ஞானவேலு 's Rough Note

ஞானவேலு 's Rough Note மனதின் கிறுக்கல்கள்

12/01/2026

1960-களில் நம் முன் தலைமுறை முன்னெடுத்த அந்த வீரமிக்க மொழிப் போராட்ட வரலாற்றைத் திரையில் காண ஆவலோடு இருந்தேன். ஆனால், இன்று உலகம் முழுவதும் 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்களில் இருக்கைகள் வெறிச்சோடிக்கிடப்பதைக் காண்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

ஆயிரக்கணக்கான பக்கச்சார்பான கட்டுரைகள், திரைக்கு வெளியே திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலி விமர்சனங்கள், பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றது, ஏன்... போக்குவரத்து நெரிசல் என ஒரு முன்னணி நாளிதழ் பரப்பிய போலிச் செய்திகள் என எத்தனையோ 'வித்தைகள்' செய்தும் மக்கள் மனதை வெல்ல முடியவில்லை.

இதற்கான காரணம் மிகத் தெளிவானது: புனிதமான போராட்ட வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் லாபத்திற்காக (Party Agenda) பயன்படுத்த முயன்றதும், அந்த ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியுமே (Anti-incumbency) இந்த நிலைக்குக் காரணம். மக்கள் எதையும் திணிக்க விரும்புவதில்லை; அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தாங்கள் உண்மையிலேயே நேசிக்கும் ஒரு நாயகனைத் தேடுகிறார்கள்.

செயற்கையான விளம்பர வெளிச்சங்கள் ஒருபோதும் மக்களின் உண்மையான அன்பிற்கு ஈடாகாது. காலம் மாறிவிட்டது, மக்களின் ரசனையும் தேடலும் இப்போது ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது.

உண்மையான மக்கள் சக்தியின் முன்னால் எந்த அதிகார பலமும் எடுபடாது என்பதற்கு இந்த வெறிச்சோடிய தியேட்டர்களே சாட்சி.

"ஜனநாயகம் வெல்லும்... ஜனநாயகன் வெல்வான்!"

ரிஸ் கசிமிர் (Riz Casimir):இது ஒரு சுவிஸ் கறி. 1952 ஆம் ஆண்டு முதன்முதலில் சுவிஸ்ஸில் உள்ள ஹோட்டலில் பரிமாறப்பட்டது. பின...
16/01/2024

ரிஸ் கசிமிர் (Riz Casimir):

இது ஒரு சுவிஸ் கறி. 1952 ஆம் ஆண்டு முதன்முதலில் சுவிஸ்ஸில் உள்ள ஹோட்டலில் பரிமாறப்பட்டது. பின்பு மிகவும் பிரபலமான உணவாக மக்களால் கருதப்பட்டு அவர்களது ராணுவத்திலும் அது உணவகாக அந்த காலத்தில் சேர்க்கப்பட்டது. இது நம்ம ஊரு கறிக்குழம்பு போல இருப்பதனால் காஷ்மீர் என்ற பெயர் சேர்க்கப்பட்டு பின்பு கசிமிரானது.

ஆப்பிள், அன்னாசி, திராட்சை, சிக்கன் மற்றும் சிக்கன் ஸ்டாக் தான் இதில் பிரதானம்.

நேற்று வீட்டம்மா அவரது நண்பர் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுவிட்டதால் சமையலறையில் முயன்று செய்த சாகசம். அருமையான குழம்பு. எல்லாரும் ஒருமுறை முயற்சித்தால், மாதம் ஒருமுறை நம் உணவுபட்டியலில் இதற்கு தனி இடம் ஒதுக்கப்படலாம்.

#உன்_உணவு_உண்ண_உணவு.

நன்றி.

நமிதா மாரிமுத்து:உலகத் தலைவர்கள் பலர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரைக்கு நிகரானது சகோதரி நமிதாவின் இந்த பேச்சு. பிறப்ப...
12/10/2021

நமிதா மாரிமுத்து:

உலகத் தலைவர்கள் பலர் ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரைக்கு நிகரானது சகோதரி நமிதாவின் இந்த பேச்சு.

பிறப்பால் இன்னார் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்லும் இந்த சமூகத்தில், நீ எந்த குலத்தில் பிறந்தாலும், நீ மாறினாய் இல்லையில்லை உன் ஹார்மோன்கள் மாறினால் கூட ஏற்றுகொள்ளப் படமாட்டாய் என்பதை எந்த பிஞ்சு மனம்தான் ஏற்றுக்கொள்ளும்.

"மாறுங்க மாறுங்கனு சொல்றீங்க.... நாங்க மாறிட்டோம், இப்போ மாற வேண்டியது நீங்கதான்னு... " இந்த சகோதரி சொல்லும்போது மனம் தேம்பி அழுகிறது.

சாதாரண வாழ்க்கை வாழ்ரதற்கே இங்க சாவ வேண்டியிருக்குனு இவங்க சொல்லும்போது நாமெல்லாம் எப்பேர்பட்ட அதிர்ஷ்டசாலிகளா நம் வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கிறோம்னு நினைக்க தோணுது....

இந்த உரை எத்தனை தமிழ் மனக்கண்களை திறந்து விட்டுருக்கும்னு நினைக்கும்போது தேம்பிய நெஞ்சு கொஞ்சம் நிதானித்து நமிதாவை அள்ளி அணைத்து கன்னத்தில் ஒரு முத்தமும் வெற்றித்திலகமுமிட்டு கொள்வதில் பெருமை கொள்கிறது.

ஞானவேலு செல்வம்

...

லட்சுமி:சார்பட்டாவில் எனக்கு பிடித்த இன்னுமொரு முக்கியமான மற்றும் எதார்த்தமான பாத்திரப்படைப்பு லட்சுமி...வெற்றியின் மனைவ...
06/08/2021

லட்சுமி:

சார்பட்டாவில் எனக்கு பிடித்த இன்னுமொரு முக்கியமான மற்றும் எதார்த்தமான பாத்திரப்படைப்பு லட்சுமி...

வெற்றியின் மனைவி, ரங்கன் வாத்தியாரின் மருமகள்...

தன் கணவனின் கனவுகளுக்காக தன் இருப்பையும், தன் மீது வரும் வெறுப்பையும் துச்சமென கருதி, அவனுக்காக எல்லாரிடத்திலும் வரிந்து கட்டும் சமயத்தில் ஆகட்டும்...

கணவனிடம் காட்டும் அந்த வெக்கம் கலந்து காதலாகட்டும்...

கணவன் இன்னபிற தொழில் செய்து செல்வம் சேர்க்கும் போதும், மனசாட்சியாய் அவனை தட்டி கேட்பதாகட்டும்....

வாழ்ந்திருக்கிறார்.....

தன் கணவன் ஒரு சராசரி மனிதன் தான், எல்லோர் பார்வையிலும் அவன் காமன்மேனாக தெரிந்தாலும், என்றும் அவளுக்கு அவன்தான் சூப்பர்மேன்.

அந்த துணை போதும் எல்லா காமன்மேன்களும் ஒரு நாள் நிஜமான சூப்பர்மேனாக மாறி விண்ணில் பறக்க...

அதுவொன்றே போதும்.

லட்சுமிகளுக்கு துணை நிற்போம்.

டான்சிங் ரோசா ? பாக்ஸிங் ராசா ?கூண்டுக்குள்ள நீ வந்து நின்னா - உன் கால் தரைல படாம காத்துல பறக்குமே லேசா!நீ அடிக்கிற/வைக்...
03/08/2021

டான்சிங் ரோசா ? பாக்ஸிங் ராசா ?

கூண்டுக்குள்ள நீ வந்து நின்னா - உன்
கால் தரைல படாம காத்துல பறக்குமே லேசா!

நீ அடிக்கிற/வைக்கிற ஒவ்வொரு அடியும்! இதைவிட
சிறப்பா யாரும் செய்யமாட்டான் செம மாசா!

தம்மாங் குருத்தெல்லாம் சவடால் விடும்போது ஒத்துக்கிட்டு கோதாவுல இறங்கின கபிலன கிழிக்க பீசு பீசா!

கண்ண காட்டுனா போட்டுத்தள்ள ஆளிருந்தும்,
காட்டாம ரெண்டு ரவுண்டுலேயே நாக்கவுட்டான..
கபிலங்கிட்டே பெயிலானாலும் எங்க மனசில நீ எப்பவும் நிப்ப பாசா!

இன்னாதான் பெரிய ஆட்டக்காரனா இருந்தாலும் நம்ம பட ஹீரோ கிட்ட தோத்துதான் ஆவனும் நைசா!

ரங்கன் வாத்தியார் மனசுல மட்டும் இல்லாம எங்க மனசுலேயும் நீ மட்டும்தான் பவுசா.. இது ஒன்னும் இல்ல ஓவர் ப்ரைஸா!

உன்னை நய வஞ்சகத்தால் வீழ்ந்த கர்ணனோடு ஒப்பிட்டார்கள் - மூடர்கள்!
காரணம் நீ கௌரவர்களோடு இருக்கிறாயாம்...
ஆனால், உன்னை எதிர்த்து போராடுவது கௌரவ கொலைகளால் பிணங்களாகின்ற இனம் என்று அவர்கள் அறியாதது...
உன் எதிரிக்கு தன்மானத்த விட வேறஎதுவும் இல்ல பெருசா!

முட்கள் சுற்றி வாழ்க்கை இருந்தாலும், அந்த முள்ளால் எந்த சேதாரமுமாகாத இதழ்கள் கொண்டிருப்பதால் தான் அது ரோசா!

வேம்புலிகளோடு நீ பிறந்தாலும், இடியாப்ப பரம்பரையில் நீ வாழ்ந்தாலும், சுயத்தை மட்டும் நீ இழக்காமல் இருப்பதால்தான் எங்கள் மனதில் என்றும் நீ ராசா!

'பூ'வினா:"பூ"வையும் "பூவை"யும்கட்டும்போது கசங்காம புடிச்சிக்க....கட்டிவச்சா வாடாம பாத்துக்க....வாசம் தரும் "பூ"வையும் சு...
26/07/2021

'பூ'வினா:

"பூ"வையும் "பூவை"யும்

கட்டும்போது
கசங்காம புடிச்சிக்க....

கட்டிவச்சா
வாடாம பாத்துக்க....

வாசம் தரும் "பூ"வையும்

சுவாசம் தரும் "பூவை"யும்....

இம்மண்ணில் இருப்பதனால்தான்
"பூ"மி என்கிறோமோ?

கோதையில் "பூ" வைப்பதனால்தான்
"பூவை" என்கிறோமோ?

பால் பொருந்தி கூப்பிடுவதால் தான்
'வாடி' போகிறதோ "பூ"வும் "பூவை"யும்.?

செல்லமாய் "வாடா" என்று எதிர்ப்பாலோடு
கூப்பிட்டால் எதிர்பார்ப்புகள் கூடுமோ?

கண்கள்:கருப்பு வெள்ளை கேமரா தான்ஆனால் பதிவாவது அனைத்தும் வண்ண ஓவியங்கள்.
20/06/2021

கண்கள்:

கருப்பு வெள்ளை கேமரா தான்
ஆனால் பதிவாவது அனைத்தும் வண்ண ஓவியங்கள்.

கேள்வி?வேற்றுமை பலவுண்டுபச்சை பசேலென்று!வெள்ளை வெளேரென்று!வட்டமாய் ஒன்று!நீட்டமாய் ஒன்று!பேருக்கு வேரும் உண்டு.ஆனால் வேர...
07/06/2021

கேள்வி?

வேற்றுமை பலவுண்டு
பச்சை பசேலென்று!
வெள்ளை வெளேரென்று!
வட்டமாய் ஒன்று!
நீட்டமாய் ஒன்று!
பேருக்கு வேரும் உண்டு.
ஆனால் வேரூன்றத் தான் வழியில்லை எனக்கு.
என்
கண்ணீரை மறைப்பதற்குத்தான்
தண்ணீருடன் ஜாடிக்குள் அடைத்தீரோ?

போராளி பூக்கள்ஒவ்வொரு பூவுமே ஒருவிதத்தில் போராளி தான்.தன் தலை எப்போதும் கொய்யபடுபவையே என தெரிந்தும், அழகாய் பூத்து குலுங...
06/06/2021

போராளி பூக்கள்

ஒவ்வொரு பூவுமே ஒருவிதத்தில் போராளி தான்.
தன் தலை எப்போதும் கொய்யபடுபவையே என தெரிந்தும், அழகாய் பூத்து குலுங்குகின்றன.

காக்கப்பாஇப்பெல்லாம் காக்கா கத்தும்போது மனசு பதறுது...."காக்காவுக்கு சோறு வைக்க மறந்துடாதப்பா!" னு அம்மா சொன்னது நினைவில...
03/06/2021

காக்கப்பா

இப்பெல்லாம் காக்கா கத்தும்போது மனசு பதறுது....
"காக்காவுக்கு சோறு வைக்க மறந்துடாதப்பா!" னு அம்மா சொன்னது நினைவில் வந்தது கண்ணீர்துளிகளுடன்.

Address

Gold Coast, QLD

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஞானவேலு 's Rough Note posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share