாண்மை உதவி இயக்குநர், பெரியகுளம்: 9894947974 தொலைபேசி: 04546231533

வேளாண்மை உதவி இயக்குநர், சின்னமனூர்: 9655675404 தொலைபேசி: 04546246494 ஆகிய தகவல்கள் மக்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 வருட புதுப்பித்தல்க்கு பிறகு நாளை முதல் தேனி மாவட்டம் கம்பம் தம்பீஸ் திரையரங்கம் செயல்பாட்டிற்கு வருகிறது.விளக்கொளியில...
15/07/2023

3 வருட புதுப்பித்தல்க்கு பிறகு நாளை முதல் தேனி மாவட்டம் கம்பம் தம்பீஸ் திரையரங்கம் செயல்பாட்டிற்கு வருகிறது.

விளக்கொளியில் ஜொலிக்கும் திரையரங்கு
⬇️⬇️⬇️

 #விஜயகுமார் IPS அவர்களின் பழைய பதிவு..''ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண...
07/07/2023

#விஜயகுமார் IPS அவர்களின் பழைய பதிவு..

''ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே போதும் என செட்டில் ஆகிவிடும் மன நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்தப் புள்ளியிலேயே சுதாரிக்க வேண்டும். அதில் இருந்து உடனடியாக மீளாவிட்டால், வாழ்க்கைப் பயணம் நாம் ஆசைப்பட்ட திசையில் இருக்காது!'' என்று அனுபவம் பகிர்கிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்.


பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் விடாப்பிடி உறுதி முயற்சியுடன் 'ஐ.பி.எஸ்.’ பட்டம் தொட்டவர்.
''தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி தான் என் சொந்த ஊர். அப்பா செல்லையா வி.ஏ.ஓ. என் அம்மா ராஜாத்தி, பள்ளி ஆசிரியை. ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியில்தான் படித்தேன்.

ஒரே மகனான என்னை டாக்டர் இல்லேன்னா, இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க அவங்களுக்கு ஆசை. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆயிட்டேன். சாதாரண கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால், மாவட்ட அளவு அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு அடிக்கடி மனசுல தோணிட்டே இருக்கும். அது போக, போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவசாயம்னு எங்க பகுதியில் எல்லாப் பக்கமும் க்ரைம்தான்.

போலீஸ் அதிகாரியானால் நம்மால் முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம்னு தோணும். 'மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி’ என்ற என் இரண்டு ஆசைகளையும் பூர்த்திசெய்வது ஐ.பி.எஸ்., பதவி மட்டும்தான்னு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினேன்.

கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை எதுவும் அமையலை. சென்னையில் தங்கி சிவில் சர்வீஸ் பரீட்சைகளுக்குப் படிக்கிற அளவுக்கு வசதியும் இல்லை. ஏதாவது வேலையில் சேர்ந்து சின்னதா சம்பாதிச்சுட்டே படிக்கலாம்னு முடிவு பண்ணி, ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிற வேலையில் சேர்ந்தேன். 12 மணி நேர வேலைப் பளுவுக்குப் பிறகு படிக்க முடியலை. நாலு மாசத்திலேயே வேலையை விட்டுட்டேன்.

ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துட்டு, படிக்கலாம்னு முடிவு பண்ணேன். 1999-ல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிச்சேன். ஏனோதானோன்னுதான் படிச்சேன். தேர்வில் தோல்வி. அதே சமயத்தில் குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்து இருந் தேன். அந்தத் தேர்வுக்கு ஆறு மாசம் தீவிரமாப் படிச்சேன். 2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தேன்.

அதே வருஷம், குரூப்-1 தேர்வும் எழுதினேன். முதற்கட்டம், மெயின், நேர்முகத் தேர்வுன்னு இரண்டு வருட நடை முறை முடிந்து 2002-ல் ரிசல்ட் வந்தது. தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி., ஆனேன். தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றேன்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். அது எனது கடைசி ஏழாவது முயற்சி. வெற்றி!
ஆனால், தேர்வுக்கான ஆயத்தங்களைக் காட்டிலும் அந்த காலகட்டங்களில் நான் கடந்து வந்த மன உளைச்சலின் வீரியம் வார்த்தையில் அடங்காது. டி.எஸ்.பி-யாக நான் பணிபுரிந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை கமிஷனர் அலுவலகம், ஆவடி உட்பட ஆறு இடங்களுக்கு என்னை டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். காரணம், சிவில் சர்வீசஸ் தேர்வு.
'

இன்டர்வியூ போகணும்... மெயின் எக்ஸாமுக்குப் படிக்கணும்... ஒரு மாசம் லீவு வேணும்’னு கேட்டால், உடனே ஒரு டிரான்ஸ்ஃபர் பரிசாகக் கிடைக்கும். வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேரமும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், நிச்சயம் முதல் இரண்டு முயற்சிகளிலேயே யாருக்கும் வெற்றி நிச்சயம்!

சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தில் விருப்பப் பணியில் 'ஐ.பி.எஸ்’ என்று மட்டுமே எழுதினேன். ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். பிரிவின் கீழ் 0 என்றே குறிப்பிட்டு இருந்தேன். நேர்முகத் தேர்விலும் காவல் துறை பற்றிய கேள்விகள் தான் சுற்றிச் சுழன்றன. 'எப்படிங்க உங்க ளுக்கு நேரம் கிடைச்சது? எப்படிப் படிச் சீங்க’ன்னு நட்பாகத்தான் என்னை எதிர் கொண்டார்கள்.

சிவில் சர்வீஸில் தேறி ஐ.பி.எஸ்., பணி உறுதியானாலும் டி.எஸ்.பி., பணியில் இருந்து நான் உடனடியாக விலகவில்லை. தமிழக முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஓர் ஆண்டு விடுமுறையில்தான் பயிற்சிக்குச் சென்றேன். ஒரு வேளை பயிற்சி முடிந்த பிறகு, வேறு மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டால், 'ஐ.பி.எஸ். வேண்டாம்’னு சொல்லிட்டு, தொடர்ந்து தமிழகத்திலேயே டி.எஸ்.பி. ஆகப் பணிபுரியத்தான் ஆசை.


நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகும்போது தங்குவதற்குச் சிரமமாக இருக்கலாம். புத்தகங்களைப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். வீட்டிலும், 'என்னப்பா படிச்சுட்டே இருக்கேன்னு சொல்ற. எப்பதான் பாஸ் பண்ணப்போற?’னு கேட்பார்கள். சில உறவினர்கள் கிண்டல் அடிக்கக்கூடச் செய்வார்கள். எந்தச் சூழலிலும் சோர்ந்துபோகவே கூடாது. நேர்மறை எண்ணம் கொண்டவர்களை மட்டுமே பக்கத்தில் சேருங்கள்.

வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும், அதைத் தாங்கிக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் ஒரே லட்சியத்தோடு படித்தால் நலம். குரூப்-2, குரூப்-1 என கொஞ்சம் தடம் மாறியதால்தான் என் வெற்றி தள்ளிப்போனது. 'இதுவே போதும்’ என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள். ஓடிக்கொண்டே இருங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்!''

💐

தேனி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாகிய நாள் | ஜூலை 07 | நம்ம தேனியின் கொண்டாட்டம் | இனிய வாழ்த்துகள் மக்களே..😍
07/07/2023

தேனி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாகிய நாள் | ஜூலை 07 | நம்ம தேனியின் கொண்டாட்டம் | இனிய வாழ்த்துகள் மக்களே..😍

தேனி மாவட்டம் உதயமான நாள்.....   #தேனிமாவட்டம்    #தேனி
07/07/2023

தேனி மாவட்டம் உதயமான நாள்.....

#தேனிமாவட்டம் #தேனி

நாடார் சரசுவதி தொடக்க பள்ளி தேனி.....Elementary School since 1919
19/06/2023

நாடார் சரசுவதி தொடக்க பள்ளி தேனி.....
Elementary School since 1919

08/06/2023
"உணவிற்காக உயிரை பணயம் வைக்கும் யானைகள்" என்பது சரியா ?...இந்தமாதிரி படங்களோடு சமீபத்தில் சில முன்னணி பத்திரிக்கைகள் பதற...
08/06/2023

"உணவிற்காக உயிரை பணயம் வைக்கும் யானைகள்" என்பது சரியா ?...

இந்தமாதிரி படங்களோடு சமீபத்தில் சில முன்னணி பத்திரிக்கைகள் பதற்றத்தோடு கட்டுரைகளை எழுதியிருப்பதை நமது நட்பு வட்டத்திலுள்ள பலரும் பார்த்திருப்பீர்கள்...

"உயிரைப் பணயம் வைக்கின்ற" என்கிற வார்த்தைகளெல்லாம் இயற்கையோடு ஒத்துவாழாத மனிதர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்...

ஆனால், யானைகள் உட்பட அனைத்து உயிர்களுமே காலச் சூழ்நிலைகளை அனுசரித்து, இயற்கையின் மாறுதலுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டதாலேயேதான், இதுவரை நாம் புரிந்தேகொள்ளாமல், சிக்கல்கள் நிறைந்தது என நினைக்கின்ற இந்த பூமியில் இதுவரை தப்பிப் பிழைத்திருக்கின்றன, என்பதே அறிவியல் உண்மை....

மலைகளை ஒட்டியபடி கீழே செங்கல் சூளைகள்...
ஆசிரமங்கள்...
கல்வி நிறுவனங்கள்...
ஆராய்ச்சி நிறுவனங்கள்...
தொழிற்சாலைகள்...
மலைகளுக்கு மேலான உச்சியில் காபி, தேயிலை தோட்டங்கள்...
ரிசார்ட்டுகள்....
என மனிதர்களின் கேளிக்கைகளுக்கு தோதான இடங்கள்....

இப்படி மனிதர்களது வாழ்வின் வசதிகளுக்கேற்ப, யானைகளின் சமவெளி வாழ்விடங்களை தின்று ஏப்பம் விட்டுவிட்டு, யானைகளை மலைச்சரிவிற்கு துரத்தியபின்,
யானை சரிவில் உணவின்பொருட்டு, சரிந்து கொண்டிருக்கிறது எனக் கூச்சலிடுவதில் அர்த்தமே இல்லை....

யானைகளை நாம் மலைக்கு கீழேயும் அனுமதிப்பதில்லை, மலைக்கு மேலேயும் அனுமதிப்பதில்லை. பிறகு அவை எங்கேதான் போகும் ? இப்படி சரிவில்தான் சாகசம் செய்ய வேண்டிய நிலைக்கு நாம் கொண்டு வந்துவிட்டோம்....

இதோடு பல எதார்த்தமான அறிவியல் உண்மைகளையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்...

பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது நாம் பார்க்கிற வடிவத்தில் யனைகள் இல்லவே இல்லை என்பதே உண்மை. தங்களது உணவின் தேவைக்காகவும், இனப்பெருக்க காரணத்திற்காகவும், எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் யானைகள் பல படி நிலைகளை தாண்டித்தான் இப்போதைய உருவத்தில் இருக்கிறது...

பரிணாம வரலாற்றை ஆழமாக பார்த்தோமானால், இன்றைய நவீன மனிதர்கள் வெகு சிறிய குறுகிய காலத்தில் இடையில் வந்து செல்பவர்கள் மட்டுமே. மனிதகுல வரலாற்றில், அதுவும் சமீபத்தைய நூற்றாண்டுகளில் வந்தோமா பார்த்தோமா என்றில்லாமல், இந்த பூமியை மனிதர்கள் தங்களது சுய லாபத்திற்காக, மிக மிக சிதைத்த காரணத்தால் இங்கிருந்து முற்றாக செல்கிற வாய்ப்பை மனிதர்களாகிய நாம் முதலில் அடைந்து விட்டோம் என பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் சொல்கிறது...

உழைப்பே இல்லாமல், தின்று கொழுத்து அசையாப் பிண்டங்களாக மாறிய நம்மைப் போன்ற மனிதர்களால் இந்த பூமியில் இனி வாழ்வது என்பது மிக மிக சிரமம்தான். இதை இதுவரை சிறிதுகூட புரிந்து கொள்ளாமல் இருக்கும் மனிதர்களுக்கு புரிய வைக்கவே முடியாது...

அதனை ஓரளவு புரிந்து கொண்டவர்கள் என்கிற கணக்கில் லட்சத்தில் சுமார் பத்துபேர் இருப்பார்களா என்பதுகூட சந்தேகம்தான். புரிந்துகொண்டு வாழும் மனிதர்களில் இந்தப் படத்தை படம்பிடித்த Jeswin Kingsly ம் ஒருவர்....

நம்மைவிட உருவத்தில் பெரிய யானைகள் அடுத்த கட்டத்திற்கு தங்களை நகர்த்த தாயாராகிக் கொண்டிருப்பதற்கு இந்தப் படமே பெரும் சாட்சி...

இயற்கையோடு ஒன்றி வாழ்கிற அனைத்து உயிர்களும் தங்களை இந்த பூமியில் நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற மாற்றங்கள் எதையாவது செய்து கொண்டேதான் இருக்கும். இதுவெல்லாம் நமக்கு கொஞ்சமும் புரியாது. புரிந்து கொள்ளாத மூடர்களாகிய நாம் இப்படி எதாவது ஒன்றை சொல்லி பிதற்றிக்கொண்டேதான் இருப்போம்....

ஆமாம் நான் கேட்கிறேன், மனிதர்கள் இந்த பூமியில் நிலைத்து வாழ அடுத்து என்ன செய்யப் போகிறோம் ?....

ஏராளமாக மரம் நடுவோம் என்கிறீர்களா ? அதுவெல்லாம் உடனடியாக வேலைக்காகும் என நினைகிறீர்களா ? சமீபத்திய ஐநாவின் அறிக்கைகளை படித்துப் பாருங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்...

இதுபற்றி உங்களது பின்னூட்டங்களைப் பொறுத்து அடுத்தடுத்தடுத்து நிறையப் பேசுவோம் எனக் கூறிக் கொண்டு...

முக்கியமாக, ஊடக நண்பர்களுக்கான ஒரு வேண்டுகோள்: உங்களின் பரபரப்பு தாகத்திற்காக மனதில் தோன்றியதையெல்லாம்உண்மை புரியாமல் பொதுவெளியில் எழுதவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்...

என்றென்றும் யானை விரும்பி,
Ramamurthi Ram

Address

SH-100
Bodinayakkanur
625513

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம ஊரு தேனி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category