Beauty Of Girls

Beauty Of Girls Cricket, Sports News, Movies, Album Collections, Entertainments, Political News. Fun.

19/08/2026

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போன்ற செயலாகும்.

சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2,500 வழங்குதல், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?

“மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்” என வீரவசனம் பேசிய முதலமைச்சர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்திலிருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்?

எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், வாகனம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.




#பகிர்வு

19/08/2026
கரண்ட் பில் அதிகமா வருது,ஆனா அதிகாரப்பூர்வமா மின் கட்டணம் கூடல..சொத்து வரி அதிகமா வந்ததா புகார்,ஆனா அதிகாரப்பூர்வமா கூடல...
14/08/2026

கரண்ட் பில் அதிகமா வருது,
ஆனா அதிகாரப்பூர்வமா மின் கட்டணம் கூடல..

சொத்து வரி அதிகமா வந்ததா புகார்,
ஆனா அதிகாரப்பூர்வமா கூடல..

குற்றச்சம்பவங்கள் அதிகமா நடக்குது,
ஆனா சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கு..

இருக்கு, ஆனா இல்லை...

#பகிர்வு

12/08/2026

"தப்பு தப்பா தமிழ் பேசாதனு சொன்னா "அது என்னோட ஷ்டைல்... கேட்டா கேளு இல்லேன்னா போ"னு சொல்றாரு உருட்டுக்கட்டை அமைச்சர். இன்று ஜோசியத்தின் மூலம் கேன்சர் குணப்படுத்தும் எம்.எல்.ஏ "மன்மத நன்றி" சொல்லி இருக்கிறார். அது அவருடைய ஷ்டைல்.

அதுபோல் கிரிக்கெட் கிரவுண்டில் மூக்கு பொடி நொறுக்கிய அமைச்சர், வால்வோ பஸ் வரலேனா வால்வோகாரன்கிட்ட போயி கேளு என கேட்ட அமைச்சர், "தமிழ்நாட்டு மேலே வாங்கோ... இங்கே இன்வெஸ்ட் பண்ணுங்கோ" என ரியல் எஸ்டேட் ரீல்ஸ் போட்ட அமைச்சர், 100கோடி நிலத்தை எல்லாம் சுருட்டிவிட்டு அப்பாவி கடைக்காரனிடம் முறுக்கு எக்ஸ்பைரிக்கு ஆதாரம் கேட்ட ஸ்டிரிக்ட் ஆஃபிசர் அமைச்சர், "உன் பேரு என்ன ராசா?" என ஒரு கிழவி கேட்டால் கூட, முன்னுரையாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு "உனக்கு டெகிரியம் இருந்தா தில்லூ இருந்தா நீ ஆம்பளன்னா..." என சவால்விடும் விளையாட்டுத்துறை அமைச்சர்... இப்படி பல தனித்தனி ஷ்டைலில் பல அமைச்சர்கள்.

எல்லாவற்றுக்கும் மேல், 'கிடக்குறதெல்லாம் கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனைல வை' என்ற ரேஞ்சில், மேற்பார்வையிட போகிறேன் என கோட்டு சூட்டுடன் கிளம்பி, ட்ரோன் எங்கே பறக்கிறது என 'மேலே பார்வையிட்டு' அதற்கேற்ப பெல்டை, கண்ணாடியை, பனியனை, சாக்ஸை எல்லாம் அட்ஜஸ்ட் செய்து ஷ்டைல் காட்டும் முதலமைச்சர்.

எனக்குத் தெரிந்து இந்திய வரலாற்றிலேயே, ஏன் இந்த வேர்ல்டுலயே மிகவும் ஷ்டைலான ஒரு மாநில அமைச்சரவை இதுதான். தமிழ் மக்களின் ஆழ்ந்த ஜனநாயகப் புரிதலை நினைத்தாலே புல்லரித்துப் பூரிக்கிறது. க்யூட் சி.எம்னா சும்ம்ம்மாவா........

-டான் அசோக்
ஆகஸ்ட் 11, 2026

#பகிர்வு

நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...அப்ப கரும்பு சா...
12/08/2026

நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??

இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...

அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??

இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...

அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??

இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...

அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???

வருவாய்த்துறை அமைச்சர்....

கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???

இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....

12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???

அவர்தான் நிதியமைச்சர்....

எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???

இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...

எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???

அவர்தான் எங்க அண்ணன் ..!!! இது தெரியாதா????

#பகிர்வு

இந்தப் பொண்ணு இப்ப எங்க இருக்காங்க நீ யாருக்காவது தெரியுமா? இந்த பொண்ணோட பெயர் இல்ல இந்த பொண்ணோட சமூக வலைதள முகவரி யாருக...
06/08/2026

இந்தப் பொண்ணு இப்ப எங்க இருக்காங்க நீ யாருக்காவது தெரியுமா?

இந்த பொண்ணோட பெயர் இல்ல இந்த பொண்ணோட சமூக வலைதள முகவரி யாருக்காவது தெரியுமா?

ஏனென்றால் தேர்தல் சமயத்தில் இந்த பெண் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்தோ இல்லை அரசின் பணத்திலிருந்தோ மகளிர் உதவி தொகை, மாணவர்களின் கல்வி உதவி தொகை கொடுக்க மாட்டார்.

தான் நடித்து சம்பாதித்த தன்னுடைய சொந்த பணத்திலிருந்து எல்லாத்தையும் வழங்குவார் என்று கூறியிருந்தார் ஆனால் இன்று வரை அவர் சொன்ன மாதிரி மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய் வழங்கவில்லை அதனால் இந்த பெண்ணை கண்டுபிடித்து அவரிடம் அவர் எப்போது வழங்குவார் என்று கேட்டுச் சொல்லும்படி யாராவது சொல்வீர்களா?

#பகிர்வு

🔥 💎 ஒரே நபர்… 17 கிலோ தங்கத்தை கொள்ளையடிக்கிறார்… அதுவும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையிலிருந்து…! 😱 🚨 💰🗓️ 2021 டிசம்பர் 16. ...
30/07/2026

🔥 💎 ஒரே நபர்… 17 கிலோ தங்கத்தை கொள்ளையடிக்கிறார்… அதுவும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையிலிருந்து…! 😱 🚨 💰

🗓️ 2021 டிசம்பர் 16. வேலூர் நகரின் பரபரப்பான காட்பாடி சாலை. 🛣️ வழக்கம்போல் காலை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையைத் திறக்க வந்த ஊழியர்கள் பார்த்த காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

⚡ 🏪 கடையின் காட்சிப்பெட்டிகளும், ஸ்ட்ராங் ரூமும் முழுவதுமாக காலியாக இருந்தன! 🧺 ❌

இந்த செய்தி காட்டுத்தீ போல நகரம் முழுவதும் பரவியது. 💥 📰 தகவலறிந்து வந்த வேலூர் போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர்! 👮‍♂️ 🚨 எந்த தடயமும் இல்லாமல் நடைபெற்ற மிகப்பெரிய கொள்ளை அது.

🕵️‍♂️ 🔍
நகரம் முழுவதும் இருந்த சுமார் 200 சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய 8 சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 📹 👨‍✈️ இறுதியில், ஒரு சிசிடிவி காட்சியில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற இளைஞர் ஒருவரை போலீசார் கண்டுபிடித்தனர். 🎒 🏃‍♂️ ஆனால் அவரது முகம் தெளிவாக பதிவாகவில்லை. 🎭

அந்த இளைஞரின் பெயர் திக்காராமன். 👤 வேலூர் அருகே உள்ள குச்சிப்பாளையம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த, ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர். 🏚️ பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

🧱 🔨 இதற்கு முன்பு இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் மடிக்கணினி திருட்டு வழக்குகளில் போலீசாரிடம் சிக்கியிருந்தார். 🏍️ 💻 🚔

அந்த தோல்விகளுக்குப் பிறகு அவர் ஒரு முடிவு எடுத்தார்: 💡 👀

> "இனி சிறிய திருட்டு வேண்டாம்… ஒரே ஒரு பெரிய கொள்ளையால் கோடீஸ்வரன் ஆக வேண்டும். அதிலும் போலீசாரிடம் சிக்கக் கூடாது." 👑 💰 🧠

அந்த சமயத்தில், தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் அவரை ஈர்த்தது. 💎 📺 பத்திரிகைகள், தொலைக்காட்சி செய்திகள், யூடியூப் வீடியோக்கள் மூலம் அந்த கொள்ளை குறித்து விரிவாக ஆய்வு செய்தார். 🗞️ 📱 🔍 திருடர்கள் எப்படி போலீசாரிடம் சிக்குகிறார்கள் என்பதையும் கவனித்தார். 👮‍♂️ ❌

🚨 அவரது கறாரான முடிவுகள்:

🚫 📱 மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது!
🚫 👥 யாரையும் கூட்டாளியாக சேர்க்கக் கூடாது!
👤 🎯 தனியாகவே கொள்ளையை நடத்த வேண்டும்!

இதற்காக கொள்ளைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே மொபைல் போன் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டார்! 🚫 📞

பின்னர் வேலூரிலிருந்த ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையை தனது இலக்காகத் தேர்வு செய்தார். 🎯 🏬

கொள்ளைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடத் தொடங்கினார். 🗓️ 🧠 போலி வாடிக்கையாளராக பலமுறை கடைக்குள் சென்று, சிசிடிவி கேமராக்கள் எங்கு உள்ளன, கதவுகள் எங்கே, எந்த சுவரை உடைத்தால் உள்ளே நுழையலாம் என்பதையெல்லாம் ஆராய்ந்தார். 🕵️‍♂️ 👁️

மேஸ்திரி என்பதால் கான்கிரீட் சுவர்களை எப்படித் துளையிடுவது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. 🧱 🔨 மற்ற அனைத்தையும் யூடியூப் மூலமாகவே கற்றுக்கொண்டார்! 📲 🎬

கேஸ் கட்டர் பயன்படுத்துவது எப்படி, சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்வது எப்படி, சத்தமின்றி சுவரைத் துளைப்பது எப்படி போன்ற அனைத்தையும் வீடியோக்கள் மூலம் கற்றுக்கொண்டார். 🛠️ 💨 பெரிய கருவிகளை விட சிறிய கருவிகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று முடிவு செய்தார். 🧰 ✨

தனது ஒல்லியான உடலமைப்புக்கு ஒரு அடி அகலமுள்ள துளை போதுமானது என்று கணக்கிட்டார். 📐 🚶‍♂️

கொள்ளைக்கு 10 நாட்களுக்கு முன்பே கடையின் பின்புற குப்பைகள் கொட்டும் பகுதியில் இருந்த சுவரை, தினமும் சிறிது சிறிதாக துளைக்கத் தொடங்கினார். 🧱 ⛏️ இவ்வளவு பெரிய கடையின் சுவரை 10 நாட்கள் துளைத்தும், பாதுகாப்பு பணியாளர்களுக்கு அது தெரியவில்லை! 🤫 🛑

இறுதியாக, 2021 டிசம்பர் 15 நள்ளிரவு வந்தது! 🌙 ⏳

இரவு 11 மணியளவில், அவர் உருவாக்கியிருந்த ஒரு அடி துளை வழியாக கடைக்குள் நுழைந்தார். 🕳️ 🥷

அவர் சிங்க முகமூடி 🦁, விக் 💇‍♂️, ஜாக்கெட் 🧥, கையுறை 🧤, காலுறை 🧦 என முழுவதுமாக அடையாளம் தெரியாத வகையில் வேடமிட்டிருந்தார்! 🎭 🕶️

உள்ளே நுழைந்ததும் பூனை போல அமைதியாக சுற்றுப்புறத்தை கவனித்தார். 🐾 😼 பின்னர் ஸ்ப்ரே பெயிண்ட் கொண்டு சுமார் 12 சிசிடிவி கேமராக்களின் காட்சியையும் மறைத்தார்! 🎨 📹

அதன்பிறகு இரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து செயல்பட்டு, தங்கம் மற்றும் வைர நகைகள் சேர்த்து 15.9 கிலோ (வைரங்களுடன் சேர்த்து சுமார் 16 கிலோ) நகைகளை தனது பையில் நிரப்பினார்! 💎 🪙 🎒

அதன்பிறகு வந்த அதே வழியாக வெளியேறினார். 🕳️ 🏃‍♂️

வெளியே வந்ததும் முகமூடியையும் ஜாக்கெட்டையும் கழற்றிவிட்டு, 16 கிலோ எடையுள்ள பையை அருகிலிருந்த ஒரு பெயிண்ட் கடை முன் சாதாரணமாக வைத்துவிட்டு, அருகிலிருந்த டீக்கடைக்கு சென்று அமைதியாக ஒரு டீ குடித்தார்! ☕ 🤫 🧘‍♂️

பின்னர் அந்தப் பையுடன் வேலூர் பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்றார். 🚌 🎒 முகத்தில் எந்த பதற்றமும் இல்லை! 😐 🆒

தனது சொந்த கிராமத்திற்குச் செல்லாமல், அருகிலிருந்த ஒடுக்கத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினார். 🚌 🛣️ அதிகாலை 5.30 முதல் 6 மணிக்குள் அங்கு சென்றடைந்தார். ⏰ 🌅

அங்கு சென்ற அவர், கிராம மக்களிடம் சுடுகாடு எங்கே என்று கேட்டார். 💀 🪦

> "நான் தீவிர சிவபக்தன். திருநீறு பூச சுடுகாட்டிலிருந்து சாம்பலும் மண்டை ஓடும் வேண்டும்" 🔱 🛕

என்று கூறி அவர்களை நம்ப வைத்தார்! 🧘‍♂️ ✨

டிசம்பர் 17 அன்று அந்த கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். 🏠 🔑 இரவு மற்றும் அதிகாலையில் அடிக்கடி சுடுகாட்டுக்குச் செல்வது கிராம மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. 🧐 👻 அவர்கள் அருகிலிருந்த வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்! 📞 🚔

போலீசார் வந்து திக்காராமனை பிடித்து விசாரித்தனர். 👮‍♂️ ❓

ஆனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டதால், ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சிறிதளவும் சந்தேகம் வரவில்லை! 🤪 🎭

அந்த நேரத்தில் அவரது கழுத்தில் ருத்ராட்ச மாலையும் கையில் காப்பும் இருந்தது. 📿 🪬

அது குறித்து கேட்டபோது, அருகிலுள்ள கோவிலில் கிடைத்தது என்று கூறினார். 🛕 🙏 சந்தேகப்பட எதுவும் இல்லாததால் அவரை விடுவித்தனர். 🚪 🏃‍♂️

ஆனால் விடுவதற்கு முன் போலீசார் அவரது புகைப்படத்தை எடுத்திருந்தனர்! 📸 📱

அந்த புகைப்படம் பின்னர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கை விசாரித்த வேலூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. 🏛️ 📑

இதுவே இந்த வழக்கின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது! 🔄 💥

புகைப்படத்தை பார்த்த ஜோஸ் ஆலுக்காஸ் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்! 😲 🚨

திக்காராமன் அணிந்திருந்த ருத்ராட்ச மாலை, நீண்ட நாட்களாக விற்கப்படாமல் கடையில் இருந்த அதே மாலையென்று அவர்கள் உடனே அடையாளம் கண்டனர்! 📿 💎 🔍

உடனடியாக போலீசார் அவரைக் கைது செய்தனர்! 🚔 🦹‍♂️ 🔒

7–8 டி.எஸ்.பி.க்கள் மாறிமாறி விசாரித்தும், ஆரம்பத்தில் அவர்களை மிகவும் திறமையாக ஏமாற்றினார். 👮‍♂️ 🗣️ 🎭

இறுதியில் கொள்ளையை தான்தான் செய்ததாக ஒப்புக்கொண்டாலும், தங்கம் தன்னிடம் இல்லை என்று பொய் கூறினார். 🤥 ❌

ஆனால் அவர் சுடுகாட்டில் அடிக்கடி சுற்றித் திரிந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அங்கு சோதனை நடத்தினர். 🪦 🔍 ⛏️

சுடுகாட்டில் மூன்று இடங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பைகளை கண்டுபிடித்தனர்! 🎒 🏺 💎 அதில் இருந்த 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன! 🪙 💎 ✨ 👑

வெறும் 22 வயது, பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த ஒரு கிராமத்து இளைஞர், யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்றுக்கொண்ட இந்த மிகப்பெரிய கொள்ளையை நிரூபிக்க, 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஐந்து நாட்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருந்தது! 👮‍♂️ 🚨 ⏱️ 🚔

எவ்வளவு துல்லியமாக திட்டமிட்டாலும், சட்டத்தின் பிடியிலிருந்து ஒரு குற்றவாளியும் நீண்ட காலம் தப்பிக்க முடியாது என்பதற்கான சிறந்த உதாரணமாக இந்த சம்பவம் இன்று வரை நினைவுகூரப்படுகிறது! ⚖️ 🏛️ 🔒 💯

---

💯👌
28/07/2026

💯👌

1960 ஆம் ஆண்டாக இருக்கும்என்று நினைக்கிறேன்...கீழக்கரை, சதக்கத்துன் ஜாரியாநடுநிலைப்பள்ளியில்,ஆறாம் வகுப்பில் நுழைந்த முத...
23/07/2026

1960 ஆம் ஆண்டாக இருக்கும்
என்று நினைக்கிறேன்...

கீழக்கரை, சதக்கத்துன் ஜாரியா
நடுநிலைப்பள்ளியில்,

ஆறாம் வகுப்பில் நுழைந்த முதல் நாள்.

வகுப்பறைக்கு புதிய ஆசிரியர்
இன்னும் வரவில்லை.

ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று
வந்த மகிழ்ச்சியில், வகுப்பில் இருக்கும்
நண்பர்கள் அனைவரும் எங்களின்
உணர்வுகளைப்பகிர்ந்து, விளையாடிக்
கொண்டு இருந்தோம்.

வகுப்பில் கொஞ்சம் தூரத்தில் இருக்கும்
ஒரு நண்பனை, நான் சப்தமாக "மாப்ளே"
என்று கூப்பிட்டதும், எங்கள் புதிய வகுப்பு
ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்ததும்
சரியாக ஒரே நேரத்தில் அமைந்தது.

ஆசிரியரைப்பார்த்ததும், எல்லோரும்
அவரவருக்கு பிடித்த இருக்கையில்
அமைதியாக அமர்ந்து கொண்டோம்.

ஆசிரியர் அவரின் இருக்கையில் அமராமல்,
நின்று கொண்டே,கோபமாக என்னைப்பார்த்து
"இங்கே வாடா" என்று அழைத்தார்.

ஒன்றும் புரியாமல் நான் எழுந்து
அவர் முன்னால் போய் நின்றேன்.

மேசையில் இருந்த பிரம்பை அவர் கையில்
எடுத்துக்கொண்டு, "கையை நீட்டுடா"
என்றார். உடனே நானும் கையை நீட்டினேன்.

சுளீர் சுளீர் என்று நாலைந்து அடிகள் அடித்தார்.

அதுநாள்வரை என் தாய், தந்தையரிடம் கூட
அடி வாங்காமல் வளர்ந்திருந்த எனக்கு,

முதன் முதலாக நான் வாங்கிய அந்த அடியின்
வலியும், என் நண்பர்களின் முன்னால்
இப்படி அடி வாங்குகிறேனே என்ற வேதனையும்,
எதற்காக என்னை அடித்தார் என்ற குழப்பமுமாக
என் வகுப்புத்தோழர்கள் பக்கம் திரும்பிப்பார்க்க,
எல்லோர் முகமும் வாடி குழம்பிப்போயிருந்தார்கள்.

அதே நேரத்தில், ஆசிரியரின் குரல்.
"பள்ளிக்கு வந்தால் ஒழுக்கம் வேண்டும்,
மாப்ளே, மச்சான் என்பதையெல்லாம்
தெருவோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்"
என்று கோபத்தோடு சொல்லி விட்டு,
அவர் நாற்காலியில் அமர்ந்து,
வருகைப்பதிவேட்டை திறக்கிறார்.

அப்பொழுது என் தோழர்களில் ஓரிருவர்
நான் மாப்ளே என்று கூப்பிட்ட நண்பனைப்
பார்த்தவாறு, "அவன் பேரே மாப்ளே தான் சார்"
என்று முணுமுணுக்கின்றனர்.

ஆனால், ஆசிரியர் எதையும் கண்டு கொள்ளாமல்
வருகைப்பதிவேட்டின்படி ஒவ்வொரு மாணவனையும்
பெயர் சொல்லி அழைக்க ஒவ்வொருவரும்
"Present Sir" என்று சொல்லிக்கொண்டிருக்க,

அடுத்து அவர் வாசித்த பெயர் "மாப்பிள்ளை ஆலிம்".
என் நண்பன் present Sir என்று சொல்ல,
ஒரு நொடிப்பொழுதில் ஆசிரியர் முகத்தில் ஒரு சலனம்.

தொடர்ந்து எல்லோர் பெயரையும் வாசித்து
முடித்து, வருகைப்பதிவேட்டை மூடி வைத்து விட்டு,
ஒன்றிரண்டு நிமிடங்கள் கண்களை மூடி அமைதியானார்.

கண்களைத்திறந்தவர்,
முஹைய்யதீன் அப்துல் காதிர் என்று
என்னைப்பார்த்து, இங்கே வாடா என்றார்.

மறுபடியும் ஏன் நம்மைக்கூப்பிடுகிறார்
என்ற குழப்பத்துடனே அவர் முன் போய் நின்றேன்.

மேசையிலிருந்த பிரம்பை எடுத்தவர்,
என் கையில் பிரம்பைக்கொடுத்துவிட்டு,
அவர் கையை நீட்டிக்கொண்டு,

"என்னை அடிடா" என்றார்.
நான் பிரமித்துப்போய்,
வேண்டாம் சார் என்பது
போல தலையாட்டிக்கொண்டு
அமைதியாக நின்றேன்.
"அடிடா, நான் உன்னை அடித்தது தவறு
என்பதை உணர்ந்து விட்டேன்.

நீ சாதாரணமாக அவன் பெயரைச்சொல்லி
கூப்பிட்டிருக்கிறாய், நான் அதைத்தவறாகப்
புரிந்து கொண்டு உனக்கு தண்டனை
கொடுத்தது தவறு".

என் தவறுக்கான தண்டனை எனக்கு வேண்டும்.
பாதிக்கப்பட்ட உன் கையால் எனக்கு தண்டனை
வேண்டும், அடிடா" என்றார்.

அவர் என்னை அடித்தபோது அழாமல் நின்ற
எனக்கு, அவர் சொன்ன வார்த்தைகளைக்கேட்டு
கண்கள் கலங்கின...அவர் கண்களும் கலங்கின.

மேசை மீது பிரம்பை வைத்துவிட்டு நின்றேன்.
அவர் முகபாவனையாலேயே போய் உட்கார் என்றார்.

என் வாழ்க்கையில் முதன் முதலாக
நான் வாங்கிய அடி, ஒரு பாடத்தையும் கற்பித்தது.

ஆம். நாம் ஒரு தவறு செய்துவிட்டால்,
அந்தத்தவறுக்காக நாம் வருந்த வேண்டும்.
அதோடு, நம் தவறால் பாதிக்கப்பட்டவரிடம்
நாம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் தான்,
இறைவன் நம்மை மன்னிப்பான்.

இந்தப்பாடத்தை எனக்கு நடத்தியவர்,
என் மரியாதைக்குரிய ஆசிரியர்,
உயர் திரு சுப்ரமண்யன் ஐயா அவர்கள்.

அவர் இப்பொழுது எங்கிருப்பார் என்று
எனக்குத்தெரியாது. ஆனாலும், எங்கேயாவது,
எப்போதாவது சந்தித்துவிடமாட்டேனா என்ற
ஏக்கம் மட்டும் என் மனதுக்குள் இருக்கிறது...

#பகிர்வு

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Of Girls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share