Real Click Studio Advertising

Real Click Studio Advertising கடந்த இருபத்தைந்து வருடங்களாக சுவிஸ?

விடியல்...

நீல வானில் உலா வந்த நிலவு
அழைத்துப் பேசியது பூங்காற்றை.
விசுக்கென்று கிளம்பியது காற்று
பசும் மரக்கிளைகளில்
ரகசியப் பேச்சு.
சருகுகள் பறந்தன
ஆற்றுநீர் விழித்துக்கொண்டாட்டம்
மலையருவி வீழ்ந்த இடமெல்லாம்
முத்துப் பரல்களாய்
நிலாத்துண்டுகள்
பூக்கள் எல்லாம் சோம்பல் முறித்தன.
விடியப் போகும் செய்தியை
இப்படிச் சொல்லி அனுப்பியது
குறும்பு நிலா.
சூரியனின் வருகையை-
'தாமரைக்கு'

ஆஞ்சநேயரின்  108 துதி.1. ஓம் அனுமனே போற்றி.2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி.3. ஓம் அறக்காவலனே போற்றி.4. ஓம் அவதார புருஷனே போ...
07/06/2026

ஆஞ்சநேயரின் 108 துதி.

1. ஓம் அனுமனே
போற்றி.
2. ஓம் அஞ்சனை மைந்தனே
போற்றி.
3. ஓம் அறக்காவலனே
போற்றி.
4. ஓம் அவதார புருஷனே
போற்றி.
5. ஓம் அறிஞனே
போற்றி.
6. ஓம் அடக்கவடிவே
போற்றி.
7. ஓம் அதிகாலை பிறந்தவனே
போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
11. ஓம் ஆனந்த வடிவே
போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
15. ஓம் இசை ஞானியே
போற்றி
16. ஓம் இறை வடிவே
போற்றி
17. ஓம் ஒப்பிலானே
போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே
போற்றி
19. ஓம் கதாயுதனே
போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே
போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே
போற்றி
22. ஓம் கர்மயோகியே
போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே
போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே
போற்றி
25. ஓம் கடல் தாவியவனே
போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே
போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே
போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே
போற்றி
29. ஓம் கூப்பிய கரனே
போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே
போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய்
போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே
போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய்
போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே
போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே
போற்றி
39. ஓம் சூராதி சூரனே
போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே
போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே
போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே
போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே
போற்றி
44. ஓம் சோக நாசகனே
போற்றி
45. ஓம் தவயோகியே
போற்றி
46. ஓம் தத்துவஞானியே
போற்றி
47. ஓம் தயிரன்னப் பிரியனே
போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே
போற்றி
50. ஓம் தீயும் சுடானே
போற்றி
51. ஓம் நரஹரியானவனே
போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே
போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே
போற்றி
55. ஓம் பண்டிதனே
போற்றி
56. ஓம் பஞ்சமுகனே
போற்றி
57. ஓம் பக்தி வடிவனே
போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே
போற்றி
59. ஓம் பரதனைக் காத்தவனே
போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே
போற்றி
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே
போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே
போற்றி
66. ஓம் பீம சோதரனே
போற்றி
67. ஓம் புலனை வென்றவனே
போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே
போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே
போற்றி
71. ஓம் மதி மந்திரியே
போற்றி
72. ஓம் மனோவேகனே
போற்றி
73. ஓம் மாவீரனே
போற்றி
74. ஓம் மாருதியே
போற்றி
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே
போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே
போற்றி
79. ஓம் ராமதாசனே
போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே
போற்றி
81. ஓம் ராமதூதனே
போற்றி
82. ஓம் ராம சோதரனே
போற்றி
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே
போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
87. ஓம் ராமாயண நாயகனே
போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே
போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே
போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே
போற்றி
91. ஓம் லட்சியப் புருஷனே
போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே
போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
95. ஓம் வஜ்ர தேகனே
போற்றி
96. ஓம் வாயுகுமாரனே
போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே
போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே
போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
103. ஓம் வித்தையருள்பவனே
போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே
போற்றி அனுமனை வழிபட்டு
ஆபத்திலிருந்து மீண்டு நல்வாழ்வு வாழ்வோம்…

கார்த்திகை நோன்பிருந்து.கழுத்தினில் மாலையிட்டு.கறுப்புஆடை அணிந்து.காட்டு வழி நடந்து பார்த்ததும் என்னையுன் பாதத்தில் தந்த...
02/06/2026

கார்த்திகை நோன்பிருந்து.
கழுத்தினில் மாலையிட்டு.
கறுப்புஆடை அணிந்து.
காட்டு வழி நடந்து பார்த்ததும்
என்னையுன் பாதத்தில்
தந்துவிட்டேன் பரமனே ஐயப்பா.
பாசமுடன் ஏற்பாயே.
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..

ஆண்…ஒருவன் தன் கர்ப்பமான மனைவியை ஐந்தாவது மருத்துவ பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்.நேரம் நெருங்கிவிட்டது...
02/06/2026

ஆண்…

ஒருவன் தன் கர்ப்பமான
மனைவியை
ஐந்தாவது மருத்துவ
பரிசோதனைக்கு
ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்கிறான்.

நேரம் நெருங்கிவிட்டது
பிரசவ வலி நாளை அல்லது
நாளை மறு நாள் கூட வரலாம்.
ஜாக்கிரதை என்கிறார் மருத்துவர்.

இதை கேட்ட அவள் கணவனுக்கு
நெஞ்சில் ஆனந்தம் பொங்கி
இரு கண்களை மறைக்கிறது,

அன்று இரவே கணவன்
தன் மனைவியின்
வயிற்றில் காதை வைத்துப் பார்க்கிறான்.

என்ன செய்கிறீர்கள்.
என்று மனைவி கேட்க
நாளை இன்நேரம் என் மகனோ
மகளோ என் கையில் என்கிறான்.

அதை கேட்க மனைவி எனக்கு
ஆண் பிள்ளை தான் வேண்டும்
என்று சொல்ல இல்லை இல்லை எனக்கு பெண் பிள்ளை தான்
வேண்டும் என்று கணவன் சொல்ல
ஒருவழியாக இருவரும் உறங்க சென்றனர்.

படுக்கையில் தன் கணவன் அருகில்
நெருங்கி வந்து அவன் கை விரலை
இறுக்கமாக பிடித்துக்கொள்கிறாள்.

தூக்கத்தில் இருந்த கணவன்
விழித்து தன் மனைவியை பார்க்கிறான்.

என்னவென்று தெரியவில்லை
இதயம் படபடவென துடிக்கிறது.
எனக்கு தூக்கமே வரவில்லை
பயமாக இருக்கிறது. என்று சொல்லி
கண்கசிகிறாள் அவன் மனைவி.

உடனே இழுத்து தன் மார்போடு
மனைவியை அனைத்தவன்
அவள் கண்ணீரை துடைத்து
அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்.

அவள் நினைத்தது போல்
திடீரென பிரசவ வலி வந்தது.
பயத்திலும் கடுமையான
இடுப்பு வலியிலும் கட்டிலிலேயே
துடித்து அழ ஆரம்பித்தாள்.

என்ன செய்வது என தெரியாது
முழித்த கணவன்
அவள் துடிப்பதை காண இயலாமல்
அப்படியே அவளை தூக்கிக்கொண்டு
காரில் சிட்டுக் குருவியை போல்
பறந்து ஆஸ்பத்திரியில் சேர்தான்.

இரவு நேரம் என்பதால் உடனே
தன் மனைவியின் பெற்றோர்களுக்கு
தகவல் தெரிவித்தான்.

ஆஸ்பத்திரியே அமைதியாக இருக்க
அவன் மனைவியின் அலரல் சப்தம் மட்டும் பயங்கரமாக கேட்டது.

இரு கைகளையும் பிசைந்து கொண்டு
பிரசவ வார்டின் வெளியில்
இங்கே அங்கே என சுற்றுகிறான்.

அம்மா.
அம்மா.
என்று மனைவி வலியில் துடிக்க
அழத் தெரியாத அவள்
கணவனுக்கும் அழுகை வந்தது.

ஆண்டவா என் மனைவியின்
முதல் பிரசவம் இது.
தாய்கும் பிள்ளைக்கும் எந்த
ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது.
என்று உலகின் உள்ள
எல்லா கடவுளிடம் வேண்டினான்.

நேரம் ஆக ஆக அவனுக்கு
முகமெல்லாம் வேர்த்து கொட்டியது.
பிரசவ வலியில் தன் மனைவி
துடிப்பது அவனால் தாங்கிக்கொள்ள
இயலவில்லை.

சற்று நேரத்தில் திடீரென
மனைவியின் குரல் அமைதியானது.
கணவன் என்னாசோ.
ஏதாச்சோ.
என மிகவும் பயந்து போனான்.

மீண்டும் ஒரு அலரல்.

அதை கேட்ட கணவன்
ஆண்டவா என் மனைவிக்கு
இவ்வளவு சித்திரவதையா.
என தலையில் கை வைத்தவாறு
இருக்கையில் அமர்ந்து மனைவியை
அவள் தியாகத்தை நினைத்து
கூணி கூறுகிப்போனான்.

அப்போது ஒரு நர்ஸ் மட்டும்
வெளியே வந்து உங்கள் மனைவிக்கு சுகப்பிரசவம் பயப்படும் படி ஒன்றுமில்லை.
தாராளமாக உள்ளே சென்று
பாருங்கள் என்றார்.

காற்றை விட வேகமாக உள்ளே சென்றவன். முதலில் தன் மனைவியை பார்க்கிறான்.
அவள் இன்னும் கண் திறக்காமல்
மயக்கத்தில் சோர்ந்து படுத்திருக்க
அடுத்து எங்கே என் குழந்தை என
அவன் கண்கள் ஒரு வழியாக தேடி
தாயின் அருகில் குழந்தை
இருப்பதை கண்டு
மெதுவாக நகர்ந்து பூமியின்
பாதம் படாத சிசுவின் பாதத்தை ஆசையோடு தொட்டு முத்தமிட்டு
அதன் தலையை மெதுவாக
கோதிவிடுகிறான்.

தந்தையின் கை விரல் பட்டவுடன்
சிசு தனது கால் கையை அசைக்க ஆரம்பித்தது.

யார் சொன்னது பெண்கள் மட்டும் தான் உயிரை சுமக்கின்றனர் என்று.

ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் ஒவ்வொரு ஆணின் இதயத்தை
தொட்டுப் பாருங்கள்.
அவன் வாழ் நாள் முழுவதும்
அந்த பெண்ணின் நினைவுகளையும்
குடும்ப பாரங்களையும் சுமந்தே மடியும் உன்னதமான படைப்பு தான் ஆண்…

நினைவில் கொள்ளுங்கள்…
02/06/2026

நினைவில்
கொள்ளுங்கள்…

புத்தகங்கள்...புத்தகங்களை வாசிக்க பழகுங்கள்.உண்மையை சுவாசிக்கத் தொடங்குவீர்கள்.அது என்றும் ஆளுக்கு தகுந்தாற்போல் தன் எழு...
01/06/2026

புத்தகங்கள்...

புத்தகங்களை
வாசிக்க பழகுங்கள்.
உண்மையை
சுவாசிக்கத் தொடங்குவீர்கள்.
அது என்றும் ஆளுக்கு தகுந்தாற்போல் தன் எழுத்துக்களை மாற்றுவதில்லை...

அமைதி...வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் மந்திரம்.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் தந்திரம்.ஓசை அமை...
01/06/2026

அமைதி...

வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன்
பெயர் மந்திரம்.

செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன்
பெயர் தந்திரம்.

ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன்
பெயர் இசை.

பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன்
பெயர் தரிசனம்.

அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன்
பெயர் யோகா.

மனம் அமைதியை உருவாக்கினால் அதன்
பெயர் தியானம்.

சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன்
பெயர் வாசி.

சக்தி அமைதியை உருவாக்கினால் அதன்
பெயர் குண்டலினி.

ஒரே ஒரு பெயர் மட்டுமே அமைதியை உருவாக்குமானால்
அதன் பெயர் தான் குரு.

நம் காற்றும் குளியலும்...குளியல் ரகசியம்.எந்த  ஒரு  நல்ல  காரியம்  செய்யும்  முன்னர்  குளிப்பது  விசேஷம். குளிப்பது  அழு...
01/06/2026

நம் காற்றும் குளியலும்...

குளியல் ரகசியம்.
எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம்.

குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும் தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்.

காற்றோடு கலந்து தான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது காற்றோடு கலந்து தான் அது நமக்குள்ளேயும் நுழைகிறது.
இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம். அனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது.

மனித உடம்பு தூசு தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை.
மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி எண்ணங்களின் தாக்குதல் உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

இந்த பாதிப்புகள் இரண்டு விதம் ஒன்று நல்ல விதம் இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தால் அது நல்ல விதம் பொறாமைப்பட்டால் அது
கெட்ட விதம்.

இவற்றை நாம் கண்டறிய இயலாது அது சாத்தியமும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும் போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி மன அசதி மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.

இந்த உலகிலேயே எதுவும் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான் குளிக்கும் போது நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம்.

நீர் உச்சந்தலையில் படும்
போது உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப் படுகிறது.

குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல மனத்துக்கும் உண்டாகும்.

இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம்
கிடக்கும் இடத்தில்
இருக்கும் கதிர்களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.

கோயிலுக்கு போயிட்டு வந்தா குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம்.

கோயில் நல்ல சக்தி நல்ல சூழ்நிலை நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம்.
அத்தகைய கதிர்வீச்சை குளித்து நீருடன் கலந்து வீணாக கூடாது என்பது தான்...

நம் பிள்ளைகள் எப்படி இருந்தால் சந்தோசப்படுவீர்கள்...எங்களை போல ஆகிவிடாதீர்கள். நாங்கள் தான் வாழ்க்கையில் பல தவறுகளை செய்...
01/06/2026

நம் பிள்ளைகள் எப்படி
இருந்தால் சந்தோசப்படுவீர்கள்...

எங்களை போல ஆகிவிடாதீர்கள். நாங்கள் தான் வாழ்க்கையில் பல தவறுகளை செய்து விட்டோம்.
நீங்களாவது நல்லாயிருங்கள் என்று ஆதங்கத்தில் பேசியதுண்டா.

உண்மை தான்.
எந்த பெற்ற மனதும் தான் பட்ட கஷ்டங்களை தன் பிள்ளைகளும் படக்கூடாதென்று தான் நினைப்பார்கள்.

பிள்ளைகளை பார்த்து, நீ யார் போல இருக்க விரும்புகிறாய் என்று கேட்டால்.

அவர்களுக்கு என்ன தெரியும்.
அந்த நேரத்தில் அவர்களை கவர்ந்தவர்களை பற்றித்தான் சொல்வார்கள்.
ஒரு நடிகனை தலைவனை பிடித்து போனவரை பிரபலத்தை சொல்வார்கள். அவர்களுக்கு தெரிய வேண்டும் எதுவாக இருந்தால் மதிக்கப்படுவோம், விரும்பப்படுவோம் என்று.

ஒரு கதை.
ஒரு பணக்கார இளைஞன் தன் விலையுயர்ந்த காரை ஒரு இடத்தில் நிறுத்தும் போது அங்கே ஒரு ஏழைச்சிறுவன் ஏக்கத்தோடு அந்த காரையே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான். பணக்கார இளைஞனுக்கு பெருமை தாங்க வில்லை. உனக்கு இதில் பயணம் செய்ய வேண்டுமா.

என்று சிறுவனை கேட்டான். சிறுவனை காரில் ஏற்றிக்கொண்டு ஒரு சுற்று வந்தான். இந்த கார் என்அண்ணன் எனக்கு பரிசாக தந்தார். எப்படி இருக்கிறது என்று தற்பெருமை பேசினான். சிறுவன் ஆச்சரியமாக இளைஞனை பார்த்தான். என்ன நீயும் என் போல பணக்காரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா என்று மதமதப்பில் கேட்டான்.

ஆமாம் ஆசைப்படுகிறேன். உங்களைப் போல இல்லை பாசமான உங்கள் அண்ணனை போல இருக்க ஆசைப்படுகிறேன் என்றானாம்.

பரம்பரை பணக்காரனாக பெற்றவர்கள் விட்டு போன சொத்தில் வாழ்வதில் என்ன பெருமை இருக்கிறது.

நாமாக நம் தரத்தை உயர்த்தி கொள்வதில் தானே பெருமை. பிள்ளைகளுக்கு சொத்தை சேர்த்து வையுங்கள் அதுவே நல்ல பெற்றோருக்கு அழகு.
சொத்தை காக்கச் செய்வதும் அதை பன்மடங்காக ஆக்குவதும் தான் பிள்ளைகளுக்கு அழகு.

பணத்தின் அருமையை கற்றுக்கொடுங்கள் கூடவே கஷ்ட நஷ்டங்களை உணர்த்தவும் செய்யுங்கள்.

பாசக்காரனாக் பண்பாளனாக பகுத்தறிவு உடையவனாக இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களையும் சேர்த்து கொடுங்கள். அவனாக முன்னேறுவான்.

வாழ்வது ஒரு முறை.
சரியாக அமைந்து விட்டால் அதுவே போதுமான வாழ்க்கை...

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…
31/05/2026

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா…

மெளனம்…
31/05/2026

மெளனம்…

Adresse

Zürich
8424

Öffnungszeiten

Montag 09:00 - 23:00
Dienstag 09:00 - 23:00
Mittwoch 09:00 - 23:00
Donnerstag 09:00 - 23:00
Freitag 09:00 - 23:00
Samstag 09:00 - 23:00
Sonntag 09:00 - 23:00

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Real Click Studio Advertising erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen