23/03/2022
தஞ்சை பெரிய கோயிலுக்குமுன் கட்டப்பட்டது மரக்காணம் பூமீ ஈஸ்வரர் கோயில்.
மரக்காணம், மார்ச் 23
விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி எல்லையாகவும், புதுவை, செங்கல்பட்டு மாவட்டங்களின் எல்லைகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது மரக்காணம். இப்பகுதியின் கிழக்கு பகுதியில் வங்காலவிரிகுடா கடலும், கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பக்கிங்காம் கால்வாயும், தெற்கு பகுதியில் நிலப்பரப்பாகவும் உள்ளது. இங்கு தற்போது உள்ள இ.சி.ஆர் சாலையின் அருகில் கருங்கற்கலைக் கொண்டு கற்றளி முறையில் கட்டிய அழகிய தோற்றத்துடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க பூமீஈஸ்வரர் கோயில். இக்கோயிலின் வடக்கு புரத்தில் அழகிய வேளைப்பாடுகளுடன் கற்களைகொண்டு கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலில் தேற்திரு விழா சோழ மன்னர் காலத்தில் இருந்து மிகச்சிறப்பாக நடந்துள்ளது. ஆனால் இங்கு இருந்த தேர் முற்றிலும் சிதலம் அடைந்துவிட்டதால் கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக தேர்திருவிழா நடைபெறவில்லை. இந்த கோயிலின் பராமறிப்பு தற்போது இந்து அறநலத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இப்பகுதி பண்டைய காலத்தில் எயிர் பட்டினம் என அழைக்கப்பட்டது. எயிர் என்றால் அரண் என்று பொருள் ஆகும். கி.மு 300 ம் ஆண்டு இப்பகுதி தொண்டை நாட்டு அரசனின் துறைமுகபட்டினமாக திகழ்ந்துள்ளது. அதன் பிறகு ஒய்மா நாட்டு நல்லியகோடன் நாட்டு ஆட்சி காலத்தில் முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது. அந்த மன்னன் திண்டிவனத்தில் உள்ள கிடங்கல் பகுதியை தலை நகரமாக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இதனால் இந்த மன்னன் கிடங்கல்கோமான் எனவும் அழைக்கப்பட்டுள்ளார். இங்கு அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்ககோயில் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் கி.பி 996 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலை கட்டியுள்ளனர். அப்போது இந்த ஊர் பெயர் ஒய்மா நாட்டு பட்டின நாட்டு பட்டனமான மரக்காணம் என அழைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ராஜேந்திரசோழன் காலத்தில் ஒய்மா நாட்டு பட்டன நாட்டு பட்டனம் என அழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்க மன்னர் காலத்தில் மீண்டும் எயிர்பட்டினம் என அழைத்துள்ளனர். அதன் பிறகு விஜயராஜ மன்னன் கம்பண்ன உடையார் ஆட்சியின் போது தற்போது அழைக்கப்படும் மரக்காணம் என பெயர் மாற்றி அழைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பல்லவ மன்னர்கள் ஆட்சியின் போது இந்த கோயிலில் சில கட்டுமான பணிகளை செய்து உள்ளதாக ஆராட்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கோயிலின் தல விருட்சம் வில்வம். இத்தனை வரலாற்று சிறப்புமிக்க இந்தகோயிலின் தெற்புரத்தில் பிச்சாடனார், தட்சணாமூர்த்தி சிலைகளும், மேற்கு பக்கம் விஷ்ணு சிலையும், வடக்குபக்கம் பிரம்மன் மற்றும் துர்க்கையும் அமைந்துள்ளது சிறப்பு அம்சங்கள் ஆகும். இது போல் இந்த கோயிலை தினமும் வந்து தரிசனம் செய்தால் நில சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். பூமி வாங்கவும், விற்கவும் பூமி சம்மந்தமான கோயில் என்பதால் இந்த கோயிலுக்கு பூமீஈஸ்வரர் என்று அழைகப்படுவதாக கூறுகின்றனர். இங்குள்ள சிவலிங்கம் தான்தோன்றி லிங்கம் என்று கூறுகின்றனர். இந்த கோயிலுக்கு கூறப்படும் சிறப்புக்கள் ஒருவர் தனது நிலத்தை விற்கவோ அல்லது வாங்கவோ நினைத்தால் இந்த கோயிலுக்கு வந்து இங்கு இருக்கும் சிவனை வணங்கிவிட்டு கோயிலில் இருந்து சிறிது மண் எடுத்து சென்று பிரச்சனை உடைய நிலத்தில் தூவினால் சில நாட்களிலேயே அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். இது போல் கோயிலின் உட்பகுதியில் கிரிஜாம்பாள் கோயில் அமைந்துள்ளது. மேலும் நவக்கிரகங்கள், காலபைரவர், முருகப்பெருமான், சித்தி வினாயகர் சிலைகளும் அமைந்து பக்தர்களுக்கு அருள் கொடுக்கின்றனர். கோயிலின் எதிர் புறத்தில் அழகிய தோற்றத்துடன் கூடிய கொடி மரம் மற்றும் நந்தீஸ்வரர் சிலையும் உள்ளது. மேலும் கோயிலின் எதிர் பக்கம் சூரியன், சந்திரன் இணைந்த நிலையில் தனியாக சிறிய கோயிலும் அழைந்துள்ளது தனி சிறப்பாகும். இவ்வளவு சிறப்பு மிக்க சிற்பங்கள் அனைத்தும் ராஜராஜ சோழன் காலத்து சிற்பங்கள் ஆகும். இந்த சிற்பங்கள் தற்போதும் சிறிதுகூட சேதம் அடையாமல் இருப்பது பெரிய விஷயம். இந்த கோயிலில் மாதம் இரண்டு முறை பிரதோஷ விழா செய்கின்றனர். இந்த பிரதோஷ விழாவில் மரக்காணம், புதுவை, சென்னை, செங்கல்பட்டு போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்க்ள் கலந்துகொள்கின்றனர். இதில் மாழ்கழி மாதத்தில் நடத்தப்படும் ஆரூத்தரா விழா மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.