19/07/2026
🚨 வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசை… ரூ.80 லட்சம் மோசடி! 😱💸
🇨🇦 கனடா – லக்சம்பர்க் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 5 பேரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
👮♂️ இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📍 வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டவர், கொலன்னாவ – வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
⚖️ மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபருக்கு தலா ரூ.5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
🔎 மேலும், மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் இவருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான பண பரிவர்த்தனைகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்.
🚨 #ஏமாற்று #கனடா #தமிழர்கள் #இலங்கைசெய்தி