Young Birds Sports Club. Kalmunai

Young Birds Sports Club. Kalmunai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Young Birds Sports Club. Kalmunai, Camera/Photo, MOSQUE Road. KALMUNAI, Kalmunai.

08/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

அன்புக்குரிய கல்முனை ஈமானிய நெஞ்சங்களே.

எமது கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பானது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது வினைத்திறன் மிக்க சேவையை தொடர்ச்சியாக எமது கல்முனை பிராந்திய மக்களுக்கு மனமுவந்து வழங்கி வருவது தாங்கள் அனைவரும் நன்கறிந்ததே.

அந்த வகையில் மேலும் சிறப்பாக எமது சேவையை வழங்குவதற்கு பொது மக்களிடத்தில் இருந்து பொருளாதார ரீதியான உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புனிதமிகு ரமலான் மாதத்தில் உங்களால் முடிந்த கொடைகளை மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற எமது ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு வாரி வழங்கி உதவிடுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களது செல்வத்திலும் ஆயுளிலும் மென்மேலும் பரக்கத் எனும் அவனது அருளை சொரிவானாக.

எமது வங்கி கணக்கு இலக்கம்.

Young Birds Janaza
1000814345 Commercial Bank Kalmunai

மேலதிக விபரங்கள் தகவல்கள் எதுவும் தேவைப்படின்
0777585650

எம். எம். மர்சூக்
தலைவர்
யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு
கல்முனை

12/02/2026
ஜனாஸா அறிவித்தல்* கல்முனை சாஹிபு வீதியில் வசித்து வந்த சுலைமா லெப்பை ஜாஹிதா அவர்கள் காலமானார்.*இன்னாலில்லாஹி வ இன்னா இலை...
06/02/2026

ஜனாஸா அறிவித்தல்*

கல்முனை சாஹிபு வீதியில் வசித்து வந்த சுலைமா லெப்பை ஜாஹிதா அவர்கள் காலமானார்.

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*

அன்னாரின் சகோதரர்களான அல்ஹாஜ் S L பலீல் (Nafa Gold House)
அல்ஹாஜ் S L நௌஷாத் (Shiyana Gold House)
அல்ஹாஜ் S L நபீர் (Nafa Gold House) ஆவார்

அன்னாரின் ஜனாஸா இன்று 5.00 மணியளவில் நூராணியா ஜும்ஆப்பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு நூரானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு கல்முனை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சகோதரருக்கு வாழ்வாதார மற்றும் மருத்து...
30/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சகோதரருக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ செலவீனங்களுக்காக உதவிக்கரம் நீட்டல்

எமது கல்முனை மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் சாகுல் ஹமீது முபாரக் , அடையாள அட்டை இலக்கம் 197413810040 என்பவர் தற்போதைய நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தனது நாளாந்த வாழ்க்கையை நடத்தி வருகிறார்

வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைவாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை உடன் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்ற அவர் தொழில் வசதிகள் மற்றும் வருமான மூலங்கள் எதுவும் இன்றி நிற்கதியான நிலையில் தனவந்தர்கள் மற்றும் ஊரவர்களின் பொருளாதார ரீதியான உதவியினை எதிர்பார்த்த வண்ணம் வாழ்ந்து வருகிறார்.

பாடசாலை செல்கின்ற மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை என நான்கு குழந்தைகளுடன் அனாதரவான நிலையில் எவ்வித வருமான மூலங்கள் இன்றி தனது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வது இவருக்கு மிகுந்த சிரமமாக காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ செலவினங்களை போக்குவதற்காக 85 லட்சம் ரூபாய் (8500000.00)தேவை உள்ளது.
இதுவரை நன்கொடையாக 19 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் (1990000.00)போக மேலும் மீதமான ரூபாய் 65 லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் (6510000.00) தங்களால் முடிந்த பொருளாதார மற்றும் பண உதவிகளை கீழே குறிப்பிடப்படுகின்ற வங்கி கணக்கிற்கு வழங்கி வைக்க முடியும்.

S H Mubarak
111253446742
Sampath bank

என்று குறிப்பிடுவதுடன்,
இவரது உடல்நிலை மற்றும் மருத்துவ அறிக்கைகளை தங்களது மேலான பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீடித்த ஆயுளையும் சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அருள்வானாக.
மேலதிக தகவல்களுக்கு...0777585650

நன்றி
இவ்வண்ணம்.

எம் எம் மர்சூக்
தலைவர்
யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு கல்முனை

27/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சகோதரருக்கு வாழ்வாதார மற்றும் மருத்து...
25/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த சகோதரருக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ செலவீனங்களுக்காக உதவிக்கரம் நீட்டல்

எமது கல்முனை மண்ணை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சகோதரர் சாகுல் ஹமீது முபாரக் , அடையாள அட்டை இலக்கம் 197413810040 என்பவர் தற்போதைய நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தனது நாளாந்த வாழ்க்கையை நடத்தி வருகிறார்

வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைவாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை உடன் மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்ற அவர் தொழில் வசதிகள் மற்றும் வருமான மூலங்கள் எதுவும் இன்றி நிற்கதியான நிலையில் தனவந்தர்கள் மற்றும் ஊரவர்களின் பொருளாதார ரீதியான உதவியினை எதிர்பார்த்த வண்ணம் வாழ்ந்து வருகிறார்.

பாடசாலை செல்கின்ற மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை என நான்கு குழந்தைகளுடன் அனாதரவான நிலையில் எவ்வித வருமான மூலங்கள் இன்றி தனது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வது இவருக்கு மிகுந்த சிரமமாக காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கதாகும்.

சமூக ரீதியாக செயல்படுகின்ற சமூகம் சார் அமைப்பான எமது யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பிடம் இவரது குடும்பம் சார்பாக விடுக்கப்பட்ட கருணைமிகு வேண்டுகோளின் பிரகாரம் இந்த அறிவித்தல் எமது குழுமத்தின் அங்கத்தவர்களான உங்களது மேலான கவனத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

திருக்குர்ஆன் – ஸூரத்துல் மாயிதா (5:32)

مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا ۖ وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

“இதன் காரணமாகவே நாம் இஸ்ராயீல் சந்ததியினருக்கு கட்டளையிட்டோம்:
ஒருவன் ஒரு மனிதனை கொலை செய்தால், அது மற்றொரு மனிதனை கொலை செய்ததற்காகவோ அல்லது பூமியில் குழப்பம் செய்ததற்காகவோ அல்லாமல் இருந்தால்,
அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்ததுபோல் ஆகும்.
*ஒருவன் ஒரு மனிதனை வாழ வைத்தால்,
அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்ததுபோல் ஆகும்*

மேலே குறிப்பிடப்படுகின்ற அல்குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் மருத்துவ செலவினங்களை போக்குவதற்காக தங்களால் முடிந்த பொருளாதார மற்றும் பண உதவிகளை கீழே குறிப்பிடப்படுகின்ற வங்கி கணக்கிற்கு வழங்கி வைக்க முடியும்.

S H Mubarak
111253446742
Sampath bank

என்று குறிப்பிடுவதுடன்,
இவரது உடல்நிலை மற்றும் மருத்துவ அறிக்கைகளை தங்களது மேலான பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீடித்த ஆயுளையும் சகல சௌபாக்கியங்களையும் வழங்கி அருள்வானாக.
மேலதிக தகவல்களுக்கு...0777585650

நன்றி
இவ்வண்ணம்.

எம் எம் மர்சூக்
தலைவர்
யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு கல்முனை

அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..!!கல்முனை வாழ் மக்களுக்கு மனச்சாட்சியுடன் ஒரு சிறந்த மடல். கல்முனை யங்பேர...
27/04/2025

அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..!!

கல்முனை வாழ் மக்களுக்கு மனச்சாட்சியுடன் ஒரு சிறந்த மடல்.

கல்முனை யங்பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பானது கடந்த சில வருடங்களாக கல்முனை மக்களுக்கு ஜனாஸா தொடர்பான கபூர் வெட்டுதல் தவிர்த்து ஏனைய அத்தியாவசியமான அனைத்து தன்னிகரில்லாத சேவைகளையும் அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் ஆகியோரின் அனுசரணையில் இலவசமாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கு கல்முனை வாழ் பொது மக்களாகிய நீங்கள் அனைவரும் சாட்சி, இருந்த போதிலும் எமது அமைப்பு நெடுங்காலமாக எதிர்நோக்கி வருகின்ற மிகப் பிரதானமான பிரச்சனையான எமது அமைப்பு திறம்பட தொழிற்படுவதற்கான நிலையான கட்டிட வசதிகள் மற்றும் அலுவலக வசதிகள் இன்மையே.

கடந்த சில வருடங்களாக கல்முனை பள்ளி வீதியில் அமைந்துள்ள வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த எமது அமைப்பானது தற்போதைய நிலையில் பொது நோக்கங்களை கருத்தில் கொண்டு கடற்கரை வீதியில் நூறானியா பள்ளி மைய வாடிக்கு முன்பாக அமைந்துள்ள மீனவ சங்கத்திற்கு உரித்தான ஒரு கட்டிடத்திற்கு இடமாற்றம் பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் மேற்குறித்த இடமாற்றத்தை தடுக்கும் முகமாகவும் எமது அமைப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அதேவேளை எமது அமைப்புக்கு மேலும் சில அசௌகரிகங்களையும் இடர்பாடுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய மனோநிலை மற்றும் காழ்ப்புணர்வுகளின் அடிப்படையில் சில விஷமிகளால் முறைப்பாடுகள் அடங்கிய கடிதங்கள் அம்பாறை மாவட்டத்தின் மாவட்ட செயலாளருக்கும் மற்றும் எமது கல்முனை நகரின் பிரதேச செயலாளருக்கும் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஏ. ஆதம்பாவா அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது உண்மையில் எம்மை மிகுந்த கவலையையும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கியுள்ளது.

எமது ஜனாசா நலன்புரி அமைப்பானது எவ்வித பாகுபாடுகள் மற்றும் சுயநல நோக்கங்களுமின்றி எமது பிராந்தியத்தில் ஏற்படுகின்ற ஜனாஸா நிகழ்வுகளுக்கு தளர் பாடங்கள் முதல் குளிப்பாட்டும் சாதனங்கள் மற்றும் ஏனைய அவசியமான பொருட்களை பொதுநல நோக்கங்கள் கொண்டு எமது பிராந்திய மக்களின் சிரமங்களை போக்கும் வகையில் உரிய நேரத்திற்கு எவ்வித கொடுப்பனவுகளுமின்றி இலவசமாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவ்வாறான தெரு நிலையுள் மேலும் திறமையாக தொழிற்படுவதற்கு பெரும் தடையாக உள்ள அலுவலக மற்றும் களஞ்சிய வசதிகள் போன்றவற்றை கடற்கரை வீதியில் அமைந்துள்ள மீனவ கட்டிடத்தில் நாங்கள் அமைப்பதானது சில விஷமிகளுக்கு மிகுந்த எரிச்சல்களையும் காழ்புணர்வுகளையும் ஏற்படுத்தி இருப்பதோடு எங்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு அவதூறுகள் பலவற்றைப் பரப்பு முகமாக இவ்வாறான முறைப்பாட்டு கடிதங்களை அவர்களை எழுதுவதற்கு தூண்டி இருப்பதற்கான காரணங்களை விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது.

சமூக நோக்கம் கொண்டு செயற்படுகின்ற எம்மை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் எமது செயற்பாடுகளை கொச்சைப்படுத்தும் நோக்கத்துடனும் இவ்வாறான அசிங்கமான செயற்பாடுகளையும் முட்டுக்கட்டைகளையும் இடுபவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் எமது ஜனாஸா நலன்புரி அமைப்பானது தனிநபர்களுக்கானதோ அல்லது குழுக்களுக்கானதோ அல்ல எமது சமூகத்திற்கானது அதில் இவ்வாறான காழ்ப்புணர்வு கொண்டவர்களும் அடங்குவார்கள் அவர்களுக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்டது அவர்களும் மரணத்தை அஞ்சிக் கொள்ளுதல் வேண்டும் அவ்வாறு அவர்களுக்கு மரணம் சம்பவிக்க நேர்ந்தால் அந்த இடத்தில் எமது ஜனாஸா நலன்புரி அமைப்பானது எந்தவித பாரபட்சங்களும் இன்றி எங்களது உயரிய சேவைகளை அவர்களுக்கும் சேர்த்துதான் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு நபரை அவனுக்கு இல்லாத குற்றத்துடன் குற்றம் சுமத்தும் ஒருவர் நற்கண்ணியத்திற்கும் நற்குணத்திற்கும் எதிரான குற்றத்தில் தான் விழுகிறார்." (புகாரி, ٤٨١٨; முஸ்லிம், ٢٥٨١)

என்பது நபி மொழியாகும்.

ஒரு சமூகம் சார் அமைப்பின் மீது இவ்வாறான உண்மைக்கு புறமாக இட்டுக்கட்டு ஜோடிக்கப்பட்ட குற்றங்களை சுமத்துவதும் எங்கள் மீது காழ்ப்புணர்வு கொண்டு எமது செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தும் முகமாக இடைஞ்சல்களை ஏற்படுத்துவதும் அவ்வளவு தூரம் ஆரோக்கியமானதல்ல.
இவ்வாறான இழி செயற்பாடுகளை மேற்கொள்கின்ற சகோதரர்கள் தங்களை திருத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் மறுமை நாளில் ஒரு சமூகத்தின் மீது மேற்கொண்ட அவதூராகவும் சமூக நோக்கம் கொண்டு செயல்படுகின்ற ஒரு அமைப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்ததற்காக வல்ல இறைவனிடத்தில் அதிகப்படியான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் வல்ல இறைவன் உங்களையும் எங்களையும் பாதுகாப்பானாக.

மேற்குறித்த விடயத்தின் வெளிப்படை தன்மை பேண வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எமது கல்முனை மக்களின் அவதானத்திற்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

நன்றி

இவ்வண்ணம்

கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் சார்பாக அதன் தலைவர்.

எம்.எம். மர்சூக்

மாபெரும் இரத்ததான முகாம்-2024கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின்  ஏற்பாட்டில் எமது அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலைய...
16/12/2024

மாபெரும் இரத்ததான முகாம்-2024

கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் எமது அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக மாபெரும் இரத்ததான முகாம் கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள அல் புஸ்ரா ஆழ்கடல் மீனவர் சங்க காரியாலயத்தில் இன்ஷா அல்லாஹ் *எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20.12.2024 காலை 08.00 தொடக்கம் பி. ப.03.00 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

எமது அமைப்பின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு உதிரம் கொடுத்து உயிர் காக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.

யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பு கல்முனை

எமது யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி  அமைப்பினால் ஜனாஸா  வீடுகளுக்கு  இலவசமாகவும் துரிதமாகவும் நலன்புரி சேவைகளை வழங்க  தனியான ...
21/07/2024

எமது யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் ஜனாஸா வீடுகளுக்கு இலவசமாகவும் துரிதமாகவும் நலன்புரி சேவைகளை வழங்க தனியான போக்குவரத்து வாகனமின்மையினால் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றோம்

இப்புனித சேவைக்கு பங்களிப்பு வழங்க முன் வருபவர்கள் பின்வரும் வங்கி கணக்கிற்கு நிதியினை வைப்பு செய்ய முடியும்

A/C NO: 0110491166001
Amana Bank
Kalmunai Unity Square Branch

மேலதிக தகவல்களுக்கு ..0778582721
எம்.எம் மர்சூக் (தலைவர்)

Address

MOSQUE Road. KALMUNAI
Kalmunai

Telephone

+94778582721

Website

Alerts

Be the first to know and let us send you an email when Young Birds Sports Club. Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category